சிறகடிக்க ஆசை: வீடு கட்ட ஒர்க்ஷாப் வைக்கும் முத்து.. ரோகிணிக்கு வரும் ஆப்பு.. பரிதாப நிலையில் விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா முத்துவின் சம்பாத்தியத்தில் மாடியில் ரூம் கட்டுவார் என்று சபதம் போட்டிருக்கும் நிலையில் முத்து மற்றும் மீனா புதியதாக ஒர்க்ஷாப் திறந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

சீரியலில் நடிக்கும் பல நடிகர் நடிகைகள் அங்கு பல ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதன் மூலமாக சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற உண்மைகள் அம்பலமாகி விடுகிறது. அது போல தான் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடந்து இருக்கிறது.

Television Siragadikka aasai serial

இந்த சீரியலில் செல்வம் கேரக்டரில் நடிக்கும் நடிகர் பழனியப்பன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சஸ்பென்ஸை உடைத்து இருக்கிறது. ஏற்கனவே நாளை ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணி நேர எபிசோடில் மனோஜ் பணத்தை ஏமாந்து போய் இருப்பதால் விஜயாவிடம் உதவிக்கு போக விஜயா மீனா கழட்டி கொடுத்த நகைகளை மனோஜிடம் கொடுத்து அதை அடகு வைக்க சொல்கிறார்.

ஆனால் மனோஜ் அடகு கடைக்கு போன நேரத்தில் அங்கு இருந்தவர்கள் இங்கு அடகு வைக்க முடியாது நகையை விற்க தான் முடியும் என்று சொல்ல மனோஜ் நகைகளை விற்று விடுகிறார். இந்த நேரத்தில் மீனாவும் முத்துவும் அண்ணாமலை இடம் மீனா கழட்டி கொடுத்த நகையை கேட்க அண்ணாமலை விஜயாவிடம் அந்த நகைகளை கொண்டு வா என்று சொல்கிறார்.

அதனால் விஜயா மனோஜிடம் அந்த நகையை திருப்பிக் கொண்டு வந்து விடு என்று சொல்ல, அதற்கு மனோஜ் அந்த நகையை விற்று விட்டேன் என்று சொன்னதை கேட்டு விஜயா போட்டு அடித்து துவைக்கிறார். இதனால் இனி என்ன நடக்கப்போகிறது என்பது நாளைக்கான எபிசோடில் தெரியவரும். இந்த நிலையில் முத்து மற்றும் மீனா எதற்காக நகைகளை கேட்டார்கள் என்பது எல்லோருக்கும் ஒரு கேள்வியாக இருந்தது.

அது குறித்து அதற்கு விடை கொடுக்கும் வகையில் தான் செல்வம் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதாவது அந்த வீடியோவில் முத்து, மீனா, செல்வம் இருக்கிறார்கள் இவர்களுக்கு பின்னாடி ஒர்க் ஷாப் போன்று இருக்கிறது. அதிலும் புதியதாக ஒர்க் ஷாப் திறந்து இருப்பது போல டெக்கரேஷன் செய்து வைத்திருக்கிறார்கள். இதனால் இனி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் முத்து மற்றும் மீனா புதியதாக ஒர்க்ஷாப் திறப்பது போல் தான் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே முத்து கார் ஓட்டி கொண்டிருக்கிறார். மீனா பூக்கட்டி விற்று வருகிறார். இவர்கள் இருவரும் பார்க்கும் வேலையை வைத்து புதியதாக மாடியில் ரூம் கட்ட முடியாது. இதனால் அடுத்த பிசினஸ் தொடங்குவதற்கு முத்து முடிவெடுத்து இருக்கிறார் என்று தெரிய வருகிறது. ஏற்கனவே 27 லட்சத்தை ஜீவாவிடம் ஏமாந்து இருந்தார். ஆனால் ரோகிணி முப்பது லட்சமாக திருப்பி வாங்கி இருக்கிறார். இப்போது 4 லட்சம் நகைகளை விற்று இருக்கிறார்.

மனோஜ் பக்கத்தில் கிரைம் ரேட் ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் மனோஜ் வழக்கம் போல இந்த முறையும் மாட்டாமல் தப்பித்து விடுவாரா? அல்லது இந்த முறை மாட்டிக் கொள்வாரா? என்பது நாளைக்கான எபிசோடில் தெரியவரும். ஏற்கனவே ரோகிணி தாங்கள் புதியதாக பிசினஸ் தொடங்கிவிட்டோம் என்று ஆட்டம் போட்டு ஒவ்வொரு இடத்திலும் மீனா மற்றும் முத்துவை மாட்டி விட்டு வருகிறார். இப்போது மனோஜ் பெரிய பிரச்சனையில் இருக்கும் நிலையில் வீட்டில் மாட்டினால் ரோகிணி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+