சிறகடிக்க ஆசை: சிட்டியால் போலீஸிடம் சிக்கும் முத்து.. மீனாவால் வந்த விபரீதம்.. ஸ்ருதி சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே மூன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் மீனா சிட்டியை அவமானப்படுத்தி இருந்தால் சிட்டி முத்துவை குடிகாரனாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட அதனால் முத்து பிரச்சனையில் சிக்குகிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கார் வாங்கிய பிறகு முத்து ஏரியா தலைவர் அவருடைய நண்பரை ஒரு பாரில் டிராப் செய்கிறார். அவர்கள் முத்துவை குடிக்க கூப்பிட முத்து வேலை டைமில் குடிக்க மாட்டேன். பகல் நேரத்தில் குடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து விடுகிறார். இதனால் அவரை வெளியே வெயிட் பண்ண சொல்லிட்டு இவர்கள் உள்ளே போகின்றனர்.

Siragadikka aasai serial May 3rd promo and episode full update

மறுபக்கத்தில் ரவி ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வரும் ஸ்ருதி நாம இப்பவே குழந்தை பெத்துக்கலாம் என்று அடம் பிடிக்க, அதற்கு அதிர்ச்சி அடையும் ரவி ஸ்ருதியை தனியா கூட்டிட்டு போய் உனக்கு என்ன ஆச்சு என்று விசாரிக்க அதற்கு ஒரு இங்கிலீஷ் மூவிக்கு தமிழ் டப்பிங் பேச போயிருந்தேன். அதுல குழந்தைங்க எல்லாம் க்யூட்டா இருந்தாங்க. அதை பார்த்ததும் எனக்கு குழந்தைக்கு ஆசை வந்துருச்சு என்று சொல்கிறார்.

அதற்கு ரவி குழந்தை பெத்துக்கிட்டா மட்டும் போதாது. நல்லபடியா வளர்க்கணும். அதோட நேரத்தை செலவிடனும் என்று சொல்ல, நீ ஒரு நாள் பார்த்துக்க நான் ஒரு நாள் பார்த்துக்கிறேன், என்றெல்லாம் பேச அதற்கு ரவி ஒரு வழியாக ஸ்ருதியை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். பிறகு ஹோட்டல் ஓனர் ரவியை கூப்பிட்டு நீ இப்பதான் கேரியரை ஸ்டார்ட் பண்ணி இருக்க இந்த நேரத்தில் குழந்தை எல்லாம் தேவையானு யோசித்து முடிவு எடு என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial May 3rd promo and episode full update

அதைத் தொடர்ந்து முத்துவுக்கு மகாபலிபுரத்திற்கு சவாரிக்கு ஒரு போன் கால் வருகிறது. முத்து இருபது நிமிஷத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி தலைவரிடம் விசயத்தை சொல்லிவிட்டு கிளம்புவதற்காக பாருக்குள் வருகிறார். அப்போது முத்துவின் நண்பர் மட்டும் சரக்கு அடித்துக் கொண்டிருக்க தலைவர் எங்கே என்று கேட்க பாத்ரூம் போய் இருப்பதாக சொல்கிறார்.

பிறகு தலைவர் வந்ததும் சரக்கு வாங்கிட்டு வர சொல்ல முத்துவின் நம்பர் போய் வாங்கிட்டு வந்து கொடுக்க அதை திறக்க கொடுக்க சொல்ல முத்து. திறந்து கொடுக்கிறார் இதை எல்லாம் அங்கிருக்கும் சிட்டி வீடியோவாக எடுக்கிறார். தலைவர் முத்துவை குடிக்க சொல்ல முத்து கார் ஓட்டனும் என்று குடிக்க மறுத்து விடுகிறார். அப்போது சைடிஷ் ஆவது சாப்பிடு என்று தலைவர் வற்புறுத்த பக்கத்தில் இருக்கும் சேரில் உட்கார்ந்து சிக்கனை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு பாட்டிலை பார்த்துக் கொண்டிருக்க முத்து குடிப்பது போன்று சிட்டி வீடியோ எடுத்து விடுகிறார்.

Siragadikka aasai serial May 3rd promo and episode full update

பிறகு முத்து வெளியே கிளம்பும்போது எதிரே வந்தவர் மோதி விட நெஞ்சை பிடித்துக் கொண்டு போதையில் நடப்பது போலவே நடக்க பிறகு இந்த வீடியோவை முத்துவின் ஆட்கள் இந்த மாதிரி டிரைவரை நம்பி கார்ல ஏறாதுங்க என்று சமூக வலைத்தளத்தில் வீடியோவை பரப்பி விடுகின்றனர். அந்த வீடியோவை எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அம்மா வீட்டுக்கு வந்த மீனா அம்மாவுக்கு டீ போட்டு கொடுத்து கொண்டிருக்கிறார்.

அப்போது வீட்டுக்கு வந்த சிட்டி கையில் புது போன் வைத்திருப்பதை பார்த்து மீனா சிட்டி கூட சேராத என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சிட்டி அனுப்பி வீடியோவை பார்த்து சத்தியா அப்போ குடிகாரன் கூட சேரவா? என்று வீடியோவை காட்ட மீனா அதிர்ச்சியாகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+