சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம்: வீட்டுக்கு வந்த க்ரிஷ்.. விஜயாவை அடிக்க வந்த பெண்.. மீனா காட்டிய அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் மகன் கிரிஷ் மீண்டும் விஜயா வீட்டுக்கு வந்திருக்கிறார். அதுபோல விஜயா டான்ஸ் ஸ்கூலில் படிக்கும் ரதி உடைய அம்மா விஜயா வீட்டுக்கு பிரச்சனை செய்ய வந்திருக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாராத சம்பவம் தான் அடுத்த வாரத்தில் நடக்கப்போகிறது. ஏற்கனவே ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்ற ஒரு உண்மை குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு குழந்தை இருக்கும் உண்மையையும் இப்போது தெரிய வருமா? என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதாவது வரும் எபிசோட்டில் முத்து அண்ணாமலையை ஸ்கூலில் இறக்கிவிட்டு வரும்போது ரோகிணியின் அம்மா மயக்கம் போட்டு கீழே விழுந்து கிடக்கிறார்.

க்ரிஷ் தன்னுடைய பாட்டி பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். சுற்றி நின்றவர்கள் யாரும் உதவி செய்யாமல் இருக்கும்போது முத்து ரோகிணியின் அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகிறார். இப்படியான நிலையில் அடுத்த வாரத்திற்கு என்று வெளியான ப்ரோமோவில் க்ரிஷை முத்து வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். அங்கு ரவி மற்றும் ஸ்ருதியுடன் சேர்ந்து க்ரிஷ்யும் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து விஜயா கோபத்தில் திட்டி கொண்டிருக்கிறார்.
அதேபோல விஜயாவிடம் டான்ஸ் கற்றுக்கொள்ள வந்திருக்கும் ரதி ஒரு பையனை காதலித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகும் விஷயத்தை பற்றி முத்துவும் மீனாவும் ஏற்கனவே விஜயாவிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் முத்து மற்றும் விஜயாவை நம்பாமல் அந்த இளம் ஜோடியை தான் நம்பிக்கொண்டிருந்தார். அவர்கள் பற்றி எனக்கு நல்லா தெரியும் என்று முத்துவையும், மீனாவையும் அசிங்கப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் அந்த ரதி இப்போது டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும்போது மயக்கம் போட்டு கீழே விழ டாக்டர் வந்து செக் பண்ணி பார்த்துவிட்டு அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்று சொல்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சியாகி இருக்கிறார். பிறகு விஜயா வீட்டில் இருக்கும் நேரத்தில் ரதியின் அம்மா மற்ற பெண்களை கூட்டிக்கொண்டு வந்து எங்க விஜயா யாரு என்று கேட்க, நான் தான் என்று விஜயா சொன்னதும் அந்த பெண் ஆவேசமாக விஜயாவை அடிக்க வருகிறார்.
அப்போது மீனா குறுக்கே வந்து அந்த பெண்ணின் கையைப் பிடித்து விடுகிறார். இதனால் விஜயா தப்பித்து விடுகிறார். எத்தனை முறை விஜயா மீனாவை அசிங்கப்படுத்தினாலும் இப்போது விஜயாவுக்கு ஒரு பிரச்சனை என்றும் மீனாதான் முன்னின்று வந்து அந்த பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இனியாவது விஜயா மனசு மாறப்போகிறாரா? இல்லையா? என்பது அடுத்த வாரத்தில் தான் தெரியவரும். எது எப்படியோ விஜயா டான்ஸ் கிளாஸில் ஆட்டம் போட்ட அந்த காதலர்களுடைய பிரச்சனை இப்போது பூதாகரமாக வெடிக்கிறது. அதேபோல ரோகிணியின் அம்மா நிலைமை என்ன ஆச்சு என்று தெரியவில்லை. க்ரிஷ் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் ரோகிணி குடும்பத்திடம் மாட்ட போகிறாரா? இல்லையா? என்பது அடுத்த வாரத்தில் தான் தெரியும்.












Click it and Unblock the Notifications