Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்துவை அசிங்கப்படுத்த பார்த்த ரோகிணி..ஆனால் கிடைத்தது அதிர்ச்சி.. ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நவம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

இதில் முத்துவும் மீனாவும் வீட்டில் ஏமாற்றிக் கொண்டிருந்த ரகசியத்தை ரோகினி அனைவர் முன்னிலையிலும் உடைத்திருக்கிறார்.

siragadikka aasai serial November 20th promo and episode full update

அதே நேரத்தில் முத்து படும் கஷ்டத்தை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத அண்ணாமலை முத்துவுக்காக வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து கார் வாங்கி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டிற்கு வந்த ரோகினி முத்து மற்றும் மீனாவை வீட்டில் மாட்டி கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை மற்றும் விஜயாவிடம்,, பைனான்சியர் மனைவி என்னுடைய ரொம்ப நாள் கஷ்டமர். அதனால அவங்க வீட்டுக்கு நான் மசாஜ் பண்ண போயிருந்தேன். அங்கதான் மீனா பைனான்சியரிடம் வந்து முத்துக்கு காரை திருப்பி கொடுக்க சொல்லி கெஞ்சிகிட்டு இருந்தாங்க.

அதுபோல இவங்க சொன்ன மாதிரி பைனான்ஸியரோட பொண்ணை முத்து டூருக்கு கூட்டிட்டு போயிருக்காருன்னு சொன்னதெல்லாம் பொய் என்று ரோகிணி போட்டுக் கொடுக்கிறார். இதை கேட்டு கோபமான விஜயா முத்துவிடம், அப்போ இவ்வளவு நாளா நீ வேலை இல்லாம தான் இருந்திருக்கியா?

இப்போ எல்லாம் பொய் சொல்ல கூட நீ ஆரம்பிச்சிட்டல்ல? இதற்கு காரணம் உன் பொண்டாட்டி தான். அவ தான் உனக்கு பொய் சொல்லுறதுக்கு ட்ரெய்னிங் கொடுத்து இருக்கா என்று சண்டை இடுகிறார். அப்போது பக்கத்தில் இருந்த மனோஜ் நானும் ரோகிணியும் வேலைக்கு போய் தான் வீட்டு செலவுக்கு பணம் தந்துட்டு இருக்கோம். எங்க காசுல தான் நீங்க சாப்பிடுறீங்க. இவ்வளவு நாள் வேலைக்கு போற மாதிரி நடிச்சிட்டு இருந்திருக்கான் என்று முத்துவை அவமானப்படுத்துகிறார்.

கூடவே உனக்கு வேலை கிடைக்கலனா பாரில் போய் வேலைக்கு சேர்ந்துக்க என்று நக்கல் அடிக்க அதை கேட்டு கோபமான மீனா போதும் நிறுத்துங்க அவரை யாரும் எதுவும் சொல்லற வேலை வச்சுக்காதீங்க. அவர் ஒன்னும் வேலை இல்லன்னு மத்தவங்கள மாதிரி சும்மா ஒன்னும் இருக்கல. மாமா மனசு கஷ்டப்படுவாருன்னு என்று தான் அவர் பைனான்சியர் காரை எடுத்துட்டு போன விஷயத்தைப் பற்றி சொல்லாமல் மறைத்துவிட்டார்.

ஆனால் இப்ப அவர் என்ன வேலைக்கு போயிட்டு இருக்காருன்னு தெரியுமா? ஒரு அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற எல்லா காரையும் தொடச்சிட்டு இருக்காரு. அதை நானே போய் பார்த்தேன். எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு என்று மீனா ஃபீல் பண்ணி பேசுகிறார். அதற்கு முத்து மீனாவிடம் உன்னை யாரு பைனான்ஸியர் வீட்டுக்கு போக சொன்னா.

அவன் என்ன வார்த்தை சொன்னான் என்று தெரியுமா? நீ பாட்டுக்கு இப்போ பணத்தை வாங்கிட்டு போயிட்டா திடீர்னு உங்க அப்பா செத்துட்டா அந்த பணம் எனக்கு எப்படி திரும்ப கிடைக்கும்னு சொன்னான். அதனாலதான் நான் அவனை அடிச்சேன் என்று சொல்ல அதற்கு மீனா இப்படி சொல்லி இருந்தா எனக்கே தான் அடிக்கணும்னு கோவம் வருது. நீங்க அவன்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று சொல்கிறார்.

siragadikka aasai serial November 20th promo and episode full update

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட அண்ணாமலை செல்வத்தை கூட்டிக்கொண்டு முத்து காரை விற்ற நபரை பார்க்கிறார். அவரிடம் அண்ணாமலை என் பையன் ஒரு அவசரத்துல தான் உங்ககிட்ட காரை வித்துட்டான். இப்ப அவன் வேலை இல்லாம ரொம்ப கஷ்டப்படுறான்.

அந்த கார் எனக்கு திரும்ப வேண்டும் என்று கேட்க அதற்கு அந்த நபர் நான் நாலு லட்சம் ரூபாய் கொடுத்து அந்த காரை வாங்கினேன். இப்ப நீங்க அஞ்சு லட்சம் கொடுத்தீங்கன்னா நான் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல அதற்கு வருத்தப்படும் அண்ணாமலை பிறகு அவரிடம் நான்கு அரை லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி முடித்து விடுகிறார்.

பிறகு வீட்டிற்கு வந்து விஜயாவிடம் முத்து எனக்காக தான் அவனுடைய காரை வித்தான். இப்போ முத்து வேலை இல்லாம ரொம்ப கஷ்டப்படுறான். அதனால அவனுக்கு அந்த காரை திருப்பிக் கொடுக்கணும் என்று இருக்கேன் என்று சொல்ல, அதற்கு விஜயா முதலில் அதெல்லாம் முடியாது. எனக்குன்னு இருக்கிறதே அந்த வீடு ஒன்னு தான் என்று மறுக்கிறார்.

பிறகு சரி அப்படின்னா என்னோட நகையும் சேர்த்து திருப்பி கொடுங்க. அதனால 6 லட்சத்துக்கு வீட்டு பத்திரத்தை அடமானம் வைக்கிறதுன்னா எடுத்துட்டு போங்க என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+