சிறகடிக்க ஆசை: முத்துக்காக விஜயாவை அசிங்கப்படுத்திய மீனா.. குண்டை தூக்கி போட்ட ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 6ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இந்த வாரம் முழுக்க முத்து மற்றும் மீனா ரசிகர்களுக்கு சோகம் தான் கிடைக்கப் போகிறது என்று தெரிகிறது. முத்துவுக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் சூழ்ச்சியில் அவர் எப்படி வெளியே வரப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து குறித்து வந்த வீடியோவை வைத்து வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, அண்ணாமலை உடைந்து போய் இருக்கிறார். அப்போது மீனா அமைதியாக வீட்டிற்குள் இருக்க அதை பார்த்து விஜயா வாடி இங்கே என்று கூப்பிட்டு உன் புருஷன் பண்ண வேலையால இந்த குடும்பமே தலை குனிஞ்சு நிக்குது. இப்போ உனக்கு குளுகுளுன்னு இருக்குமே? பொண்டாட்டினா புருஷனை திருத்தணும்.

ஆனா நீ அவன் இப்படியே இருந்தா தான் நீ நினைக்கிறதெல்லாம் நடக்கும் என்று நினைக்கிறா என்று திட்டுகிறார். அதோடு இனிமே உன்னை பூ கட்டுறவ என்று யாரும் சொல்ல மாட்டாங்க. குடிகாரன் பொண்டாட்டினு தான் சொல்லுவாங்க என்று சொல்ல, அப்போ மீனா உங்களையும் குடிகார அம்மா என்று தானே சொல்லுவாங்க என்று பதில் கொடுக்கிறார். கூடவே, எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் ஆச்சு. ஆனா பொறந்ததுல இருந்து நீங்க தானே அவர வளர்த்தீங்க அவருக்கு நல்ல புத்தி சொல்லி வளர்க்க வேண்டியது தானே என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு விஜயா நான் வளர்த்த ரெண்டு பிள்ளைங்க நல்லபடியா தான் இருக்கு என்று பதில் சொல்ல, அண்ணாமலை போதும் நிறுத்து உன் வாய் தான் அவனை இப்படி எல்லாம் மாத்திடுச்சு. எல்லாத்துக்கும் காரணம் நீ தான் என்று திட்டுகிறார். இப்போது ஸ்ருதியின் அம்மா விஜயாவிற்க்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை பற்றி பேசி அவமானப்படுத்துவது போல பேசுகிறார். உடனே ஸ்ருதி ஃபோனை வாங்கி இங்கே எல்லாரும் அப்சட்ல இருக்காங்க நீ போனை வைமா என்று திட்டி வைத்து விடுகிறார்.

பிறகு முத்து வீட்டுக்கு வந்து அப்பா காரை தூக்கிட்டு போய்ட்டாங்கப்பா என்று சொல்ல, விஜயா குடிச்சிட்டு வண்டியை ஓட்டுனா தூக்கிட்டு தான் போவாங்க என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை உன்னால இந்த குடும்பமானமே போயிடுச்சு என்று திட்ட, அப்போது மனோஜ் நீ பண்ண வேலையை தான் ஊரே பார்த்து சிரிக்கிறது என்று சொல்ல அதற்கு முத்து நான் குடிக்கலடா சொன்ன நம்பு என்று மனோஜ் அடிக்க பாரு அண்ணாமலை குடிச்சதும் இல்லாம ரவுடித்தனம் பண்ணுறியா என்று அடிக்க கை ஓங்கி நிறுத்துகிறார்.
அடுத்த கட்டத்தில் மீனாவின் கையை பிடித்துக் கொண்டு முத்து சத்தியமா நான் குடிக்கல மீனா என்று சொல்ல மீனாவும் அதை நம்ப மறுக்க, குடிக்கவில்லை என்று நடந்து காட்ட அதற்கு மனோஜ் குடிச்சிட்டு நடந்துகிட்டு இருக்கான் என்று நக்கல் செய்கிறார். அதற்கு ரவி அவன் குடிக்கல ஸ்மெல் எல்லாம் வரல என்று சொல்ல, ஸ்மெல் வராமல் இருக்க ஏதாவது சாப்பிட்டு இருப்பான் என்று மனோஜ் சொல்கிறார்.

இதையெல்லாம் பார்த்து அண்ணாமலை நிம்மதியே இல்லாமல் போச்சு என்னமோ பண்ணுங்க வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். அடுத்து ரோகிணி நாங்க வாங்க இருந்த காரை இன்னொருத்தருக்கு கைமாத்திவிட்டு அந்த கமிஷனில் தானே குடிச்சீங்க? இனிமே எங்க விஷயத்திலும் தலைவிடாதீங்க என்று சொல்லி மிரட்டி விட்டு உள்ளே போகிறார்.
அதை தொடர்ந்து விஜயா ரெண்டு பேரும் நீங்களா வீட்டை விட்டு வெளியே போயிடுங்க என்று சொல்கிறார். மீனா கிச்சனுக்குள் போக முத்து பின்னாடியே சென்று அவரிடம் பேச மீனா முத்துவை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிரேம்ஜியுடன் காதலா? 40 வயது வரை அவர் கல்யாணம் பண்ணாத காரணம்.. ஓபனாக பேசிய சோனா! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications