சிறகடிக்க ஆசை: வித்யாவால் பிரச்சனையில் சிக்கும் ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ்.. விஜயாவுக்கு பாதிப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவின் செல்போனை வித்யா தொலைத்து விடுகிறார். ஆனால் அது பற்றி சொல்லாமல் ரோகிணி இடம் ஏமாற்றி விடுகிறார். அதோடு மனோஜ்க்கு புது பிரச்சனை ஒன்று வருகிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவின் செல்போனை கடலில் வீசுவதற்காக வித்யா தெருவில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய செருப்பு அறுந்து விடுகிறது. இதனால் பக்கத்தில் உள்ள செருப்பு கடைக்கு சென்று அங்கு செருப்பு தைக்கிறார். அந்த கடை முத்துவும் மீனாவும் உதவி செய்யும் தாத்தா, பாட்டியின் கடை தான்.

அவர்கள் செருப்பை தைத்துக் கொடுத்ததும் வித்யா அப்போது அங்கு வரும் ஒரு ஆட்டோவை பிடித்து அதில் ஏறி போகிறார். போகும் போது போன் கீழே விழுந்து விடுகிறது. இதை பார்த்த தாத்தா போனை எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்கிறார். அந்த நேரத்தில் வித்யாவிற்கு ரோகிணி ஃபோன் போட்டு முத்து ஃபோனை பீச்சில் போட்டுடியா? என்று கேட்க, வித்யா போனை தேடுகிறார்.
போன் காணவில்லை என்பதை அப்போதுதான் பார்க்கிறார். இதனால் ரோகிணியிடம் சொன்னால் அவர் திட்டுவார் என்று போனை போட்டு விட்டேன் என்று சொல்லி விடுகிறார். இதைக் கேட்டு ரோகிணி சந்தோஷப்படுகிறார். அதோடு ரோகிணி மட்டும் ஒரு நாளைக்கு எத்தனை பொய் சொல்கிறாளோ?

நான் ஒரே ஒரு பொய் தானே சொன்னேன். இனி அந்த போனால் எந்த பிரச்சினையும் வரவே போறது கிடையாது என்று வித்யா மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார். மனோஜ் கடையில் யாரோ மூன்று முட்டைகளை வைத்திருக்கிறார்கள் இதை பார்த்து மனோஜ் பதறி அடிக்கிறார். அதோடு அங்கிருந்த ஒரு நபர் இது செய்வினை முட்டை, எங்க கடை முன்பு இப்படித்தான் இருந்தது பிறகு எங்க அப்பாவும் இறந்து போயிட்டாரு எங்க கடையை நாங்கள் மூடிவிட்டோம் என்று சொல்ல அதைக் கேட்டு மனோஜ்க்கு ரொம்பவும் பயம் வருகிறது.

அந்த நேரத்தில் அவருடைய பார்க் நண்பர் அங்கு வருகிறார். அவரிடம் விஷயத்தை சொன்னதும் அவர் ஒரு ஜோதிடக்காரரிடம் கூட்டிட்டு போகிறார். ஜோதிடக்காரர் இது செய்வினை முட்டைதான் இதுக்குரிய பரிகாரம் செய்யவில்லை என்றால் நீ நடுத்தெருவுக்கு வந்துடுவ என்று பயமுறுத்துகிறார்.

அதோடு உனக்கு பிடித்தது யார் என்று கேட்டதும் அம்மா என்று மனோஜ் சொல்லுகிறார். இதனால் நீயும் உனது அம்மாவும் ஒரு நாள் விரதம் இருந்து உன்னுடைய குலதெய்வத்துக்கு பூச்சட்டி எடுக்க வேண்டும் அப்போதுதான் செய்வினை முறியும் என்று சொல்லி அனுப்புகிறார். இதைக் கேட்டு மனோஜ் அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications