சிறகடிக்க ஆசை: மீனாவுக்காக சிந்தாமணியை கதறவிட்ட விஜயா.. பார்வதி செய்த நல்ல செயல்.. செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே ஐந்தாம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவுக்காக சிந்தாமணியை விஜயா கதறவிட்டு இருக்கிறார். தன்னுடைய மருமகளுக்காக முதல் முறையாக விஜயா செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் விஜயாவை தன்னுடைய அறையை விட்டு வெளியே போக சொல்லி துரத்தி இருந்தார். இதனால் விஜயா இன்று அழுது கொண்டு இருந்தார். இத்தனை நாட்களாக பார்த்து பார்த்து வளர்த்த தன்னுடைய மகன் தன்னையே அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டான். தன்னுடைய மனைவிக்காக என்னை திட்டி விட்டான் என்று இன்றைய எபிசோடில் அழுது கொண்டிருந்தார்.

Siragadikka aasai serial vijay tv

செம சம்பவம்

அதே நேரத்தில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிந்தாமணி விஜயாவின் டான்ஸ் கிளாஸுக்கு வருகிறார். அப்போது விஜயாவும் பார்வதியும் டீ குடித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு வந்ததும் சிந்தாமணி உங்க பையன் எங்க வீட்டுக்கு பொய்யா இன்கம் டேக்ஸ் ஆபிஸர்னு வந்து எல்லா பணத்தையும் எடுத்துட்டு போயிட்டாரு என்று கோபப்பட, அதற்கு பார்வதி அவங்க பணத்தை மட்டும் எடுத்துட்டு போனான்னு சொல்லுங்க என்று சொல்கிறார்.

பார்வதி கேட்ட கேள்வி

அதற்கு சிந்தாமணி அதான் அந்தப் பணம் போச்சு என்று சொல்ல, விஜயா பூ கட்டுறவ பணத்தை நீங்க ஆளை வச்சு திருடினீங்க. புருஷன் பொண்டாட்டி பணம் போச்சுன்னா சும்மா இருப்பானா? என்று கோபப்பட்டு பேச, அதற்கு சிந்தாமணி என்ன மாஸ்டர் நீங்களா இப்படி பேசுறீங்க என்று கேட்கிறார். அதற்கு விஜயா அதுவேறங்க அதுக்காக அவ கையில் அடிபடுற அளவுக்கு பண்ணுவீங்களா? இந்த மாதிரி ரவுடித்தனத்தை எல்லாம் என்னால பாத்துட்டு இருக்க முடியாது.

அதிர்ச்சியில் சிந்தாமணி

போதும் இனிமே நீங்க இங்க டான்ஸ் கத்துக்க வர வேண்டாம் என்று வெளியே அனுப்புகிறார். அதற்கு சிந்தாமணி ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க என்று கேட்க, நீங்க எல்லை மீறி போயிட்டு இருக்கீங்க. இனிமே அவ தொழிலை கெடுக்கிற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. அவளுக்கு நீங்க எந்த பிரச்சனையும் பண்ணாதீங்க. அது உங்களுக்கு நல்லது இல்லை என்று சொல்ல அதைக்கேட்டு சிந்தாமணி அதிர்ச்சியில் இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

விஜயா பேசிய வார்த்தை

இத்தனை நாட்களாக மீனாவின் பிசினஸை கெடுக்க வேண்டும் என்பதற்காக சிந்தாமணியுடன் விஜயா தான் பிளான் போட்டு கொடுத்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது மீனாவிற்கு அடிபட்டு அவர் சமையல் செய்ய முடியாமல் போனபோது விஜயா சமையல் செய்ததால் விஜயாவுக்கு இந்த ஞானோதயம் வந்துவிட்டதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் பார்வதியும் விஜயாவை திட்டி இருந்தார்.

விஜயாவின் மாற்றம்

அந்த சிந்தாமணி உன்னுடைய மருமக வேலையை கெடுக்கிறதுக்காக தான் உன்னுடன் உறவு கொண்டாடி இருக்கிறாங்க. அவங்க டான்ஸ் கிளாஸுக்கு வருவது சரியில்ல நீ பார்த்து நடந்துக்கு என்று மிரட்டி இருந்தார். அதுபோல சிந்தாமணி தான் ஆள் வைத்து மீனாவிடம் இருந்து பணத்தை பிடுங்கினது என்று தெரிந்ததும் அண்ணாமலை இனி அந்த சிந்தாமணி உடன் சகவாசம் வச்சிகாதே என்று மிரட்டி இருந்தார். இதனால் இந்த விஜயாவிற்கு இப்போது புத்தி வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

Siragadikka aasai serial vijay tv

சந்தேகம் இருக்கு

எது எப்படியோ இப்போது தான் விஜயா உருப்படியாக முடிவெடுத்து இருக்கிறார் இதுவும் நிஜமா அல்லது கனவா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் நமக்கு இதில் இன்னொரு சந்தேகமும் வருகிறது. அதாவது சிந்தாமணிக்கு மீனா பணத்தை கொண்டு வருவது பற்றி விஜயா தான் போன் பண்ணி சொன்னார். ஆனால் அது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது இப்போது பார்வதி வீட்டிற்கு வந்து சிந்தாமணி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விஜயா நம்ம மாட்டிக்க கூடாது என்பதற்காக இப்படி பேசுகிறாரா? என்ற சந்தேகமும் இருக்கிறது.

உங்க கருத்து

இதுவரைக்கும் மீனாவிற்கு யாரும் சப்போர்ட் செய்ய மாட்டாங்க என்று திமிரோடு இருந்த சிந்தாமணிக்கு இப்போது விஜய் ஆட்டம் காட்டி இருக்கிறார். இன்று விஜயா நடந்து கொண்ட விதம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது இது நடிப்பு என்று தோன்றுகிறதா நண்பர்களே? ஆனாலும் சிந்தாமணியிடம் விஜயா பேசியதை பார்த்து பார்வதி ரியாக்ஷன் அழகாக இருந்தது அதை கவனிச்சீங்களா? பக்கத்து வீட்டுக்காரங்க சண்டை போடும்போது எப்படி ஆர்வமா எல்லோரும் பார்த்துட்டு இருப்பாங்களோ அதேபோல விஜயாவும் சிந்தாமணியும் சண்டை போடும்போது பார்வதி ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+