சிறகடிக்க ஆசை மீனா வாழ்க்கையில் இத்தனை சோகங்களா? மதுரை பொண்ணு.. சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட அவலம்!
சென்னை: விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகையின் பெயர் கோமதி பிரியா . இவர் பற்றிய தகவல்கள் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
கோமதி பிரியா எந்த ஊரை சார்ந்தவர்? அவர் எப்படி சினிமாவிற்குள் அறிமுகமானார் என்பது பற்றி பலரும் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தியில் சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவின் பயோகிராபி பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சாபக்கேடு உண்டு அதாவது சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி இங்கு தமிழ் நடிகைகள் நடிகர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் பிற மொழியை சார்ந்தவர்களுக்கும் தான் தமிழ் சீரியல்களிலும் சினிமாக்களிலும் அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அதையும் மக்கள் விரும்பி வரவேற்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு சில தமிழ் நடிகைகள் சினிமா மற்றும் சின்னத் திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கோமதி பிரியா. இவர் இப்போது சின்னத்திரை ரசிகர்களின் மனதில் மீனாவாக இடம் பிடித்திருக்கிறார். இவருடைய சாந்தமான முகம் பலரையும் கவர்ந்திருக்கிறது. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவருடைய சொந்த ஊர் மதுரை தானாம்.

கோமதி பிரியா மதுரையில் 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் பிறந்திருக்கிறார். மதுரையில் நடுத்தர குடும்பத்தை சார்ந்த கோமதி பிரியா விற்கு ஒரு தம்பி ஒரு தங்கச்சி இருக்கிறார்களாம். அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சியோடு சாதாரண குடும்பத்தில் வளர்ந்து வந்த கோமதி பிரியா ஸ்கூல் படிக்கும்போதே நன்றாக படிப்பாராம். அப்போதே தான் சுதந்திரமாக இருக்கணும் யாரையும் நம்பி இருக்கக் கூடாது என்று நினைத்து தான் படிப்பிற்கு தேவையான பணத்தை சின்ன சின்ன வேலைகள் பார்த்து சம்பாதித்து இருக்கிறார்.
வீட்டிற்கு மூத்த பெண்ணாக இருப்பதால் இவர் இன்னும் அதிகமாக படிக்கணும் நல்ல வேலைக்கு போகணும் குடும்பத்தை நல்லா பாத்துக்கணும் என்ற எண்ணத்தில் இருந்த கோமதி பிரியாவிற்கு அவருடைய ஆசிரியர்கள்தான் ஸ்காலர்ஷிப் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஸ்காலர்ஷிப்பில் ஸ்கூல் படித்து முடித்த கோமதி பிரியா நல்ல மார்க் வாங்கி இருந்ததாராம். காலேஜில் அவருடைய ஷேர்மேன் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இவ்வளவு அதிகமான மதிப்பெண் வாங்கி இருக்கிறாரே என்று படிப்புக்கு உதவி செய்து சென்னையில் ஒரு வேலையும் வாங்கி கொடுத்து இருக்கிறார்.

சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் கோமதி பிரியாவிற்கு அங்கு தொடர்ந்து வேலை பார்ப்பதற்கு பிடிக்கவில்லையாம். மெஷின் மாதிரி ஒரே வேலையை செய்யணுமா என்று இவர் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் எப்படியாவது சினிமாவில் நுழைய வேண்டும் என்று இவர் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் சின்ன சின்ன மாடலின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல் இவர் அதில் செய்து கொண்டிருக்கும் போது தான் இவருக்கு ஒரு சில சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மாடலிங் செய்து கொண்டே சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இவருக்கு இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாததால் மாடலிங்கில் இருந்து விலகி முழு நேரமாக சினிமா வாய்ப்பு தேடுவதற்காக முயற்சி எடுத்து இருக்கிறார். அப்போது இவர் ஆடிஷனுக்கு போகும் இடத்தில் எல்லாம் இந்த பொண்ணை பார்க்க பாவமா இருக்கு, எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்குமான்னு தெரியலையே என்று எல்லோரும் யோசிப்பாங்களாம்.

பல இடங்களில் அவமானங்கள் பட்டு இதை எல்லாம் கண்டு தான் சோர்ந்து விடக்கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டுதான் அடுத்தடுத்து முயற்சிகளை எடுத்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் இவருக்கு நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் சின்ன ஒரு கேரக்டர் கிடைத்திருக்கிறது. அந்த குட்டியான ரோலை கூட விட்டு விடக்கூடாது என்று இவர் அதிலும் நடித்து இருக்கிறார். அதை தொடர்ந்து வர்மா திரைப்படத்திலும் ஒரு சின்ன ரோல் கிடைக்க அதையும் செய்து முடித்த கோமதி பிரியாவிற்கு கலர்ஸ் தமிழில் ஓவியா சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications