சிறகடிக்க ஆசை: ரோகினி முன்பு கையெடுத்து கும்பிட்டு அழுத மீனா.. ஸ்ருதி கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நவம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ரோகினி முன்பு பைனான்சியரிடம் மீனா கையெடுத்து கும்பிட்டு முத்துவுக்காக கெஞ்சியதை பார்த்து ரோகினி புது ப்ளான் போடுகிறார்.

அதே நேரத்தில் ரவியை புரிந்து கொள்ளாத ஸ்ருதிக்கு ரவி இன்ப அதிர்ச்சியை கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டிற்கு வந்த ரவி ஸ்ருதி இடம் விஜயா தன்னை பார்த்து பேசிய விஷயத்தையும் வீட்டுக்கு அழைத்த விஷயத்தையும் சொல்ல அதற்கு ஸ்ருதி சரி போயிட்டு வா என்று சொல்கிறார். அதற்கு ரவி அம்மா உன்னையும் தான் வர சொன்னாங்க. என் மருமகளை கூட்டிட்டு வா இங்கேயே இருன்னு சொன்னாங்க. அம்மா அந்த வீட்டிலேயே நாம ரெண்டு பேரும் இருக்கணும்னு ஆசைப்படுறாங்க என்று ரவி கூறுகிறார்.
அதற்கு ஸ்ருதி என்னையும் கூப்பிட்டாங்களா நான் உன்னை மட்டும்தான் கூப்பிட்டாங்கன்னு நினைத்தேன். அதனால நீ என்னை கழட்டி விட்டுட்டு போயிடுவேன்னு நினைச்சேன் என்று சொல்ல, அதற்கு ரவி என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? என்னை அவ்வளவு சீப்பா நினைச்சுட்டல. உயிரே போனாலும் நான் உன்னை பாதியில் விட்டுட்டு போக மாட்டேன் என்று சொல்ல அதை கேட்டதும் ஸ்ருதி கண்கலங்கியபடியே ரவியை கட்டிப்பிடித்துக் கொண்டு சாரி கேட்டு லவ் யூ சொல்கிறார்.

மறுபக்கத்தில் மீனா காலையில் எழுந்து வேக வேகமாக சமையல் வேலைகளை முடித்து விட அங்கு வரும் விஜயா இன்னைக்கு என்ன பாம்பு போட்டு குழம்பு வச்சிருக்கியா? என்று நக்கல் செய்கிறார். அதற்கு மீனா இது பூண்டு குழம்பு, பூண்டு மட்டும் தான் போட்டு இருக்கு. இது பொறியல் வெறும் காய்கறி தான் மட்டும் தான் போட்டு வச்சிருக்கேன். எதையும் புடிச்சு போட்டு நான் செய்யல என்று பதிலடி கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து அண்ணாமலையிடம் மீனா மாமா நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன் என்று சொல்ல, அதை கேட்டதும் விஜயா தினமும் எங்க ஊர் சுத்த போறா என்று அவமானப்படுத்த அதற்கு மீனா நான் கோயிலுக்கு தான் போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார். அடுத்து ரோகிணி பைனான்ஸியர் வீட்டுக்கு மசாஜ் செய்ய வருகிறார்.
மறுபக்கத்தில் மீனா ஆட்டோவில் எல்லா கோவில்களுக்கும் இறங்கி சாமி கும்பிட்டு விட்டு பைனான்சியர் வீட்டிற்கு வருகிறார். பைனான்சியரை பார்த்து பேச வந்த மீனா அங்கு ரோகிணி இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். மீனாவை பார்த்த பைனான்சியர் அதான் நேற்று சொல்லிட்டேன்ல, முத்துக்கு கார் கொடுக்க முடியாது.

அவன் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டால் தான் தெரியும் என்று அவமானப்படுத்த, அதற்கு மீனா கையெடுத்து கும்பிட்டு எனக்காக ஒருமுறை அவரை மன்னிச்சிடுங்க அவர் வேலை இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுறாரு. போற இடமெல்லாம் அவரை அவமானப்படுத்துறாங்க என்று கண்கலங்கி கேட்கிறார். அதை பார்த்ததும் பைனான்சியர் உன்னை பார்த்தால் பாவமா தான் இருக்கு.
அவனை ஆபீசுக்கு வந்து எல்லாரும் முன்னாடியும் என்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு. மன்னிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று அனுப்பி வைக்கிறார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரோகினி ஓ முத்துவுக்கு வேலை இல்லையா? இது போதுமே என்று அவரை அவமானப்படுத்த பிளான் போடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
Youth Review : யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! கென் கலக்கினாரா? கலங்க வைத்தாரா? ரிவ்யூ இதோ -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications