சிறகடிக்க ஆசை: சதி செய்த ஸ்ருதியின் அப்பா.. முத்து காரை பிடுங்கிய போலீஸ்.. ரவி கேட்ட சரியான கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே நான்காம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். அதில் சிட்டி செய்த சதியால் முத்துவை சமூக வலைதளத்தில் எல்லோரும் அசிங்கப்படுத்தி பேச அதை பார்த்து மீனா அதிர்ச்சி ஆகிறார். மறுபக்கத்தில் ஸ்ருதியின் அப்பாவும் முத்துவுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சத்யா முத்துவின் வீடியோவை மீனாவிடம் காட்டி, இப்ப சொல்லு யாரு குடிகாரன்? என்று கேள்வி கேட்க மீனா அதிர்ச்சியாகிறார். அதோடு சத்தியம் வீடியோவிற்கு தப்பு தப்பாக வந்த கமெண்ட்களை படித்து உன் புருஷன் தான் ஊரே காரி துப்புவது என்று சொல்ல மீனா கோபமாக எழுந்து போகிறார்.

Siragadikka aasai serial May 4th promo and episode full update

அப்போது முத்து கஸ்டமரை ஏற்றுக்கொண்டு காரில் சென்று கொண்டிருக்கும்போது அவர்களும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு காரை ஓரம் கட்ட சொல்லி இறங்கி விடுகிறார்கள். தொடர்ந்து ஆர்டர் வந்தாலும் சிறிது நேரத்தில் அவர்களும் போன் செய்து கேன்சல் செய்து விடுகிறார்கள். மறுபக்கத்தில் வீட்டிற்கு வந்த மனோஜ் இந்த வீடியோவை போட்டு காட்டி முத்து வேலை சமயத்தில் குடிப்பதாக எல்லோரிடமும் சொல்ல,

அதற்கு ரவி டியூட்டி சமயத்தில் அவன் குடிக்கவே மாட்டான் என்று சப்போர்ட்டாகவே பேசுகிறார். அதற்கு மனோஜ் அவன் குடிச்சிட்டு தானே நைட்டு வரும்போது கார் ஓட்டிட்டு தானே வருவான் என்று கேட்கிறார். அதற்கு கோபமான விஜயா இந்த முத்து என்ன காரியம் பண்ணிட்டு இருக்கான். அதனால நம்ம குடும்ப மானம் போகப்போகுது.

சொந்தக்காரங்க எல்லாரும் நம்மள அவமானப்படுத்த போறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஸ்ருதி அப்பா போன் பண்ண அவருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சுட்டா? என்று ஷாக் ஆகிவிட்டார். பிறகு விஜயாவிற்கு பார்வதி போன் செய்து விஷயத்தை கேட்கிறார். அதற்கு ரோகிணி மனோஜ் செஞ்ச சின்ன சின்ன விஷயத்தை வீட்டில் பேசி பிரச்சனை பண்ணி பேசிய முத்து இப்ப இவ்வளவு பெரிய விஷயம் பண்ணி இருக்கிறார் என்று அண்ணாமலையிடம் கேள்வி கேட்கிறார்.

அந்த வீடியோவை பார்த்ததும் ஸ்ருதி அப்பா இதுதான் முத்துவை பழிவாங்க சரியான நேரம் என்று கமிஷனருக்கு போன் செய்து இந்த மாதிரி ஆட்களை கார் ஓட்ட நீங்க அனுமதிக்க கூடாது என்று ஏத்தி விடுகிறார். உடனே முத்து காரில் வரும்போது அவருடைய காரை வழிமறிக்கும் போலீஸ் அவருடைய காரை லாக் செய்து லைசென்ஸ் பிடுங்கிக் கொண்டு காரை எடுத்து சென்று விடுகின்றனர். அப்போது முத்து நான் குடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இப்படியாக இந்த எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+