Siragadikka aasai promo: என் பேரன் அனாதை இல்ல! ரோகிணி அம்மா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முத்து, மீனா ரோகிணியின் மகன் கிரிஷை தத்தெடுப்பதற்கு அவருடைய பாட்டி முடியாது என்று குடும்பத்தினர் அனைவரும் முன்பும் சண்டை போட்டிருக்கிறார்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் பெரிய பிரச்சனை ஒன்றுக்கு முற்று புள்ளி வந்திருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் ஒவ்வொரு முறையும் ரோகிணி தான் ஜெயித்து கொண்டிருக்கிறார். ரோகிணி எவ்வளவு தப்பு செய்தாலும் அவர் மட்டும் மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் தற்போது சீரியல் கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது மீனாவின் தம்பியான சத்யா ஏற்கனவே விஜயாவிடம் இருந்து நகைகளை திருடிய வீடியோ முத்து ஃபோனில் இருக்கும் நிலையில் அதை சிட்டி இணையத்தில் அப்லோடு செய்ய சொல்லி ரோகிணியை மிரட்டி இருக்கிறார். நீங்கள் முத்து ஃபோனில் இருக்கும் வீடியோவை லீக் செய்து விட்டால் நான் உங்களை மிரட்டும் பழைய பிஏ தினேஷை உங்கள் பக்கம் வரவிடாமல் செய்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.
இதனால் ரோகிணி தனக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக முத்து ஃபோனில் இருக்கும் வீடியோவை லீக் செய்வதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் முத்துவின் ஃபோனில் இருக்கும் வீடியோவை அப்லோட் செய்யும் போது முத்துவும் மீனாவும் வந்துவிட தெரியாமல் போன் கீழே விழுந்து உடைந்து விடுகிறது. இதனால் முத்து மீனா இந்த முறையும் பிரச்சனையில் சிக்குவார்களா? இல்லையா? என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் தற்போது நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் மகனை கொலு பங்ஷனுக்காக மீனாவும் முத்துவும் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றனர். அப்போது க்ரிஷ்க்கு கிருஷ்ணர் வேஷம் போட்டு குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நீ எங்க வீட்டிலேயே இரு நாங்க உன்ன நல்லா பாத்துக்குறோம், உன்னை நாங்க தத்தெடுத்துகிறோம் என்று முத்து கொஞ்சுகிறார்.
இதை பார்த்து கோபமான ரோகிணியின் அம்மா நானும் வந்ததிலிருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன், நீங்க என்ன பேசுறீங்க? என் பேரன் அனாதை கிடையாது. அவனுக்காக நான் இருக்கிறேன், என் பொண்ணு இருக்கிறா.. ஆனா நீங்க உங்க இஷ்டத்துக்கு அவனை தத்தெடுக்க போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று கோபமாக திட்டி விட்டு குழந்தையை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு போகிறார்.

இதை பார்த்து மீனா அழுது கொண்டிருக்கிறார். ரோகிணி சந்தோஷப்படுகிறார். அதுபோல இதற்கிடையில் க்ரிஷை பார்த்ததும் ரோகிணி கட்டிபிடித்து முத்தம் கொடுத்து இருந்தார். அதை மீனா கவனித்து இருந்தார். இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications