சிறகடிக்க ஆசை: ரவியை போலவே இக்கட்டான சூழ்நிலையில் ரோகினி எடுத்த முடிவு.. முத்துவிடம் உளறிய கிரிஷ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் பத்தாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் முத்து ரோகினியின் அம்மா மற்றும் மகனை வீட்டிற்கு கூட்டிட்டு வந்த நிலையில் கிரிஷ் தன்னுடைய அம்மா பற்றி உளறி விடுகிறார்.

அதே நேரத்தில் ரோகினி இனி தனி குடித்தனம் போக வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகினி தன்னுடைய அம்மாவை செக்கப்பிற்கு கூட்டிட்டு போய்விட்டு தன்னுடைய தோழியின் வீட்டிற்கு வருகிறார். அங்கு ரோகினியின் தோழி வித்யா கிரிஷ் கூட விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அம்மாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை சரியாகிவிட்டார்கள் ஆனால் ரொம்ப வேலை தான் பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லி அவங்களை இன்னைக்கு சாயங்காலமே ஊருக்கு கிளம்பி போங்க என்று சொல்கிறார்.

அதற்கு வித்யா இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போகட்டுமே என்று சொல்ல, அதற்கு முடியாது இவங்க எப்படியாவது வீட்டுக்கு அடிக்கடி வந்துகிட்டே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுக்கிட்டே இருக்கிறது. இங்கே இருந்துட்டே இருந்தா நான் மாட்டிக்கொள்வேன். அதனால சீக்கிரமா அவங்க ஊருக்கு போகணும் என்று முடிவில் உறுதியாக இருக்கிறார்.
அதை தொடர்ந்து ரோகினி தன்னுடைய அம்மாவிடம் கிரிஷ் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது உனக்கு அவனை பார்த்துக்க கஷ்டமா இருந்தா சொல்லு ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறேன் என்று ரோகினி சொல்ல, அவருடைய அம்மா நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது மட்டும் நடக்க விட மாட்டேன். நீ எப்படி இந்த மாதிரி யோசிக்கலாம் என்று கோபப்படுகிறார்.

பிறகு ரோகினி தன்னுடைய அம்மாவை சமாதானம் செய்து கையில் செலவுக்கு பணத்தை கொடுத்து வித்யாவிடம் ஒரு கேப் புக் பண்ணி இவங்களை பஸ் ஸ்டாண்ட் அனுப்பிவிடு என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். அதை தொடர்ந்து வித்யா தனக்கு தெரிந்த ட்ராவல்ஸ்சுக்கு போன் செய்து கார் புக் செய்ய அவர்கள் முத்துவை அந்த காருக்கு டிரைவராக போக சொல்கின்றனர்.
அங்கு வரும் முத்து ரோகினியின் அம்மா மற்றும் மகனைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டு பேசிக்கொண்டு அவர்களை காரில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு போகிறார். அவர்கள் வேண்டாம் பஸ்ஸுக்கு டைம் ஆகிவிட்டது என்று சொன்னாலும் கேட்காமல் மீனாவை சந்தித்து விட்டு போங்க என்று முத்து கூட்டிட்டு வர, மீனாவும் அவர்களுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு ஆட்டோவில் வரும் ரோகினி இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஒரு காரின் பின்னால் ஒளிந்துகொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்கிறார்.

அப்போது ரோகினியின் அம்மா என்னுடைய பொண்ணு சிங்கப்பூர் போய் இருக்கா என்று சொல்ல, அதைக்கேட்ட மீனா அன்னைக்கு துபாய் என்று சொன்னிங்களே என்று மடக்கி கேள்வி கேட்கிறார். அதைத்தொடர்ந்து ரோகினி அம்மா மீனாவை ஒரு வழியாக சமாளித்து விடுகிறார். பிறகு மீனா கிரிஷ் இடம் நீ கூட சொல்லாம போயிட்டியே என்று சொல்ல, அதற்கு கிரிஷ் எங்க அத்தை உங்க கூட பேச கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்று உளறி விடுகிறார்.
இதைக் கேட்டு மீனாவும் முத்துவும் அதிர்ச்சி அடைய அதற்கு ரோகினியின் அம்மா உங்க சொந்தக்கார பொண்ணை தான் சொல்றான் என்று சமாளிக்கிறார். பிறகு மீனா ரோகினியின் அம்மாவையும் மகனையும் வீட்டிற்குள் கூப்பிட ரோகினி பயத்தில் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications