சிறகடிக்க ஆசை: போனை தூக்கிய ரோகிணி.. உண்மைகளை உளறிய முத்து.. அண்ணாமலை எடுத்த எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவின் செல்போனை ரோகிணி தூக்கி விட்டார். அதே நேரத்தில் மனோஜ் பற்றிய உண்மைகளை முத்து பிசினஸ் மேனிடம் சொல்லி விடுகிறார். இனி என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மும்பையில் இருந்து வந்த பிசினஸ்மேன் சந்தோஷ் உடன் எல்லோரும் பார்ட்டியில் சந்தோஷமாக இருக்கின்றனர். அப்போது முத்துவும் அவரும் நெருக்கமாகி விடுகின்றனர். கண்ணதாசன் பாட்டை சொல்லி இருவரும் குளோஸ் ஆனதும் இருவரும் பாட்டு பாடி எல்லோரையும் கலகலப்பாக வைத்திருக்கின்றனர்.

இறுதியில் கண்ணதாசன் ரசிகர்கள் சூதுவாது தெரியாதவர்கள், பொய் சொல்ல மாட்டார்கள் என்று சந்தோஷ் சொன்னதும் முத்து அதிர்ச்சியாகி விடுகிறார். அவர் அமைதியாக இருப்பதை பார்த்து சந்தோஷ் என்ன நடந்தது என்று கேட்க தனக்கு நீங்க சொன்ன வார்த்தை குத்திவிட்டது. நாங்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள்.
என்னுடைய அண்ணன் பிசினஸில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி குடும்பமா பொய்யாக நாடகம் ஆடினோம். எனக்கு ரெண்டு கார் மட்டும் தான் இருக்கிறது. என்னுடைய தம்பி ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கிறார் என்று மொத்த உண்மைகளையும் உடைத்த முத்து என்னுடைய அண்ணன் நிச்சயம் உழைப்பால் முன்னேறுவான் என்று சொல்லி விடுகிறார்.

இதனால் சந்தோஷ் என்ன சொல்ல போகிறார் என்று மனோஜ் அதிர்ச்சியில் பயந்து, முத்துவை சாப்பிட போகுமாறு அந்த இடத்திலிருந்து கிளம்பி போக சொல்ல அதற்கு சந்தோசஷ் முத்துவின் நேர்மையை பாராட்டி மனோஜுக்கு அந்த பிசினஸை கொடுத்து விடுகிறார். இதனால் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
பிறகு முத்து, ரவி, மனோஜ் எல்லோரும் குடித்து போதையில் தடுமாறிக் கொண்டிருக்க அவர்களை ரோகிணி, ஸ்ருதி, மீனா எல்லோரும் பிடித்துக் கொண்டு லிப்ட் வழியாக வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகின்றனர். அப்போது லிப்டில் வைத்து ரோகிணி முத்துவின் போனை எடுத்து மனோஜ் பாக்கெட்டுக்குள் போட்டு விடுகிறார்.

அடுத்ததாக வீட்டு வாசலில் வந்து கதவை தட்ட எல்லோரும் நிற்பதை பார்த்து அண்ணாமலை இவர்கள் மூன்று பேரும் குடித்துட்டு வந்திருக்காங்க என்று திட்டுகிறார். அதோடு ஸ்ருதி, மீனா, ரோகிணி மூன்று பேரு மட்டும் வீட்டுக்குள்ள வர சொல்லிட்டு முத்து, ரவி, மனோஜ் வெளியவே படுத்து உறங்குமாறு சொல்கிறார். இதை கேட்ட விஜயா மனோஜும், ரவியும் வெளியே குளிருக்குள் படுக்க மாட்டாங்க என்று சொல்ல அதற்கு மீனா முத்து மட்டும் தூங்குவாரா? என்று கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications