சிறகடிக்க ஆசை: வீட்டை விட்டு போகும் முத்து..மீனாவிற்கு உதவும் தோழிகள்..விஜயாவிற்கு கிடைத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 1ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து தனக்கு சவாரி இருப்பதாக வீட்டை விட்டு கிளம்பி போகிறார். அதே நேரத்தில் மீனாவிற்கு புது பிரச்சனை வருகிறது. அப்போது மீனாவின் தோழிகள் அவருக்கு உதவி செய்கிறார்கள். மேலும் இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து வீட்டிற்கு சோகமாக வர அண்ணாமலை என்ன ஆச்சு உன்னுடைய போன் தொலைஞ்சு போச்சுன்னு சொன்னாங்களே கிடைச்சுச்சா என்று விசாரிக்க, எங்கேயும் கிடைக்கல என்று சொன்னதும் ஹோட்டலுக்கு போய் தேடி பார்த்தியா என்று கேட்க, எல்லா இடத்திலும் தேடி பார்த்தாச்சு போன் காணவில்லை என்பதால் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன் என்று சொல்கிறார்.

siragadikka aasai serial vijay tv

அதற்கு அண்ணாமலை சரி விடு போன் தொலைஞ்சு போனா போகட்டும் நீ வேற ஒரு போன் வாங்கிரு என்று சொல்கிறார். அடுத்ததாக முத்து பேக்கில் தன்னுடைய துணிகளை எடுத்து வைக்கும்படி முத்து மீனாவிடம் சொல்ல, மீனா எங்கே என்று கேட்கிறார்.

அதற்கு முத்து நான் திருப்பதி வரைக்கும் போக வேண்டியிருக்கு என்று சொன்னதும் கையில் போன் இல்லாமல் நீங்கள் அங்க போனா நான் எப்படி உங்களிடம் பேசுவேன் எனும் மீனா கேட்க, அதற்கு என்னிடம் ஃபோன் இல்லை என்றாலும் நான் யாரிடமாவது வாங்கி உனக்கு போன் பண்ணி பேசுறேன் என்று சொல்லிவிட்டு முத்து கிளம்புகிறார்.

siragadikka aasai serial vijay tv

அப்போது அண்ணாமலை தன்னுடைய போனை எடுத்துட்டு போகும்படி சொல்ல அதையும் முத்து மறுத்து விட்டு செல்கிறார். அடுத்ததாக மீனா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் போது அவருடைய தலையில் ஒரு பல்லி விழுந்து விடுகிறது. அதை தட்டி விடும்போது அங்கு விஜயா வந்து விட, அவர் மீது விழுந்து விடுகிறது.

பிறகு விஜயா தட்டி விடும்போது ரோகிணி வந்து விடுகிறார். ரோகிணி மீது விழுந்த பல்லியை ரோகிணி தட்டி விடும்போது மனோஜ் மீது விழுகிறது. இதனால் விஜயா வழக்கம் போல மீனாவை திட்டி கொண்டு இருக்கிறார். அதைத் தொடர்ந்து பல்லி விழுந்த பலன் பற்றி ரோகிணி பார்த்துக் கொண்டிருக்க அதில் எல்லோருக்கும் ஒவ்வொரு பலன் வருகிறது.

siragadikka aasai serial vijay tv

மீனாவிற்கு கவலை என்று வர அதற்கு விஜயா இவளால அடுத்தவங்களுக்கு தான் கவலை. இவளுக்கு எந்த கவலையும் வராது என்று அவமானப்படுத்தி பேசி விட்டுப் போகிறார். பிறகு மீனாவிற்கு சீதா போன் போட சீதா முத்து தான் பேசுகிறார் என்று பேசுகிறார். ஆனால் சீதா என்பதால் நீதானா என்று மீனா கேட்டதும் என்னாச்சுக்கா உன் குரல் டல்லா இருக்கு என்று சீதா கேட்கிறார்.

அதற்கு மீனா என் வீட்டுக்காரர் போன் பண்றாருன்னு நெனச்சேன். அவர் திருப்பதிக்கு சவாரிக்கு போய் இருக்கிறார். அவரோட போன் தொலைஞ்சு போயிடுச்சு எங்கேயும் கிடைக்கல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு அவருக்கு போன் வாங்கணும் என்று மீனா சொன்னதும் நல்ல போன் வாங்கணும் என்றால் பத்தாயிரம் ஆகும் என்று சீதா சொல்கிறார்.

siragadikka aasai serial vijay tv

சரி என்று மீனா போனை வைத்துவிட்டு தன்னுடைய தோழிகளை பார்க்க போகிறார். அவர்களிடம் விஷயத்தை சொன்னதும் அவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை மீனாவிற்கு கொடுக்கிறார்கள். அதையெல்லாம் சேர்த்து பார்க்கும் போது பத்தாயிரம் வருவதால் இதை வைத்து முத்துக்கு புது போன் வாங்கலாம் என்று அங்கிருந்து கிளம்பி போகிறார்.

அந்த நேரத்தில் விஜயா ஒரு ஆட்டோவில் வருகிறார். ஆட்டோ ரிப்பேர் ஆகி நின்று விடுவதால் அந்த ஆட்டோவை கட் பண்ணி விட்டு வேறு ஆட்டோவில் போக வேண்டும் என்று நூறு ரூபாயை கொடுக்க அவர் ₹50 சில்லறை கொடுங்க என்று சொன்னதும் பக்கத்தில் இருக்கும் மீனாவின் பூக்கட்டும் தோழிகளிடம் சில்லறை கேட்கிறார்.

siragadikka aasai serial vijay tv

அவர்கள் சில்லறை கொடுத்துவிட்டு இந்த அம்மா நம்மை தெரிஞ்சே தெரியாத மாதிரி போகிறதா? இல்ல நம்மள மறந்துட்டாங்களான்னு தெரியலையே? வாங்க நம்ம போய் பேசிப் பார்க்கலாம் என்று அவர்கள் எல்லோரும் விஜயாவிடம் பேசுகின்றனர். அப்போது விஜயா அவர்களிடமும் மீனவை அசிங்கப்படுத்தி பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+