சிறகடிக்க ஆசை: நம்பிக்கை துரோகம் செய்த ஸ்ருதி- ரவி.. பிரிய போகும் முத்து- மீனா.. விஜயாவுக்கு பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் 17ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் ஸ்ருதி தன்னுடைய குடும்பத்தையும் அதுபோல ரவி,மீனாவையும் ஏமாற்றிக்கொண்டு கோவிலில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கின்றனர்.

அதில் ரவியின் திருமணத்திற்கு மூல காரணமாக மீனாவின் தங்கை இருக்கும் நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

இந்த வகையில் எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் போனில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தான் காரில் படுத்து தூங்க போகிறேன் என்று முத்து சொல்ல, அதற்கு மீனா எப்படி காரில் தூங்க முடியும்? நீங்களும் ரூம் போட்டுக்கோங்க என்று சொல்ல, இது பெரிய பணக்காரங்க இருக்கிறது. அங்கே நம்மால் ரூம் போட முடியாது. நீ பேசிக்கிட்டே இரு நான் தூங்கி விடுவேன் என்று சொல்ல மீனா பேசியே முத்துவை தூங்க வைத்து விடுகிறார்.

அதே நேரத்தில் ஸ்ருதி கல்யாணத்துக்கு எப்படி வெளியே போகலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய அப்பா அம்மாவிடம் ரவியோட அப்பா அவனை என்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அவன் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டான் என்று சொல்லி அழுது நடிக்க அதை பார்த்த ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் மிடில் கிளாஸ் பையன் இப்படித்தான் இருப்பான்.

நாங்க தான் ஏற்கனவே சொன்னமே என்று சொல்லுகின்றனர். அதைத்தொடர்ந்து நாங்க பார்த்த மாப்பிள்ளை தான் உனக்கு சரியா வருவான் என்று அவர்கள் அட்வைஸ் செய்ய, அதற்கு ஸ்ருதியும் ஆமாம் நானும் ஷாப்பிங் போனப்பவே புரிஞ்சுகிட்டேன்பா. அப்போ நாளை என் பிரண்டு கல்யாணத்துக்கு பிஜூவுடன் போயிட்டு வரேன். அவரும் வரேன்னு சொல்லி இருக்கிறார் என்று பேச அதை கேட்டு ஸ்ருதியோட அம்மா நீயா பேசுற என்னால நம்பவே முடியல என்று ஆச்சரியப்படுகின்றார்.

bigg boss tamil season 7 October 17th Promo 1 and fans reaction

அந்த நேரத்தில் வீட்டிற்கு வரும் பிஜூ ஸ்ருதிக்கு மோதிரத்தை பரிசாக கொடுக்கிறார். அதோடு நானே கல்யாணத்திற்கு கூட்டிட்டு போயிட்டு வருகிறேன் நீங்கள் எல்லாம் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். அதே நேரத்தில் சீதா தன்னுடைய அம்மா கோயிலுக்கு வரக்கூடாது என்பதற்காக அவரை மேல்மருவத்தூர் கோயிலுக்கு பணம் கட்டி விட்டு வருவதாக அனுப்பி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து ரவி மீனாவிடம் ஸ்ருதி என்னை கல்யாணம் பண்ணிக்கணும் என்று பிடிவாதமா இருக்கா. அப்பாவின் நம்பிக்கையும் என்னால கெடுக்க முடியாது. என்ன செய்யறதுன்னு தெரியல என்று ஃபீல் பண்ணி பேசுகிறார். இதை கேட்ட மீனா நான் ஸ்ருதியிடம் பேசுகிறேன் என்று வெள்ளந்தியாக ரவியை நம்பி பேசுகிறார்.

அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் காலையில் ரவி கோவிலுக்கு கல்யாணத்திற்காக கிளம்ப அப்போது தலையில் இடித்துக் கொள்கிறார். அதை பார்த்து பதறிப்போன அண்ணாமலை அவரை உட்கார வைத்து தேய்த்து விடுகிறார். மீனாவும் கோவிலுக்கு கிளம்பு போவதாக விஜயாவிடம் சொல்ல அதற்கு விஜயா உங்க அம்மாவை தான பாக்க போற என்று கேள்வி கேட்கிறார்.

அதனால் ஒரு நிமிடம் மீனா அதிர்ச்சியாகி விட்டு பிறகு கோயிலுக்கு கிளம்பி போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடையும் நிலையில் நாளைக்கு என்று போடப்பட்ட வீடியோவில் ஸ்ருதிக்கும் ரவிக்கும் திருமணம் முடிந்து விடுகிறது. அதை பார்த்த மீனா அதிர்ச்சி ஆகி ரவி என்று கூப்பிட அனைவரும் திகைத்துப் போய் நிற்கின்றனர். இப்படியான காட்சிகள் அதில் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+