என்னை மன்னிச்சிடுங்க! இனிமே இதை தான் பண்ண போறேன்.. திடீர் வீடியோ வெளியிட்ட சிறகடிக்க ஆசை முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடிகர் வெற்றி வசந்த் நடித்து வருகிறார். இவர் திடீரென்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் லைவில் வந்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதோடு அந்த லைவில் ரசிகர்களிடம் மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதில் கடந்த வாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் 300 எபிசோடுகளை எட்டி சாதனை படைத்திருக்கும் நிலையில் தங்களுக்கு இத்தனை நாட்களாக ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வெற்றி வசந்த இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

Siragadikka aasai serial Muthu Actor Vetri Vasanth apologized to his fans

அதில் வெற்றி வசந்த் பேசுகையில், உங்களுடைய சப்போர்ட்டும் ஆதரவும் இருந்ததால்தான் மட்டும் தான் இவ்வளவு தூரம் சிறகடிக்க ஆசை சீரியலின் கதை வந்திருக்கிறது. இந்த சீரியல் எல்லோருக்குமே பிடிச்சிருக்கு அதுல எங்க எனக்கு ரொம்பவே சந்தோஷம்தான். இது எல்லாத்துக்கும் முக்கிய காரணம் டைரக்டர் சார் தான். அப்புறம் எங்களோட குரு சம்பத் குமார் சார்.

அப்புறம் ஒரு பெரிய டீம் இருக்கு. அவங்களோட கதை விவாதம் என்று இயக்குனர் உடைய முழு அர்ப்பணிப்பால் தான் நீங்கள் இந்த சீரியலை இவ்வளவு விரும்புவதற்கான காரணம் என்று சொல்லணும். அதோடு எங்கள் டீம் எடுக்கிற ஒவ்வொரு சீனிலும் அவ்வளவு நுணுக்கம் இருக்கும். வீட்ல நடக்கிற சாதாரணமான ஒரு சீனாக இருந்தாலும் சரி, சண்டையாக இருந்தாலும் சரி, எல்லாத்துக்குமே ரொம்ப நுணுக்கமா சொல்லிக் கொடுத்ததால் தான் இந்த சீரியல் இவ்வளவு தூரம் வந்திருக்கு.

Siragadikka aasai serial Muthu Actor Vetri Vasanth apologized to his fans

சிறகடிக்க ஆசை சீரியல் தொடங்கி 300 எபிசோடு சந்தோஷமா கடந்து வந்திருக்கு. இன்னும் கதை சுவாரசியமாக இருக்கு. எல்லா வகையான ஆடியன்ஸுக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நீங்க எல்லாம் இந்த சீரியலை ரெகுலரா பார்த்து ரசிப்பதால் தான் இன்னைக்கு இந்த சீரியல் மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்று இருக்கிறது. நான் இதுபோல என்னுடைய பிறந்தநாளுக்கு முதல்முறையா லைவில் வந்தேன். அப்போ எனக்கு நிறைய ரெஸ்பான்ஸ் கிடைச்சு.

அதோட நிறைய மெசேஜ் வந்திருக்கு அவங்க எல்லாருக்கும் என்னால தனியா பதில் சொல்ல முடியல. எனக்கு முதல் முறையா நீங்க எல்லாரும் பிறந்தநாளுக்கு விஷ் பண்ணி இருந்தீங்க. அன்னைக்கு நான் அக்சப்ட் பண்ணவங்களுக்கு இன்னைக்கு வரைக்கும் என்னால சரியா ரெஸ்பான்ஸ் பண்ண முடியல. அதுக்கு சரியான நேரம் அமைய மாட்டேங்குது, வேற ஒன்னும் இல்ல. அதனால ரொம்ப ரொம்ப சாரி... எல்லாரும் என்ன மன்னிச்சுக்கோங்க.

Siragadikka aasai serial Muthu Actor Vetri Vasanth apologized to his fans

நீங்க எங்களுக்காக இவ்வளவு பண்ணும் போது நான் உங்களுக்காக இதை பண்ணலாட்டி எப்படி? அதனால இனி நான் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் லைவில் வருகிறேன். அதுபோல நான் என்னுடைய ரசிகர்கள் எல்லாரையும் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான நேரம் வந்ததும் நானே எந்த இடம் என்பதை சொல்கிறேன் என்று அந்த லைவில் கலகலப்பாக வெற்றி வசந்த் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+