ஹாஸ்பிடலில் க்ரிஷை பார்த்து கதறி அழுத ரோகிணி.. முத்துவிடம் மாட்டியாச்சு.. மீனா சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 31ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் க்ரிஷ்க்கு கண்ணில் அடிபட்டு இருக்கிறது என்ற உண்மை தெரிந்ததும் ரோகிணி ஹாஸ்பிட்டலுக்கு வர, அங்கே முத்து மற்றும் மீனா இருக்கின்றனர். அவர்களிடம் ரோகிணி மாட்டினாரா? இல்லையா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் ஹாஸ்பிடலில் வந்து இருக்க டாக்டர் மீனாவிற்கு மாத்திரை கொடுத்து மூன்று நாட்கள் ரெஸ்ட் எடுக்க சொல்லி அனுப்பி வைக்கிறார். அந்த நேரத்தில் அவர்கள் ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வரும்போது ரோகிணியின் அம்மா கிரிஷை கூட்டிக்கொண்டு அழுது கொண்டே வர அதை பார்த்து இருவரும் ஷாக் ஆகிறார்கள்.

கிருஷுக்கு என்ன ஆச்சு என்று இருவரும் கேட்க விளையாட்டிட்டு இருக்கும்போது வண்டிக்காரன் ஏத்திட்டு போயிட்டதாக சொல்கின்றனர். பிறகு டாக்டர் எமர்ஜென்சி வார்டுக்கு கூட்டிட்டு சென்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். முத்துவும் மீனாவும் இவர்களோடு காத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் ரோகிணியின் அம்மா ரோகிணிக்கு போன் பண்ணும் போது மனோஜ் பக்கத்தில் இருக்க மனோஜ் உனக்கு தான் போன் வருது யாருன்னு கேட்டதும் ரோகிணியும் நம்பரை பார்த்து ஷாக் ஆகிறார்.
பிறகு என்னுடைய கிளைன்ட் என்று சொல்லி சமாளித்து தனியாக போய் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது உன்னை தான் கால் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்கேன் என்று கோபப்படுகிறார். அப்போது கிரிஷ் ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறேன் என்று அழுது கொண்டே சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். அவனுக்கு என்ன ஆச்சு என்று ரோகிணி கேட்க நடந்த விஷயத்தை அம்மா சொன்னதும் உடனே நான் கிளம்பி வரேன் என்று சொல்ல,
நீ இப்ப வர வேண்டாம் இங்கே முத்துவும், மீனாவும் இருக்காங்க என்று சொல்ல, அவங்க எப்படி அங்கே வந்தாங்க என்று ரோகிணி கேட்டதும் அதற்கு அவருடைய அம்மா அதுதான் மீனாவுக்கு உடம்பு சரி இல்லையாமே அதனால ஹாஸ்பிடலுக்கு வந்திருக்காங்க என்று சொல்ல ரோகிணி அழுதுகொண்டே அதிர்ச்சி அடைகிறார் .
அப்போது மகனை பார்க்க வேண்டும் என்று ரோகிணி கடை விளம்பரத்திற்காக சில பொருட்களை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறார். நாங்கள் புதுசா ஹோம் அப்ளையன்ஸ் கடை திறந்திருக்கோம் ஹாஸ்பிடலுக்கு தேவையான பொருட்களை எங்க கடையில் வாங்குங்க. இப்போதைக்கு இந்த பொருளை ஃப்ரீயா தருவோம் என்று சொல்லி எல்லா குழந்தைகள் வார்டிலும் வைத்துக் கொண்டே வர க்ரிஷ் இருக்கும் ரூமிருக்கு வரும்போது முத்துமீனா வெளியே வர அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சி ஆகிறார்.
மீனா நீங்க என்ன இங்க என்று கேட்க, நான் பிசினஸ் விஷயமா ஹாஸ்பிடல்ல டீலிங் பேச வந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறார். ரோகிணியின் ஐடியாவை கேட்ட முத்து இது கூட நல்லா தான் இருக்கு நீ வைக்கிற பொருளோட என்னோட விசிட்டிங் கார்டையும் வை கார் தேவைப்படுறவங்க எனக்கு போன் பண்ணுவாங்க என்று சொல்லி காட்டை கொடுக்கிறார். பிறகு நீங்க கிளம்பிட்டீங்களா? என்று ரோகிணி கேட்க, இல்ல கேன்டீன் போய்ட்டு வரோம்.
கிரிஷ் கூட யாரும் இல்ல. அவங்க பாட்டியும் ரொம்ப பயப்படுறாங்க. நாங்க டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பாத்துட்டு தான் கிளம்புவோம் என்று சொல்லி கேண்டின் போகின்றனர். அடுத்ததாக கிருஷ் ரூமிற்க்கு வந்த ரோகிணி மகனை பார்த்து அழுது புலம்புகிறார். உன் விஷயத்துல என்னால எதுவுமே பண்ண முடியவில்லை என்று கண்கலங்க அவரது அம்மா சீக்கிரம் உன் வீட்டில் கிரிஷை பற்றி பேசு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
பிறகு ரோகிணி வெளியே வர மீனா அவரை பார்த்துவிட்டு உங்க வேலை முடிஞ்சிடுச்சா? என்று கேட்க, அதற்கு ரோகிணி நீங்க கிளம்பலையா என்று திரும்பவும் கேட்க நாங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு போறோம் என்று முத்துவும் மீனாவும் சொல்கின்றனர். பிறகு முத்து துபாய்ல அப்படி அந்த பொண்ணுக்கு என்னதான் வேலை குழந்தையும் அம்மாவையும் விட்டுட்டு அப்படி வெளிநாட்டில் சம்பாதிக்க என்ன அவசியம் இருக்கு? அந்த பொண்ணு மட்டும் வந்தா அப்படியே நாலு அடி கொடுக்கணும் என்று கோபப்பட அது எதுக்கு உங்களுக்கு என்று ரோகினி கேள்வி கேட்டு சிக்கிக் கொள்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications