சிறகடிக்க ஆசை: கர்ப்பமாக இருக்கும் மீனா! இனி விஜயா வீட்டில் கலவரம் தானா? அடுத்து நிகழப்போவது இதுதான்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை கோமதிப்பிரியா நடித்து வருகிறார். இவர் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே இந்த சீரியலில் முத்துவின் பாட்டி, வந்திருக்கும் மூன்று மருமகள்களில் யார் முதலாவதாக கர்ப்பமாக மாறுகிறார்களோ அவர்களுக்கு தன்னுடைய கிராமத்தில் இருக்கும் சொத்தை கொடுக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் ரசிகர்கள் எல்லோரும் மீனாதான் கர்ப்பமாக மாறுவார் என்று கூறி வந்தனர். ஆனால் இப்போது மீனாவின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் இது என்ன புது டுவிஸ்ட் என்று கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் பல மாதங்கள் ஆகவே பிடித்துக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த வாரம் கூட இந்த சீரியல் டிஆர்பியில் டாப் 10 இடங்களில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இது எதிர்பாராத வளர்ச்சியாக இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலின் கதையும் விறுவிறுப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே மனோஜ் பற்றிய ரகசியங்கள் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. அதை தொடர்ந்து ரோகினி பியூட்டி பார்லரில் பெயர் மாற்றிய விஷயமும் தெரிய வந்துவிட்டது. இப்படியான நிலையில் முத்து மீனாவிற்குள் நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மீனா பூ கட்டி கிடைத்த லாபத்தில் முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்து இருக்கிறார்.
இப்படியாக கதை சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அடுத்ததாக ஸ்ருதியின் அம்மா முத்துவை ஸ்ருதி மற்றும் ரோகினியின் தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் வைத்து அவமானப்படுத்தி ரவி மற்றும் ஸ்ருதியை தங்களுடைய வீட்டோடு வைத்துக்கொள்ள பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இதில் முத்து இவர்கள் சொன்னது போல நடந்து கொள்வாரா? குடும்பம் பிரிபடுமா? இல்லையா? என்பது ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது.

இப்படியான நிலையில் மீனா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால் அது இந்த சீரியலில் எடுத்த புகைப்படம் கிடையாது. சிறகடிக்க ஆசை சீரியல் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் கோமதி பிரியா தமிழிலும் மலையாளத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல சில ஷார்ட்பிலிம்களிலும் நடித்திருக்கிறார். அப்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் முத்துப்பாண்டி கேரக்டரில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சத்யாவோடு கோமதி பிரியா நடித்த ஒரு வீடியோ கிளிப்ஸ் தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் உள்ள புகைப்படங்கள் தான் இந்த புகைப்படங்கள். ஆனால் ரசிகர்கள் இந்த சீரியலில் மீனா கர்ப்பமாக இருப்பது போன்று காட்சிகள் வரப்போகிறதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அப்படியான கட்சிகள் இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இப்போது வெளியான புகைப்படங்கள் தமிழ் சிறகடிக்க ஆசை சீரியலுக்கான புகைப்படங்கள் கிடையாது. அதுபோல ஸ்ருதி மற்றும் ரோகிணியின் பங்க்ஷனில் ரோகிணியின் அப்பா கலந்து கொள்வாரா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
காரணம் விஜயா இந்த தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் ரோகிணி அப்பா கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும் என்று கட்டளை போட்டு இருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய மாமாவாக நடிப்பதற்கு கறிக்கடைக்காரரை களம் இறக்கியது போல இப்போது ரோகிணி யாரை இறக்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுகிறது. ஆனால் நேற்று இந்த சீரியலில் முத்துவாக நடிக்கும் நடிகர் வெற்றி வசந்த தன்னுடைய பிறந்தநாள் வீடியோ வெளியிட்டு இருந்ததில் ஸ்ருதி மற்றும் ரோகிணியின் தாலி பிரித்து கொடுக்கும் பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது.

ஆனால் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்ட எல்லா பிரபலங்களும் அந்த வீடியோவில் இருக்கிறார்கள். ஆனால் அதில் புதியதாக ரோகிணி அப்பா கேரக்டரில் நடிக்கும் நபரை காணவில்லை. இதனால் ரோகிணி இந்த முறையும் தன்னுடைய அப்பா பிசினஸில் பிஸியாக இருக்கிறார் என்று ஏமாற்றி விடுவாரோ என்ற குழப்பமும் இருக்கிறது. அதுபோல அண்ணாமலை குடும்பத்திலிருந்து ரவியும் ஸ்ருதியும் பிரிந்து போக போகிறார்களா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications