சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு பங்க்ஷனில் அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை.. ஆடிப்போன குடும்பத்தினர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் திருமண நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிசினஸ்மேன் ரோகிணி மற்றும் மனோஜ்க்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். அப்போது அண்ணாமலை யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு எல்லா வேலைகளையும் பரபரப்பாக செய்து கொண்டிருக்கிறார். அப்போது முத்துவின் போன் கீழே விழுந்து விட்டதால் ரோகிணி அந்த போனை கொடுங்க ஏதாவது ஆகியிருக்கா என்று பார்க்கிறேன் என்று சொல்ல, அதற்கு முத்து வேண்டாம் நானே பாத்துக்கிறேன் போனுக்கு ஒன்னும் ஆகல என்று சொல்லி விடுகிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சியில் நிற்கிறார்.

அந்த நேரத்தில் மும்பையில் இருந்து பிசினஸ்மேன் வருகிறார். அவரை மனோஜ் பொக்கே கொடுத்து வரவேற்கிறார். பிறகு தான் அதிகமாக படித்திருப்பதாக அந்த நபரிடம் மனோஜ் பெருமையாக பேசி கொண்டு இருக்க, அதற்கு அவர் படிப்பு ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது. உண்மையான உழைப்புதான் பெரிய விஷயம் என்று மனோஜை நோஸ்கட் செய்கிறார்.
மனோஜ் அந்த நபரை உள்ளே கூட்டிக்கொண்டு செல்ல அவர் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்துவை கூப்பிட்டு அவரை மனோஜ் அறிமுகம் செய்து வைக்க முத்துவுக்கு முதலில் அவர் பேசுவது எதுவும் புரியவில்லை. பிறகு ஒரு மாதிரியாக சமாளித்து எனக்கு 50 கார் இருக்கிறது விரைவில் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிசினஸ் விரிவு பண்ண போகிறேன் என்று சொல்கிறார்.

அடுத்ததாக மீனா பற்றி விசாரிக்க மீனா பூந்தோட்டம் வைத்து பிசினஸ் செய்வதாக சொல்ல, அதைப்பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த நபர் பூக்களை பற்றி கேட்டதும் மீனா உங்களுக்கு எத்தனை முழம் பூ வேண்டும் என்று என்று உளற, முத்து அவங்க ஸ்டாப் கிட்ட சொல்லி கட்டி தருவாங்க என்று சமாளிக்கிறார். பிறகு ரவி ஸ்ருதியால் மனோஜ் அறிமுகம் செய்கிறார்.

ரவி பெரிய ரெஸ்டாரன்ட் வைத்திருக்கிறார் அதுவும் இந்த வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பா உங்களுக்கு என்று அந்த நபர் பாராட்டுகிறார். அதுபோல ஸ்ருதி ஸ்டுடியோ வைத்திருப்பதாகவும் மனோஜ் அடித்து விடுகிறார். அதோடு அண்ணாமலை பெரிய பிசினஸ்மேன் என்று சொன்னதும் அண்ணாமலை அதிர்ச்சியாகி முழித்துக் கொண்டிருக்கிறார். உடனே அங்கிருந்து சமாளித்து அந்த நபரை கூட்டிக்கொண்டு விஜயாவிடம் செல்லும் மனோஜ் தன்னுடைய அம்மா ஒரு பெரிய டான்ஸ் அகாடமி வச்சிருக்காங்க என்று பொய் மேல பொய்யே அடுக்கிக் கொண்டே போகிறார்.
அதற்குப் பிறகு ஸ்ருதியின் அம்மா உட்பட பலர் வந்ததும் மனோஜியும் ரோகிணியும் கேக் கட் பண்ணுகின்றனர். அப்போது அண்ணாமலை தன்னுடைய குடும்பத்தை பற்றி பெருமையாக பேசுகிறார். நான் என்னுடைய பிள்ளைகளை எந்த இடத்திலும் பொய் சொல்லக்கூடாது என்று தான் வளர்த்து இருக்கிறேன்.

அவர்கள் உண்மையான உழைப்பை நம்பி வளரனும் என்று சொல்லிக் கொண்டிருக்க, வீட்டில் எல்லோரும் ஒருவரை மாற்றி ஒருவர் திருதிருவென முழிக்கிறார்கள். அந்த நேரத்தில் அந்த பிசினஸ்மேன் ரோகிணி மற்றும் மனோஜ்க்கு ஒரு கிப்ட் கொடுத்துவிட்டு நான் இன்னொரு கிப்ட் கொடுக்கப் போகிறேன் நான் பிசினஸ் பண்ணுவதற்காக தான் இங்கே வந்தேன் என்னுடைய பிசினஸ் டீலர்ஷிப் முழுவதையும் மனோஜ்க்கு கொடுக்கப் போறேன் என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

இறுதியில் மனோஜின் பார்க் நண்பர் சரக்கு பாட்டிலை கொண்டு செல்ல முத்து அதை குடிக்கலாம் என்று மனம் சஞ்சல பட்டு கொண்டு இருக்கும் போது மீனா முத்துவை வீட்டிற்கு கிளம்பலாம் என்று சொல்கிறார். ஆனால் முத்து வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது விஜயா அண்ணாமலை எல்லாரும் செல்ல அவர்களோடு முத்துவும் மீனாவும் கிளம்ப போகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications