சிறகடிக்க ஆசை: பழசை கிளறி மனோஜ், விஜயாவை கதறவிட்ட மீனா.. கடைசியில் முத்து இப்படி பண்ணிட்டாரு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் மே இருபதாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் மீனா மற்றும் முத்துவின் திருமண நாளில் இவர்கள் இருவரை பற்றி வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் தங்களுடைய கருத்தை சொல்ல மீனா முத்து இவ்வளவு கோபப்படுவதற்கு சின்ன வயதில் என்ன நடந்தது என்பதை பற்றி கேட்க விஜயாவும் மனோஜும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் கேக் வெட்டியதை தொடர்ந்து ரவி முத்து மீனாக்கு கோவிலில் நடந்த திருமண போட்டோவை கிப்டாக கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து ஸ்ருதி முத்துவிற்கும் மீனாவிற்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது அவர்களைப் பற்றி இந்த வீட்டில் இருக்கிறவங்க என்ன நினைக்கிறீங்க என்பதை பற்றி எல்லோரும் சொல்லுங்க என்று கேமராவை ஆன் செய்ய முதலில் மனோஜ் பேசுகிறார்.

அப்போது இவங்க ரெண்டு பேரும் எனக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் என்னால தான் இவனுக்கு கல்யாணம் முடிந்தது. வேலை இல்லாம குடிச்சிட்டு சுத்திட்டு இருந்த இவனுக்கு யாரு பொண்ணு தருவாங்க? என்று பேச அதை கேட்டு ரோகிணியும் விஜயாவும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு ரோகிணியை பேச சொல்ல ரோகிணி ஒரு புருனை திருத்தி மாற்றும் பவர் பொண்டாட்டி கிட்ட தான் இருக்கு. ஒரு வருஷமாகியும் முத்துவை மீனா மாற்ற முயற்சி பண்ணி இருக்கலாம். அடுத்த வருஷமாவது முத்து மாறனும் என்று நினைக்கிறேன் என்று சொல்கிறார்.
அதை தொடர்ந்து ஸ்ருதி பேச, எனக்கு இந்த வீட்டில மீனாதான் சப்போர்ட். மீனா இல்லனா எங்க கல்யாணம் நடந்திருக்குமான்னு கூட தெரியல. ஆனா முத்து மாதிரி ஒருவரோட எப்படித்தான் லைஃபை ஷேர் பண்ணிட்டு போறாங்களோ. ரொம்ப கஷ்டம் தான். ஆனா மீனா ரொம்ப ஸ்ட்ராங்கான லேடி. அதனால அதான் ஒரு வருஷத்தை அவர்களால் கடக்க முடிந்தது என்று பாராட்டுகிறார்.

பிறகு ரவி பேசும்போது, பர்ஃபெக்டான ஜோடி இவங்கதான். நான் பொறந்ததிலிருந்து பார்த்த முத்துக்கும் கடந்த ஒரு வருஷமா பாக்குற முத்துவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று பாராட்டுகிறார். அதை தொடர்ந்து அண்ணாமலை பேசுகிறார். அவர், இவர்களுக்கு கல்யாணமானது ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் தான். அதனால் இவங்க வாழ்க்கை எப்படி இருக்க போகுதுன்னு பயந்துட்டு இருந்தேன். இப்போ ரெண்டு பேரும் நல்லா ஒருத்தர ஒருத்தர் புரிந்து சந்தோசமா வாழுறாங்க. இதே மாதிரி எப்பவும் வாழனும் என்று வாழ்த்துகிறார்.
அதைத்தொடர்ந்து விஜயாவை பேச சொல்ல, இவங்களை பற்றி பேச என்ன இருக்கு? ஜாடிக்கு ஏற்ற முடி மாதிரி தான் இரண்டு பேருமே அவ்வளவு பேசுறாங்க. அவன் முழம் பேசினால் இவ ஜான் பேசுவா.. இவ கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வர வரைக்கும் இந்த தெருவுல இந்த வீட்ட பத்தி யாருக்குமே தெரியாது. இவ வந்த பிறகு தான் வாரத்துக்கு ஒரு பிரச்சனை... ஆனா எவ்வளவு பிரச்சனை வந்தாலும் இவ அதை எல்லாம் எதிர்த்து நிற்கதானே செய்றா..! என்று தன்னையும் மீறி மீனாவை பெருமையாகவும் பேசி விடுகிறார்.

அதோடு ஸ்கூல் பசங்க மாதிரி சண்டை போட்டுப்பாங்க அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் காந்தம் மாதிரி ஒட்டிக்கு வாங்க என்று சொல்ல அதை பார்த்து ரோகினி அதிர்ச்சி அடைகிறார். பிறகு முத்து பேசும்போது ஆரம்பத்துல எனக்கும் மீனாக்கும் செட் ஆகல. எங்க வீட்டில நானும் ஒரு பொருளா தான் இருந்தேன். நானும் ஒரு மனுஷன்னு அடிக்கடி எங்க அப்பா சொல்லித்தான் எனக்கு தெரியும்.
ஆனால் மீனா வந்த பிறகு தான் என்னையே எனக்கு பிடித்தது. ஜல்லிக்கட்டில் அடங்காத காளை ஒருத்தருக்கு மட்டும் அடங்கும். அந்த மாதிரி தான் என்னையும் மீனா மாத்திட்டா என்று வெக்கப்பட்டு சொல்கிறார். அதை தொடர்ந்து மீனா பேச மீனா எனக்கும் ஆரம்பத்துல என் வாழ்க்கையை நினைத்து பயம் இருந்துச்சு. ஆனா என் அம்மாவும் மாமாவும் சேர்ந்து எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்காங்க.

இவரு ஒண்ணும் கெட்டவர் கிடையாது. இவருக்கு பாதியிலிருந்து தான் இவ்வளவு கோபம் வந்திருக்கு. அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு என்று பேச ஆரம்பிக்க மனோஜ், முத்து, விஜயா மற்றும் அண்ணாமலையின் முகம் மாறுகிறது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பதை இதுவரைக்கும் அவர் என்கிட்ட சொன்னதே இல்ல. என்னை அவர் முழு மனைவியா ஏத்துக்கலையா என்று தெரியவில்லை என்று சொல்ல மனோஜும் விஜயாவும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றனர்.
அதை ரோகினி கவனிக்கிறார். அப்போது எல்லோரும் சீரியஸாக இருப்பதை பார்த்ததும் முத்து அப்போ முக்கா பொண்டாட்டியாவே இரு என்றும் எல்லாரும் போசுனது போதும் ஆட்டத்தை கலைங்க, இன்னும் அத்தை பேசவில்லை என்று சொல்ல மீனாவின் அம்மா பேச எழுந்து நிற்கும்போது சத்யா வீட்டு வாசலில் வந்து நிற்க அதை பார்த்து முத்து கோபப்படுகிறார். மீனா முத்துவின் கையை பிடித்து நிறுத்துகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications