சிறகடிக்க ஆசை: மீனா அம்மாவால் ரோகினிக்கு வந்த சிக்கல்.. மனோஜ் கொடுத்த அதிர்ச்சி.. விஜயாவின் பிளான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் முத்துவின் பாட்டி தல தீபாவளிக்கு முத்து மீனா மற்றும் மனோஜ் ரோகினிக்கு பணம் அனுப்பி வைத்திருப்பதாக அண்ணாமலை கூறுகிறார்.

அதற்கு விஜயா, மீனா பண்ண தப்புக்கு ரவி என்ன பண்ணுவான் அவனுக்கும் இதுதான் தல தீபாவளி ரவியை நம்ம வீட்டுக்கு கூப்பிடலாமா என்று கேட்கிறார்.
அதை கேட்டதும் முத்து கோபப்பட்டு அவன் இந்த வீட்டுக்கு வரக்கூடாது ரவிக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்பாவை அவமானப்படுத்தியவன் யாருமே இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று கோபப்படுகிறார். அதோடு சேர்ந்து மனோஜ் ரவி நம்மளை விட பெரிய இடத்துல பொண்ணு எடுத்து இருக்கான்.

அதனால அவன் திரும்ப வந்து வீட்டுக்கு வந்தா நம்மளை மதிக்க மாட்டாங்க என்று மனதிற்குள்ளே யோசித்து அது இந்த வீட்டுக்கு வரவே கூடாது என்று சொல்கிறார். மீனாவின் அம்மா இந்திரா விஜயா வீட்டிற்கு வந்து மாப்பிள்ளையும் மீனாவையும் தல தீபாவளிக்கு கூப்பிடலாம்னு வந்திருக்கேன் என்று பூ பழம் எல்லாம் தாம்பலத்தில் வைத்து கொடுக்கிறார்.
அப்போது முத்து எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் வரல என்று சொல்ல அதற்கு அண்ணாமலை அதெல்லாம் இல்ல முத்து கண்டிப்பா வருவான், அனுப்பி வைக்கிறேன் என்று இந்திராவிடம் சொல்கிறார். அப்போது இந்திரா ரோகினியை பார்த்து நீ தல தீபாவளிக்கு உங்க அப்பா வீட்டுக்கு போகலையா? உங்க அப்பா மலேசியாவில் தானே இருக்காரு, என்று கேட்க அதனால் கோபமான விஜயா வந்த வேலையை மட்டும் பாரு எதுக்கு ரோகினி கிட்ட தேவையில்லாம கேக்குற என்று திட்டுகிறார்.

அதற்கு இந்திரா ரோகினியும் மனோஜூம் மலேசியாவுக்கு போகலன்னா அவர்களையும் விருந்துக்கு கூப்பிடலாம் என்று தான் நான் கேட்டேன் என்று விளக்கம் கொடுக்கிறார். பிறகு மனோஜ் நம்மளும் மலேசியாவுக்கு போகலாமா? உங்க அப்பா கூப்பிடலாம் பரவால்ல, நான் வருவேன் என்று சொல்ல அதை கேட்டு ரோகிணி பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.
அடுத்ததாக முத்துவும் மீனாவும் இந்திரா வீட்டிற்கு காரில் போய்க் கொண்டிருக்கின்றனர். போற வழியில் ஜவுளிக்கடையில் காரை நிறுத்தி முத்து மீனா கையில் பணத்தை கொடுத்து அப்பா பணம் கொடுத்தார். நீ போய் உனக்கு புடிச்ச புடவை எடுத்துக்கோ என்று சொல்ல, அதற்கு மீனா மாமா என்ன மட்டும் தனியாவா போக சொன்னார்? நான் போன் பன்ணி கேட்கவா என்று போனை எடுக்க உடனே முத்து சரி வந்து தொலைகிறேன் வா என்று ரெண்டு பேரும் கடைக்குப் போகின்றனர்.

அங்கு கடையில் வேலை பார்க்கும் ஆண் ஒவ்வொரு புடவையாக மீனா மேலே எடுத்து வைத்து இது நல்லா இருக்கான்னு பாருங்க. இது நீங்க கட்டுனா சினிமா ஹீரோயின் போல இருப்பீங்க என்று சொல்ல, அதனால் கடுப்பாகும் முத்து ஒரு புடவை எடுக்க எவ்வளவு நேரம் என்று ஒரு புடவை எடுத்து இது உனக்கு நல்லா இருக்கு வா போகலாம் என்று அங்கிருந்து கிளம்பி முத்துவுக்கு ஷார்ட் பேண்ட் எடுத்துக்கொண்டு காரில் போகின்றனர்.
அடுத்ததாக பைனான்சியர் ஆட்கள் முத்து காரை வழிமறித்து காருக்கு வட்டி கட்டாததால் அண்ணன் காரை தூக்கிட்டு வரச் சொன்னாரு என்று அவர்கள் சொல்ல முத்து என் பொண்டாட்டியை மட்டும் அவங்க வீட்டில் கொண்டு விட்டு வரேன் என்று சொல்கிறார். ஆனால் அதெல்லாம் முடியாது நாங்க இப்பவே காரை எடுத்துட்டு போகிறோம்.
நீ வந்து அண்ணன் கிட்ட பேசிக்கோ என்று முத்து மீனாவை கீழே இறக்கி விட்டுட்டு காரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். அதற்கு முத்து இதெல்லாம் உன்னாலதான் என்று மீனாவை நடுரோட்டில் திட்டிக்கொண்டே இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications