சிறகடிக்க ஆசை: முத்து குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விஜயா.. ரோகினி மூக்கை உடைத்த மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் வாரத்திற்கு ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து மீனா இடையில் இருக்கும் கருத்து வேறுபாடு பயன்படுத்தி அவர்களை பிரித்து வைத்துவிட விஜயா முயற்சி செய்கிறார்.
ஆனால் அண்ணாமலை இவர்கள் இருவரும் பிரிந்து விடக்கூடாது என்று முத்துவுக்கு அறிவுரை கூறுகிறார்.
அதே நேரத்தில் ரோகிணி தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டிக் கொண்ட நிலையில் அவருக்கு மீனா பதிலடி கொடுக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அடுத்த பிரச்சனைகளும் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே ரவி திருமணம் செய்ததற்கு காரணம் மீனாதான் என்று கோபத்தில் முத்து இருக்கிறார்.
அதோடு வீட்டை விட்டு துரத்திய மீனாவை வீட்டிற்கு சென்று தன்னுடைய தந்தைக்காக கூட்டி கொண்டு வந்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் வீட்டிற்கு வந்ததும் மீனாவிடம் உன்னை நான் என்னுடைய அப்பா சொன்ன ஒரே காரணத்துக்காக தான் கூட்டிட்டு வந்தேன். இனி உன்னோடு நான் வாழ மாட்டேன் என்றும் கூறியிருந்த நிலையில் அதற்கு முத்துவிற்க்கு அண்ணாமலை அறிவுரையும் கூறியிருந்தார்.

இப்படியாக இருக்கும் நிலையில் மீனா பூரி செய்து வைத்துவிட்டு அண்ணாமலையை சாப்பிட கூப்பிட அதைப் பார்த்து ரோகினியும் விஜயாவும் பிரச்சனை செய்திருந்தனர். ஏற்கனவே மாமாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இப்பதான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்துருக்காங்க. இதுல நீங்க எண்ணை ஐட்டமா கொடுத்து அவருக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்க வைக்கலாம்னு நினைக்கிறிங்களா?
இப்படி செஞ்சு கொடுத்ததால் கூட அவருக்கு இந்த நிலைமை வந்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அதற்கு மீனா நான் இது மாமாவுக்காக செய்யல. மாமாவுக்கு தனியா கஞ்சி செஞ்சு வச்சிருக்கேன். இது என் புருஷனுக்காக செஞ்சது என்று கூறி மீனாவிற்கு முகத்தடி கொடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியேறி இருக்கிறது. அதில் மீனா செய்த சாப்பாட்டு எனக்கு வேண்டாம் என்று சொல்லி முத்து நான் வேலைக்கு போகிறேன் என்று கிளம்ப அதற்கு அண்ணாமலை இருந்து உனக்காக உன் பொண்டாட்டி செஞ்ச சாப்பாடு. நீ இதை சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்கிறார்.
அதற்கு முத்து இல்லை எனக்கு வயிறு சரியில்ல நான் போகிறேன் என்று சொல்ல, அதற்கு விஜயா அதான் அவனே சொல்றானே, எனக்கு அந்த சாப்பாடு வேண்டாம் என்று அவன் இந்த சாப்பாடெல்லாம் இனி சாப்பிட மாட்டான் என்று ஏற்றி விடுகிறார். இவ கையால செஞ்சத இனி அவன் சாப்பிட மாட்டான் என்று நக்கலாக சிரிக்க அதை பார்த்து மீனா கோபப்படுகிறார்.

இந்த நிலையில் இதை வைத்து இனி அடுத்த வாரத்தில் புது பிரச்சனை வர இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ரவியை தன்னுடைய அப்பாவை பார்க்க விடாமல் மொத்த குடும்பமும் விரட்டி விட்டிருக்கும் நிலையில் இனி ஸ்ருதியோடு ரவி மீண்டும் வீட்டிற்கு வந்து எனக்கும் இந்த வீட்டில் பங்கு இருக்கிறது என்று கூடிய சீக்கிரத்தில் வர இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications