சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை! விஜயா கொடுத்த அதிர்ச்சி! மாஸ் காட்டிய மீனா.. பாவம் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial May 2nd Episode ) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே இரண்டாம் தேதிக்கான எபிசோடில், ரோகிணியின் சூழ்ச்சிகளை முத்துவும் மீனாவும் கண்டுபிடிக்கின்றனர். அதே நேரத்தில் முதல் முறையாக விஜயா நியாயமாக பேசி இருக்கிறார். அதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடு (Siragadikka Aasai serial today episode) ஆரம்பத்தில் மனோஜ் ரோகினியால் தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தேன். அவள் தான் எனக்காக ரொம்ப ரிஸ்க் எடுத்து அந்த பைனான்சியரை கேஸை வாபஸ் வாங்க வைத்திருக்கிறாள் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்க, இதை கேட்டு கடுப்பான விஜயா மனோஜ் வாயில் அடித்து இனிமே அவளை பத்தி பெருமையா பேசினா அவ்வளவுதான். அவளை மீண்டும் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு மட்டும் நினைக்காத, அவ இந்த வீட்டுக்குள் வந்தால் நடக்கிறதே வேற, அவளுடைய நாடகம் எனக்கு தெரியும் என்று பேசுகிறார்.

விஜயா மாற்றம்
இதை எல்லாம் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். காரணம் மனோஜ் பேச்சைக் கேட்டு விஜயாவும் மனம் மாறுவார் என்று குடும்பத்தினர் நினைத்து இருக்கிறார்கள். ஆனால் விஜயா தன்னுடைய முடிவில் ஸ்ட்ராங்காக இருப்பதை பார்த்து முத்து ஸ்ருதி எல்லோருமே ஆச்சரியப்பட்டு பேசுகின்றனர். பிறகு அண்ணாமலை அந்த ரோகினி லேசுப்பட்டவ இல்ல, நம்மை சுத்தி நடக்குற விஷயங்களை பார்க்கும் போது ஏதோ தப்பா நடக்கிற மாதிரி இருக்கு கவனமா இரு என்று சொல்கிறார்.

மீனா ஐடியா
அதைத் தொடர்ந்து மீனாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கும்போது ரோகிணிக்கு பின்னாடி சிந்தாமணி தான் இருக்கிறார் என்று கண்டுபிடிக்கின்றனர். பிறகு சிந்தாமணிக்கு எதிராக பூக்கட்டுறவர்கள் கொடுத்த கம்ப்ளைன்ட் வைத்து தான் ஒரு புது ஐடியா பண்ண போறேன் என்று மீனா கிளம்பி போகிறார். சித்தாமணி வீட்டிற்கு போன மீனா உனக்கு எதிராக எல்லாரும் கம்ப்ளைன்ட் தந்து இருக்காங்க நீ மரியாதையா உன்கிட்ட பணம் கொடுத்தவங்களோட பத்திரத்தை கொடுத்துரு இல்லன்னா இதை கொண்டுட்டு போய் கமிஷனர் ஆபீஸில் கம்ப்ளைன்ட் பண்ணுவேன் என்று மிரட்டுகிறார்.

மனோஜ் மனமாற்றம்
முதலில் சிந்தாமணி பயப்படவில்லை என்றாலும் பிறகு யோசித்துப் பார்த்து பத்திரத்தை தருகிறேன் என்று எடுத்துக் கொடுக்கிறார். ஆனால் மீனாவை இனி சும்மா விடக்கூடாது என்று பிளான் போடுகிறார். அதைத் தொடர்ந்து மனோஜ் ஷோரூமில் ரோகிணி பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய நண்பர் ரோகிணி மனோஜை ஏமாற்றிய விஷயங்களை எல்லாம் நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்.
ரோகிணி கேட்ட கேள்வி
ஆனாலும் மனோஜ் தான் ரோகிணியை மன்னித்து விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி அங்கு வருகிறார்.பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது இனி உன் கூட என்னால சேர்ந்து வாழ முடியுமா? நானும் வீட்டுக்கு வந்து விடவா? என்று ரோகிணி கேட்க, அதற்கு மனோஜ் வீட்டில் நடந்த விஷயத்தை சொல்கிறார். அதைக்கேட்டு ரோகிணி இப்பவும் நீ என்னை காதலிக்கிறாயா? என் மேல உனக்கு உண்மையான பாசம் இருக்கா என்று கேட்க மனோஜ் யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications