சிறகடிக்க ஆசை: சத்யாவுக்காக முத்து செய்த செயல்! விஜயா சொன்ன சொல்! மீனா கேட்ட கேள்வி.. ஏமாந்த ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் முத்துவிற்கு சத்யா வீடியோ லீக்கான விஷயம் தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் விஜயாவிற்கு முத்து அதிர்ச்சிகரமான வார்த்தையை சொல்லி இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவின் அம்மா நாங்க காசு பணம் சேர்க்கலனாலும் மரியாதையை சேர்த்து வைத்திருந்தோம் ஆனா இப்ப அதுவும் போச்சு. உன் மாமியார் பேசின பேச்சுக்கு நான் சாகாம உயிரோடு இருக்கிறதே பெரிய விஷயம் என்று அழுது கொண்டிருக்கிறார். சத்யா நான் வேணா அவங்க கிட்ட பேசுறேன் என்று சொல்ல, மீனாவின் அம்மா சத்யாவை அடிக்கிறார்.

இது எப்ப நடந்தது என்று கேட்க சிட்டி கூட இருக்கும்போது நடந்தது.. இந்த விஷயம் மாமாவுக்கு முன்னாடியே தெரியும். அவரோட போன்ல தான் இந்த வீடியோ இருந்தது என்று எல்லா உண்மைகளையும் சத்யா சொல்ல மீனாவும் அவருடைய குடும்பத்தினரும் நாம அவரை புரிஞ்சுக்காம எவ்வளவோ பேசிட்டோமே என்று பீல் பண்ணுகின்றனர்.
அதோடு செல்போன் தொலைந்து போனதும் அவர் இந்த வீடியோவுக்காக தான் இவ்வளவு பதறிப் போனாரா என்று மீனா அழுது கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் விஜயா நடந்த விஷயத்தை அண்ணாமலையிடம் சொல்ல அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அப்போது ரோகிணி நல்லவேளை நம்மளோட பிரச்சனை இனி சரியாகிவிடும்.

இதுக்கு அப்புறம் நம்ம இனி ஃப்ரீயா இருக்கலாம் என்று சந்தோஷப்படுகிறார். அதோடு விஜயாவிடம் நீங்கள் மதியத்தில் இருந்து எதுவும் சாப்பிடல நான் காபி போடவா என்று கேட்க, விஜயா வேண்டாம் என்று சொல்கிறார். இந்த அசிங்கத்தில் இருந்து நான் எப்படி வெளிவர போறேன்னு தெரியல காப்பி வேறையா என்று விஜயா சொல்லி கொண்டிருக்கும்போது முத்து கோயிலில் இருந்து வீட்டிற்கு திரும்பி வருகிறார்.
தான் வாங்கிட்டு வந்த லட்டை கொடுக்க அண்ணாமலை எதுவும் சொல்லாமல் தள்ளி போய் நிற்கிறார். மனோஜிடம் உனக்கு லட்டு பிடிக்குமே எடுத்துக்கோ என்று சொல்ல, விஜயா அல்வா வாங்கிட்டு வர வேண்டியதுதானே என்று கோபமாக பேசியதும் ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க? என்று முத்து கேட்க, நீ வீடியோ எதுவும் பார்க்கவில்லையா நீ தான் எப்பவும் குறும்படம் காட்டுவியா இப்போ நான் உன் மாமியார் குடும்ப ஷார்ட் பிலிம் காட்டுறேன் என்று வீடியோவை காட்டுகிறார்.

அதை பார்த்து முத்து அதிர்ச்சியடைகிறார். உடனே ரோகிணி என்ன முத்து உங்களுக்கு முதலிலேயே தெரியுமா? என்று கேட்க, முத்து முறைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் நிற்கிறார். அப்போது அண்ணாமலை உங்க அம்மா நிறைய பேசுறா அவளுக்கு பதில் சொல்ல என்கிட்ட எந்த பதிலும் இல்லை என்று அமைதியா ரூமுக்குள் போய்விடுகிறார்.
அப்போது முத்து நான் போய் மீனாவை கூட்டிட்டு வரேன் என்று சொல்ல, விஜயா நீ அங்க போ என்ன வேணா பண்ணு ஆனா அவளை இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வராத என்று சொல்ல அவ என் பொண்டாட்டி கூட்டிட்டு தான் வருவேன் என்று முத்து சொல்கிறார். இது என் வீடு நான் உள்ளே விடமாட்டேன் என்று விஜயா சொல்கிறார்.

ஆனாலும் கேட்காமல் முத்து போகிறார். மறுபக்கத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து உயர் அதிகாரி வந்து அந்த பையனோட முகம் நல்லா தெரியுது அவனை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வாங்க என்று சொல்ல, அங்கு இருப்பவர்களும் சரி என்று சொல்கிறார்கள்.
முத்து அந்த நேரத்தில் மீனாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு முத்துவை பார்த்ததும் மீனா கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார். மீனாவின் அம்மாவும் தங்கச்சியும் மன்னிப்பு கேட்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications