சிறகடிக்க ஆசை : சத்யா திருடியதை ரோகிணியிடம் சொன்ன சிட்டி.. முத்துவுக்கு வந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியேறி இருக்கிறது. அதில் முத்துவை வீட்டில் மாட்டி விட வேண்டும் என்பதற்கு ரோகிணி சிட்டியோடு சேர்ந்து பிளான் போடுகிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே செல்வதற்கு பணம் கொடுக்கக் கூடாது என்று மீனா சொல்லி இருக்கும் நிலையில் முத்து மற்றும் மீனா இடையே சண்டை வந்திருக்கிறது. அதனால் மீனா நேரடியாக சென்று செல்வத்திடம் நீங்கள் கடன் வாங்கி அம்மா அப்பாவின் திருமண நாளை கொண்டாட வேண்டுமா? அதனால் நீங்கதான் கஷ்டப்படுவீங்க என்று பேசிவிட்டு வந்திருக்கிறார்.

அதனால் முத்துவிடம் செல்வம் எனக்கு பணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் முத்து செல்வம் எதற்காக இப்படி சொன்னார் என்று மீண்டும் மீண்டும் துருவித் துருவி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் மீனா வந்து பேசிய விஷயத்தை செல்வம் சொல்லப் போகிறாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் அடுத்த வாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்று லேட்டஸ்ட் புரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதில் ரோகிணி சிட்டியை சந்தித்திருக்கிறார். அப்போது சிட்டி உங்க வீட்டில் உங்க மாமியாரின் நகை ஒரு முறை திருடு போயிருந்ததே அதை திருடியது யார் தெரியுமா? என்று கேட்க ரோகிணி அது ஏதோ திருடன் திருடினான் பிறகு அந்த பணம் நகை எல்லாம் கிடைத்து விட்டதே என்று சொல்ல அதை திருடியது சத்யா தான் அந்த உண்மை முத்துக்கு தெரியும். முத்துவின் செல்போனில் அந்த வீடியோ இருக்கிறது. அதை மட்டும் நீங்க சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு விட்டால் போதும்.

அதற்குப் பிறகு நடப்பது எல்லாம் தன்னால் நடக்கும்... நீங்கள் மட்டும் இதை சரியா செஞ்சிட்டீங்கன்னா உங்களை ஒருத்தன் மிரட்டிட்டு இருக்கானே அவன் உங்க பக்கமே தலை வச்சு படுக்காம பண்ணிருவேன் என்று சொல்ல, இதை பண்ணுறதால உங்களுக்கு என்ன லாபம் என்று ரோகிணி கேட்க, அது வேற ஒரு கணக்கு இருக்கு என்று சிட்டி வில்லத்தனமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சிட்டி எப்போது முத்துவை பழிவாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது இந்த விஷயம் முத்துவிற்கு மீனாவிற்கும் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மீனா தன்னுடைய தம்பி இப்போது தான் திருந்தி விட்டான், அவன் முன்பு மாதிரி இல்ல மாறிட்டான் என்று ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் வழக்கம்போல முத்து அவன் மீது கோபத்தை காட்டுவது மீனாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இந்த நிலையில் சத்யா ஒரு திருடன் என்பது மீனாவிற்கு தெரியவரும் நிலையில் அடுத்த வாரம் பெரும் பிரச்சனை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்ற பொறுத்து இருந்து பார்க்கலாம். வழக்கம்போல இந்த முறையும் முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை வரப்போகிறது. தப்பு செய்யும் ரோகினி இந்த முறையும் தப்பித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications