சிறகடிக்க ஆசை: முத்துவின் சந்தோஷத்தை கெடுக்க சிட்டி செய்த வேலை.. மாஸ் காட்டிய பாட்டி.. மீனா முடிவு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முதல் திருமண நாளை சந்தோஷமாக கொண்டாடும் முத்து மற்றும் மீனா இருவருக்கும் சண்டையை ஏற்படுத்தி விடுவதற்காக சத்யாவை வைத்து சிட்டி பிளான் போடுகிறார்.
அந்த வகையில் தன்னுடைய கல்யாண நாளை மறந்துவிட்டாரே என்ற கோபத்தில் மீனா முத்துவை திட்ட அதற்கு முத்து நான் மனோஜ் பணத்தை தூக்கிட்டு போன நாளை மறக்க முடியாது. அன்னைக்கு நமக்கு திருமணம் நடந்ததை ஏற்றுக் கொள்கிற மனநிலையில் இருவரும் இல்லை. அதற்கு பிறகு நாம் இருவரும் மனம் ஒத்து போய் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்த நாளைத்தான் நான் என்னுடைய திருமண நாளாக நினைவில் வைத்திருக்கிறேன் என்று சொல்லி மீனாவை சமாதானப்படுத்தி இருந்தார்.

பிறகு திருமண நாளுக்காக மீனாவுக்கு தான் வாங்கிட்டு வந்த மோதிரத்தை கொடுத்து குடும்பத்தை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். ஆனால் இதை பார்த்து விஜயா கோபமாகி கொண்டிருக்கும்போது வீட்டிற்குள் அதிரடியாக முத்துவின் பாட்டி என்ட்ரி கொடுத்து இருக்கிறார். முத்துவின் பாட்டியை பார்த்ததும் முத்து சந்தோஷத்தில் இருக்கும் போது மீனாவின் அம்மா முதல் திருமண நாளுக்கு சீர்வரிசை செய்ய வந்திருக்கிறார்.
அதோடு தான் வாங்கிட்டு வந்த மோதிரம் துணிமணிகளை கொடுத்து விட்டு போயிருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் முத்து மற்றும் மீனாவின் திருமண நாள் கொண்டாட்டம் வீட்டில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. பாட்டியோடு சந்தோஷமாக முத்துமீனா புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் ஜெயிலிலிருந்து ஜாமீனில் சிட்டி வெளியே வர சிட்டியை மாலை போட்டு வரவேற்பதற்காக சத்தியாவும் அவருடைய நண்பர்களும் போய் இருக்கின்றனர். அப்போது சிட்டி இன்னைக்கு உங்க அக்கா மாமாவுக்கு கல்யாணம் நாள் தானே? நீ என்ன இங்க வந்திருக்க? என்று கேட்க அதற்கு சத்யா நான் அங்க போனா தேவையில்லாத பிரச்சனை தான் வரும் என்று சொல்ல,
சிட்டி சத்தியாவிடம் பணத்தை கொடுத்து மாமன் மச்சான் உறவு எல்லாம் அவ்வளவு லேசு பட்டது கிடையாது. தட புடலா ஏதாவது அவங்களுக்கு வாங்கி கொடு என்று பணத்தை கொடுத்து அனுப்புகிறார். அப்போது சிட்டியின் நண்பர்கள் அந்த முத்துவும் அவன் பொண்டாட்டியும் உன்னை ஜெயிலுக்கு அனுப்புனாங்க. நீ அவங்களுக்கு வாங்கி கொடுப்பதற்காக பணம் கொடுத்து அனுப்புற என்று கேட்க,
அதற்கு சத்தியா அந்த வீட்டுக்கு போனா பிரச்சனை பெருசாகும். அந்த முத்து அவனை அடிப்பான். அதனால அவங்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள பிரச்சனை பெருசா வரும். அவங்க கல்யாண நாளை சந்தோஷமா நடக்கக்கூடாது என்று சொல்கிறார். அதுபோல முத்துவும் மீனாவும் கேக் வெட்டி சந்தோஷமாக கல்யாணம் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது அங்கு சத்யா வந்து நின்றதும் முத்து கோபத்தில் முறைக்கிறார். மீனா அவரை தடுத்து நிறுத்துகிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
ஆனால் சிட்டி எதிர்பார்த்தபடி இப்போது சண்டை எதுவும் நடக்காது என்றுதான் தெரிகிறது. காரணம் முத்துவின் பாட்டி வீட்டில் இருக்கிறார் அதுபோல ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் சிட்டிக்காக வந்த சத்யாவை பார்த்தபோது கூட முத்து சத்யாவை அடிக்கவில்லை. அதனால் இப்போது வீட்டிற்கு வந்திருக்கும் இடத்தில் அடிக்க மாட்டார் என்று தெரிகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications