சிறகடிக்க ஆசை: முத்து மீது விழுந்த திருட்டு பழி.. நக்கல் செய்து சிரிக்கும் மனோஜ்.. மீனா செய்த அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நவம்பர் 15ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது
அதில் முத்து வேலை பார்த்த இடத்தில் ஓனருடைய செல்போன் தொலைந்து விட்டதால் அதை முத்து தான் எடுத்திருப்பார் என்று அங்கு இருப்பவர்கள் முத்து மீது பழியை தூக்கி போடுகின்றனர்.

இதை மறைந்திருந்து மீனா பார்த்து கஷ்டப்படுகிறார். அதே நேரத்தில் வீட்டில் ரோகிணி மற்றும் மனோஜ் முத்து மீனாவை அசிங்கப்படுத்துகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டிற்கான மளிகை சாமான் எல்லாம் ரோகிணி வாங்கிக் கொண்டு வந்து அதை எடுத்து வைத்துக் கொண்டு இருக்கும் போது விஜயா மீனாவிடம் இந்த மாசம் பணம் தர மாட்டீங்களா? ஓசில தான் சாப்பிட போறீங்களா? என்று நக்கல் பண்ணுகிறார். அதற்கு மீனா அவரது வளையலை அடமானம் வைத்து பத்தாயிரம் பணம் வாங்கிட்டு வந்து விஜய்யாவிடம் கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து விஜயா மீனாவிடம் முத்து உன்னிடம் பணம் தரல அப்போ இந்த பணம் உனக்கு ஏது? எங்கேயும் திருடுறியா என்று விஜயா கேட்டுக் கொண்டிருக்கும்போது முத்து வீட்டுக்கு வந்து நான் தான் மீனா கையில் கொடுத்து வைத்திருந்தேன். அந்த பணத்தை தான் கொடுத்து இருப்பா என்று அனைவரும் முன்பும் சமாளித்து விட்டு தனியாக ரூமிற்குள் போய் மீனா கிட்ட உனக்கு ஏது பணம் எப்படி இந்த பத்தாயிரம் வந்தது என்று கேட்டுக் கொண்டிருக்கும்போது மீனா கையில் இருந்த வளையல் காணாமல் போய் இருப்பதை பார்த்து அப்போ வளையலை அடமானம் வைத்துதான் இந்த பணத்தை கொடுத்தியா என்று முத்து கேட்கிறார்.

அதற்கு ஆமா அத்தை பணம் தர மாட்டீங்களான்னு கேட்டுட்டே இருந்தாங்க அதனாலதான் இப்படி பண்ணினேன் என்று சொல்கிறார். அதற்கு முத்து எனக்கு இவங்க மரியாதை தரவேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை என்று சொல்ல, அதற்கு மீனா எனக்கு உங்களுக்கு மரியாதை ரொம்ப முக்கியம் என்று சொல்லுகிறார். அடுத்த கட்டத்தில் ரோகினி மனோஜுக்காக காஸ்டிலான பெர்ஃப்யூம் ஒன்றை கிப்டாக வாங்கி கொடுக்கிறார்.
அதைப்பற்றி மனோஜ் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலையில் முத்து சீக்கிரம் எழுந்து நான் வேலைக்கு போகணும் என்று கிளம்பி போய் விடுகிறார். அதைத்தொடர்ந்து மீனாவின் வீட்டிற்கு அவருடைய தோழி வருகிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது என்னுடைய மாமா செக்யூரிட்டியா வேலை பாக்குற அப்பார்ட்மெண்ட்ல தான் உங்க புருஷன் கார் துடைக்கிற வேலைக்கு போய் இருக்காரு என்று சொன்னதும் மீனா அந்த அப்பார்ட்மெண்டுக்கு வந்து முத்துவை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது முத்து கார் துடைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு நபர் வந்து உள்ளே இருந்த என்னுடைய போனை காணோம் நீ தான் திருடி இருப்ப ஒழுங்கு மரியாதையா உண்மைய சொல்லு என்ற சண்டை போட்டுக் கொண்டிருக்க அப்போது அப்பார்ட்மெண்டில் இருந்த அனைவரும் வந்து முத்துவிடம் சண்டை போடுகின்றனர். அதற்கு முத்து நான் உழைத்து சம்பாதிக்கிறவன். திருடற பழக்கம் எனக்கு கிடையாது.
ஏழை என்றால் திருடுவாங்களா என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு நபர் பைக்கில் வந்து உங்க போனை நீங்க விளையாட வந்த இடத்திலேயே மறந்துவைத்து விட்டு வந்துட்டீங்க என்று அவரிடம் கொடுக்க பிறகு முத்து நீங்க என் மேல வீண் பழியை போட்டுட்டீங்க இல்ல இதுக்கு என்ன சொல்ல போறீங்க என்று பேசிக் கொண்டிருக்கும்போது அந்த நபர்கள் அங்கிருந்து கிளம்பி போய் விடுகிறார்கள்.
தன் மீது பழி போட்டதற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லையே என்று முத்து தனியாக புலம்பி கொண்டிருக்கிறார். இதை எல்லாம் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மீனா கண்கலங்கி இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications