சிறகடிக்க ஆசை: ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. ஆனால் விஜயாவை இப்படி எதிர்பார்க்கல.. பாவம் ரோகினி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 21ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் முத்து வேலை இல்லாமல் கஷ்டப்படுவதால் அவருக்கு அண்ணாமலை பழைய காரை மீண்டும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
அதைப் பார்த்து மனோஜ் மற்றும் ரோகினி அதிர்ச்சி அடைய விஜயா வழக்கம் போல முத்து மீனாவை அவமானப்படுத்துகிறார்.

இன்றைய எபிசொடின் ஆரம்பத்தில் ஆரம்பத்தில் விஜயா, ரோகிணி, மனோஜ் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரோகிணி தன்னுடைய சம்பளப் பணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க அதற்கு விஜயா இந்த வீட்டில் நீ மட்டும் தான் வேலைக்கு போற என்று வாய் தவறி உளறிவிடுகிறார். அதற்கு ரோகிணி என்ன ஆன்ட்டி அதான் மனோஜ் வேலைக்கு போயிட்டு தானே இருக்காரு என்று சொல்ல, ஆமாம் ஆனா நீ தானே நிறைய சம்பாத்தியம் பண்ணுற என்று விஜயா பிளேட்டை மாற்றி விடுகிறார்.
அதைத்தொடர்ந்து அண்ணாமலைக்கு ஒரு போன் வருகிறது. அவர் எல்லாரையும் கீழே கூட்டிட்டு செல்லுகிறார். அப்போது முத்து என்னப்பா விஷயம் உடம்புக்கு எதுவும் சரி இல்லையா என்று கேட்க, அங்கு செல்வம் வீட்டிற்கு வருகிறார். செல்வத்தை பார்த்ததும் முத்து என்ன ஆச்சு அப்பாவே உனக்கு போன் பண்ணி காரை எடுத்துட்டு வர சொல்லிட்டாரா? என்று கேட்க, அதற்கு செல்வம் கதவை திறந்து விட வெளியே முத்துவின் கார் நிற்கிறது.
முத்து காரை பார்த்ததும் ஷாக் ஆகிறார். பிறகு அண்ணாமலை நான்கரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து காரை வாங்கிய விஷயம் முத்துவுக்கு தெரிய வர முத்து அப்பாவுக்கு நன்றி சொல்கிறார். அதற்கு அண்ணாமலை அதை எனக்கு சொல்லாத மீனாவுக்கு சொல்லு மீனாதான் மீண்டும் அந்த காரை வாங்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டது என்று சொல்கிறார். இதை எல்லாம் பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
அதைத்தொடர்ந்து மீனா ரூமுக்குள் துணி மடித்துக் கொண்டிருக்கும் போது உள்ளே வரும் முத்து அவருக்கு நன்றி சொல்வது எப்படி என்று தெரியாமல் அங்கே இங்கே அலைந்து கொண்டே இருக்க, மீனா என்னவென்று விசாரிக்கிறார். அப்போது முத்து பர்ஸை காணவில்லை என்று சொல்லி மீனா வைத்திருந்த துணியை எல்லாம் களைத்து போட்டு மீனாவோடு சண்டை போடுகிறார்.
பிறகு கையை கொடு என்று முத்து சொல்ல அதற்கு எதற்கு என்று மீனா கேட்கிறார். அதற்கு முத்து கார் கிடைத்ததற்கு நன்றி என்று சொல்லி வெளியே போகலாம் வா என்று முத்து மீனாவை கூப்பிடுகிறார். அதற்கு மீனா இன்னைக்கு சந்தோசமாக பேசி வெளியே கூட்டிட்டு போவீங்க. நாளைக்கு திட்டுவீங்க. எதுக்கு இதெல்லாம் எனக்கு தேவையா நான் வரமாட்டேன் என்று சொல்ல நான் என்ன இப்போ உன்கிட்ட கெஞ்சனுமா? புருஷன் சொன்னா வரமாட்டியா என்று முத்து சண்டை போடுகிறார்.
பிறகு மீனா அப்படின்னா ஹோட்டலுக்கு போறதுக்கு முன்னாடி நான் சொல்ற இடத்துக்கு என்னை கூட்டிட்டு போகணும் என்று கூறுகிறார். அதற்கு முத்துவும் சரி என்று சொல்லி மீனாவை காரில் கூட்டிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறார். அப்போது மீனா நான் சொல்லும் வரை காரைக் கொண்டு போய்ட்டே இருங்க என்று சொல்லி முத்துவும் மீனாவும் லாங் ட்ரைவ் போகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications