"சிறகடிக்க ஆசை" ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.. இன்னொரு சீரியலில் அறிமுகமாகும் “முத்து”.. ஆரம்பமே அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் "முத்து" கேரக்டரில் பிரபலம் அடைந்த நடிகர் "வெற்றி வசந்த்" தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "நீ நான் காதல்" என்ற சீரியலில் என்ட்ரி ஆகி இருக்கிறார்.

ஏற்கனவே விஜய் டிவியில் "பொன்னி" சீரியலிலும் வெற்றி வசந்த் கெஸ்ட் ஆக கலந்து கொண்டார். அதுபோல இப்போது நீ நான் காதல் என்ற சீரியலில் அறிமுகமாகி இருக்கும் நிலையில் இது குறித்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

Siragadikka aasai serial muthu Starring Nee Naan Kaadhal Serial

அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்துவிட்டனர். அந்த வகையில் நடிகர் வெற்றி வசந்த் ரசிகர்களின் மத்தியில் முத்துவாகவே இடம் பிடித்து விட்டார். சாதாரணமாக ஒரு நல்லவன் எப்படி இருப்பாரோ அப்படியே முத்து பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்.

எந்த இடத்திலும் நடிக்க தெரியாமல் கோபம் வந்தால் டக் என்று காட்டி விட்டு அதே நேரத்தில் மனிதாபிமானத்தோடு இவர் நடந்து கொள்வது பலராலும் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் மூலமாக இவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதனாலேயே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக வெற்றி வசந்த் கலந்து கொண்டிருக்கிறார்.

கடந்த வாரத்தில் "அது இது எது" என்ற நிகழ்ச்சியில் வெற்றி வசந்த், கோமதி பிரியா மற்றும் அனிலா ஸ்ரீகுமார் மூவரும் கலந்து கொண்டனர். சிறகடிக்க ஆசை சீரியல் சார்பாக இவர்கள் கலந்து கொண்டது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்ற சீரியல் ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக வெற்றி வசந்த் கலந்து கொண்டிருக்கிறார்.

அவரோடு ஆகா கல்யாணம் சீரியல் கதாநாயகியும் ஹெஸ்டாக கலந்து கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதோடு வெற்றி வசந்த்தை பார்த்ததும் ரசிகர்கள், எங்கே முத்து இருந்தாலும் அந்த இடம் வெற்றி தான் என்று லைக்குகளை குவிக்கிறார்கள். அதோடு வெற்றி வசந்த் மற்றும் ஆகா கல்யாணம் சீரியல் நடிகை அக்ஷயா இவர்கள் இருவருடைய காம்போ அழகாக இருக்கிறது என்றும் பாராட்டி வருகிறார்கள்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலிலும் பொன்னியின் அண்ணனாக வெற்றி வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+