சிறகடிக்க ஆசை: அம்மாவே மீனாவிடம் சொன்ன வார்த்தை.. ஸ்ருதியால் குடும்பத்திற்கு வரும் புது பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 25ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் முத்து வீட்டை விட்டு விரட்டியதால் மீனா அம்மாவின் வீட்டிற்கு செல்ல அங்கு அம்மாவும் வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்.

அதே நேரத்தில் ஸ்ருதி தன்னை ஏமாற்றியதால் ஸ்ருதியை பழிவாங்குவேன் என்று பிஜு கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் மீனாவின் அம்மா சீதாவை போட்டு அடித்து உன்னால இப்போ உங்க அக்கா வாழ்க்கையே கெட்டுப்போச்சு. அங்கு அவ நிலைமைய நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று அழுது கொண்டிருக்க, அந்த நேரத்தில் மீனா வீட்டிற்கு வந்து நான் என்ன பண்றதுன்னு தெரியல. என்ன வீட்டுக்குள்ளேயே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அவரும் என் முகத்துல முழிக்காதேன்னு சொல்லிட்டாரு என்று அழுது புலம்புகிறார்.
அப்போது மீனா அம்மா இதைத்தான் நடந்திட கூடாதுன்னு நான் பயந்தேன். ஆனா அப்படியே நடந்திடுச்சு என்று சீதாவையும் மீனாவின் தம்பி சத்யாவையும் திட்டுகிறார். உங்க ரெண்டு பேரால அவ வாழ்க்கையில் தான் அடிக்கடி பிரச்சினை வந்துகிட்டே இருக்கு என்று அழுது கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் ரவி வருத்தமாக வெளியே நின்று கொண்டிருக்க அப்போது ஸ்ருதி உன்னுடைய மனநிலையை எப்படி மாத்தணும் என்று எனக்கு தெரியும் என்று ரொமான்ஸாக பேசி பார்க்கிறார்.
அதற்கு ரவி எனக்கு வீட்டு நினைப்பாகவே இருக்கிறது என்றும் நம்மளால அண்ணி பாதிக்கப்பட்டிருக்காங்க என்றும் சொல்ல, அதற்கு ஸ்ருதி நான் நம்ம வீட்ல உள்ளவங்க தான் நம்மளை புரிஞ்சுக்கல நம்மளுக்கு உங்க அண்ணியோட பிளசிங்காவது கிடைச்சா நல்லா இருக்கும் என்று நினைத்து அவங்கள கோவிலுக்கு வரச் சொன்னேன்.

ஆனா இப்படி ஆகும்னு நாம நினைக்கல சரி இதை பற்றியே பேசிகிட்டு இருந்தா எதுவும் மாறப்போறது இல்ல, இன்னும் கொஞ்ச நாளைக்கு இதை பத்தி எல்லாரும் பேசிட்டு இருப்பாங்க பிறகு சரியாகிவிடும் என்று முதலிரவுக்கு ஏற்பாடு செய்வதற்காக அது பற்றி ஸ்ருதி பேசிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் தங்களுடைய நிலைமையை பற்றி வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
எல்லோரும் போன் பண்ணி நம்மை அவமானப்படுத்துறாங்க என்று பேசிக் கொண்டிருக்கும்போது பிஜூவும் அவருடைய அப்பாவும் வீட்டிற்கு கோபமாக வந்து உன்னால எங்களுடைய மானம் மரியாதை எல்லாம் போச்சு என்று திட்டி, நீ தூக்கு மாட்டிட்டு தொங்க வேண்டியதுதானே என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.
மேலும் இந்த கல்யாணத்துக்காக நாங்கள் 5 லட்சம் ரூபா செலவு பண்ணி இருக்கோம் அந்த பணத்தை எடுத்து வை என்று கேட்க அதற்கு ஸ்ருதியின் அப்பா செக் எடுத்துட்டு வந்து கொடுக்கிறார். இனிமேல் என் முகத்தில் முழிக்காதே என்று கோபமாக அவர் திட்டி விட்டு கிளம்ப வெளியே வந்ததும் பிஜு அந்த ஸ்ருதியை நான் சும்மா விடமாட்டேன் என்று கோபப்படுகிறார்.
அதை தொடர்ந்து மீனாவின் அம்மா, நீ இங்க இருந்தா நீ தான் தப்பு பண்ணுன மாதிரி ஆகும் உன் வீட்டுக்கு போ அங்க அழுது புலம்பு உன் பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொல்லு அண்ணாமலை அண்ணனிடம் மன்னிப்பு கேள் இல்லனா உன் வாழ்க்கை அவ்வளவுதான். இனி உன்னுடைய வாழ்க்கையை மட்டும் நீ யோசி அடுத்தவர்களுக்காக நீ எதுவும் செய்யாத என்று சொல்லி மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்துவிட்டு வாசலில் நின்று மீனாவின் அம்மாவும் அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications