சிறகடிக்க ஆசை: முத்துவிடம் மாட்டிக்கொள்ளும் ரோகினியும், அம்மாவும்.. மீனா சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் முத்துவின் தம்பி ரவிக்கு சீதாவை திருமணம் செய்து தர முடியாது என்று மீனாவின் அம்மா சொல்லி விடுகிறார்.

அதே நேரத்தில் ரவிக்கு ஸ்ருதி மூலமாக புதிய பிரச்சனை வருகிறது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் எபிசோடு ஆரம்பத்தில் முத்து ரவிக்காக சீதாவை மீனாவின் அம்மாவிடம் பெண் கேட்க, அதற்கு அவர் வேண்டாம் மாப்பிள்ளை இந்த கல்யாணம் நடக்காது என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதற்கு என்ன அத்தை என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்று ரவி கேட்கிறார்.
அதற்கு சீதாவின் அம்மா கல்யாணமான பிறகு முக்கால்வாசி நேரம் மாமியாரோட தான் ஒரு பொண்ணு இருக்கணும். அப்படி இருக்கும்போது அந்த மாமியார் நல்லா அமையலனா அவங்களுக்கு வாழ்க்கை தண்டனையாகவும் போராட்டமாக தான் இருக்கும். ஏற்கனவே மீனா நிறைய கஷ்டப்படுறா. ஆனா அவ எதையும் சொல்றது கிடையாது. நான் என்னுடைய இன்னொரு பொண்ணையும் அனுப்பி கஷ்டப்பட வைக்க விரும்பல என்று சொல்ல, அதற்கு கோபமான முத்து அப்போ என் வார்த்தைக்கு அவ்வளவுதான் மரியாதையா என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

அடுத்து வெளியே வந்ததும் மீனா முத்துவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். அப்போது முத்து மீண்டும் மீண்டும் சீதாவுக்கும் ரவிக்கும் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து மறுபக்கம் ஸ்ருதி வீட்டில் அவருடைய அம்மாவும் அப்பாவும் கல்யாணம் வேகமாக வைக்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி நான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லல, நீங்க சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.
ஆனா இந்த கல்யாணத்தை கொஞ்ச நாள் தள்ளி போடுங்க என்று சொல்ல, அதற்கு ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் அதற்கு வாய்ப்பே இல்லை. பிளான் பண்ண மாதிரி கல்யாணம் நடக்கும் என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர். அதைத்தொடர்ந்து ஸ்ருதி ரூமிற்கு வந்து யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் டப்பிங் பேசிய சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதை பார்த்துட்டு ரவிக்கு போன் பண்ணி கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் ரவி ரெஸ்டாரண்டுக்கு கிளம்பி கொண்டிருக்கும்போது முத்துவும், மீனாவும் வீட்டிற்கு வருகின்றனர். முத்து திரும்பவும் அந்த பொண்ணு கிட்ட பேசுற வேலை வச்சுக்காத என்று ரவியை எச்சரித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி போன் செய்ய ரவி போனை எடுக்காமல் கட் பண்ணி விடுகிறார். பிறகு ரெஸ்டாரண்ட் கிளம்பியதும், முத்து ரவிக்கு போன் பண்ணுனது அந்த பொண்ணு தான் ஆனால் அவன் போனை எடுக்கல கொஞ்சம் கொஞ்சமா நம்ம வழிக்கு வரான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதை தொடர்ந்து சீக்கிரமா ரவிக்கு சீதா மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடனும் என்று ஃபேன் போட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ரவி போனை எடுக்காததால் நேரடியாக ரெஸ்டாரண்டுக்கு வந்து எனக்கு ஒரு பதில் கிடைக்காமல் நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று ஹோட்டலில் உட்கார்ந்து கொள்கிறார். அதை பார்த்து ரவி அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications