சிறகடிக்க ஆசை: போடினு எதிர்த்து பேசிய மீனா.. கன்னத்தில் அறைந்த விஜயா.. இப்போதான் சுயரூபமே தெரிகிறது!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் இந்த சீரியலில் மாமியார் விஜயாவும் மருமகள் மீனாவும் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியலில் இவர்கள் இருவரும் எதிரும் புதிதாக இருந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டிலும் நாங்கள் இப்படித்தான் என்பதை இப்போது வெளியிட்ட வீடியோவில் நிரூபித்திருக்கிறார்கள். அந்த வகையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அது போல இந்த சீரியலில் எந்த அளவிற்கு மோதலும் பிரச்சனைகளும் இருக்கிறதோ அதே அளவிற்கு என்டர்டைன்மென்ட்டும் இந்த சீரியலில் இருப்பதால் சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் இந்த சீரியலில் ஒரு உண்மை வெளிபட்டுக் கொண்டே இருக்கிறது ஏற்கனவே மனோஜ் வேலைக்கு போகாத உண்மை குடும்பத்திற்கு தெரிய வந்திருந்தது. அதை தொடர்ந்து ரோகிணி பியூட்டி பார்லரில் விஜயா பெயரை மாற்றி இருப்பது மட்டும்தான் விஜயாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதற்கு தையா தக்கா வென்று ரோகிணியை பாடாய் படுத்தி எடுத்துவிட்டார். இனி பியூட்டி பார்லரை ரோகிணி விற்றுவிட்டார் என்று தெரிந்தால் என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அதே நேரத்தில் ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு கிடையாது என்றும் அவருக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது என்பதும் தெரிந்தால் விஜயா என்ன செய்வார் என்பது நேற்றைய எபிசோடு பார்த்த ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். அதே நேரத்தில் இந்த சீரியலில் அடுத்தடுத்து பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்புதான் மனோஜாக நடிக்கும் ஸ்ரீதேவா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.
அதை தொடர்ந்து இன்று முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்துக்கு பிறந்தநாள் சீரியல் குழுவினர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் அடிக்கடி செய்யும் லூட்டிகள் வீடியோவாக வெளியிடுவது போலத்தான் இப்போது விஜயாவும் இவரும் சேர்ந்து எடுத்த காமெடி ரீல்ஸ் ஒன்று பகிர்ந்து இருக்கிறார்கள்.
அதில் நடிகை பானுப்பிரியாவும் மனோரமாவும் பேசிய காமெடிக்கு இவர்கள் இருவரும் ரீல்ஸ் செய்திருக்கிறார்கள். அதில் விஜயாவை மீனா போடி என்று சொல்ல அதற்கு விஜயா மீனாவை கன்னத்தில் ஓங்கி அறைவது போன்று இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதை பார்த்தால் முத்து விஜயாவை என்ன சொல்லப் போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
பிரேம்ஜியுடன் காதலா? 40 வயது வரை அவர் கல்யாணம் பண்ணாத காரணம்.. ஓபனாக பேசிய சோனா! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications