சிறகடிக்க ஆசை: ஷோரும் திறந்ததும் விஜயா செய்த சித்து வேலை! பாட்டி வைத்த ஆப்பு.. மனோஜ்க்கு இது தேவையா?
சென்னை: விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 24ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அந்த வகையில் மனோஜ் தன்னுடைய ஷோரூம் அம்மா மூலம் திறந்து வைக்க முதல் நாளே பிரச்சனை ஏற்படுகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கடை திறப்பு விழாவிற்கு குடும்பத்தோடு எல்லோரும் வந்து இருக்கின்றனர். அப்போது அண்ணாமலை விஜயாவிடம் நல்ல நேரம் வந்துவிட்டது ரிப்பனை வெட்டி கடையை திறந்து வைக்க சொல்ல, அதற்கு விஜயா முக்கியமான ஆள் வரணும் அதுக்காக காத்துட்டு இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஸ்ருதியின் அம்மா வர விஜயா ஓடி சென்று அவரை வரவேற்கிறார்.

பிறகு ரிப்பனை வெட்டி கடையை திறக்க அண்ணாமலை மீனாவிடம், உங்க வீட்டில் இருந்து யாரும் வரலையா? என்று கேட்க, விஜயா அவங்க வராதது நல்லது தான். வந்திருந்தால் இதையெல்லாம் பார்த்து பொறாமை தான் படுவாங்க என்று அவமானப்படுத்துகிறார். அப்போது அண்ணாமலை விஜயாவை திட்ட மீனா அவங்க வந்து அவமானப்பட வேண்டாம்னு தான் கூப்பிடல என்று சொல்கிறார்.
பிறகு முத்து மிக்ஸி பார்க்கணும்னு சொன்னியே வா போகலாம் என்று கூட்டிட்டு போகிறார். இன்னொரு பக்கத்தில் ஸ்ருதியின் அம்மா ஏசி பார்த்துக்கொண்டு இருக்கிறார். பிறகு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏசியை வாங்குகிறார். மீனா மிக்ஸியை எடுத்துக்கொண்டு வர அதை பார்த்த விஜயா எங்க போற என்று கேட்க பொருளுக்கு பில் போடணும் என்று சொல்ல,
அதற்கு விஜயா ஸ்ருதியின் அம்மா வாங்கிய ஏசி ஒன்றரை லட்சம் அதனால அதற்குத்தான் முதலில் பில் போடணும் என்று சொல்ல மனோஜும் ஸ்ருதியின் அம்மாவுக்கு பில்லு போட்டு கொடுக்கிறார். அப்போது பாட்டி மீனாவை கூட்டிட்டு வந்து பில்லு போட சொல்கிறார்.
அதற்கு பிறகு பாட்டி விஜயாவை கூட்டிட்டு போய் எதுக்கு மீனாவை அவமானப்படுத்துற மாதிரி பேசுற, அவளை பத்தி ஏதாவது பேசுனா நான் அவளுக்கு சப்போர்ட்டா தான் வந்து நிற்பேன் என்று திட்டி விடுகிறார். அடுத்ததாக ஏற்கனவே இருந்த கடையின் ஓனர் அங்கிருந்த தொழிலாளர்களை கூப்பிட்டு இவர்கள் இந்த கடையில் பல வருடங்களாக வேலை பாக்குறாங்க. இவங்களை நீங்க தொடர்ந்து வேலைக்கு வச்சுக்கோங்க. இவங்களுக்கு நிறைய கஸ்டமர் தெரியும் என்று டாக்குமெண்ட்டை கொடுத்துவிட்டு போகிறார்.
இதைத்தொடர்ந்து மனோஜ் கடையில் வேலை செய்யும் பழைய தொழிலாளர்களை வரச் சொல்லி இனிமே உங்களுக்கு இங்கே வேலை இல்லை என்று வெளியே போக சொல்கிறார். எனக்கு புது ரத்தம் தான் வேணும். நீங்க எல்லாம் பழசா இருக்கீங்க என்று சொல்லி வெளியே அனுப்ப அதற்கு அவர்கள் ஒரு முதலாளியா எப்படி இருக்கணும்னு கூட தெரியல. இவர் அனுபவிக்க போறதை நாம பார்க்க தான போறோம் என்று சாபம் விட்டு போகிறார்கள்.
அப்போதும் மனோஜ் நடவடிக்கையை பார்த்து ரோகிணி சூப்பர் என்று பாராட்டுகிறார். பிறகு கடை முடிந்தது மனோஜ், ரோகிணி வீட்டிற்கு வர மனோஜ் ரொம்ப டயர்டா இருக்கு தூங்கணும் என்று சொல்ல விஜயா கொஞ்சம் வெளியே நில்லுங்க என்று சொல்லி ஆரத்தி கரைச்சிட்டு வந்து திருஷ்டி சுத்தி போட்டால் எல்லாம் சரியா போய்விடும் என்று உள்ளே போக இதை பார்த்து மனோஜ், ரோகிணி சந்தோஷப்படுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications