சிறகடிக்க ஆசை: அம்மா, பையனோடு அண்ணாமலையிடம் சிக்கிய ரோகிணி.. எதிர்பாராத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அண்ணாமலையிடம் ரோகிணி அவருடைய அம்மா மற்றும் மகனோடு சிக்கி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரூ. 2 லட்சம் பிரச்சனை இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாகவே பணப்பிரச்சனை இந்த சீரியலில் வந்து கொண்டே இருந்தது. ரோகிணியை சிட்டி இரண்டு லட்சம் பணம் கேட்டு மிரட்டி இருந்தார். அதே நேரத்தில் சத்யா மீது விஜயா கேஸ் கொடுத்ததை வாபஸ் வாங்க வைப்பதற்கு வக்கீல் முத்து மீனாவிடம் 5 லட்சம் பணம் கேட்டிருந்தார்.

television siragadikka aasai serial vijay tv

அந்த ஐந்து லட்சம் பணத்தில் வக்கீல் விஜயாவிற்கு இரண்டு லட்சம் பணம் கொடுத்திருந்தார். அந்த ரெண்டு லட்சம் பணத்தை பார்வதி வீட்டில் வைத்து ரோகிணி திருடி விட்டார். ரோகிணி திருடிய பிறகு பணப்பிரச்சனை வீட்டில் பூதாகரமாக வெடித்ததும் கேஸை வாபஸ் வாங்குவதற்காக விஜயா 2 லட்சம் வாங்கிய விஷயம் அண்ணாமலைக்கு தெரிய வருகிறது.

உடனே அவர் முத்து மீனாவிற்கு உன்னால் 5 லட்சம் கடன் வந்துவிட்டது. நீ தான் கடனை அடைக்க வேண்டும் என்று சொல்கிறார். அதனால் விஜயா மனோஜிடம் பணம் கேட்கிறார். அதற்கு ரோகிணி நான் மூன்று லட்சம் பணம் தருகிறேன் என்று சொல்லி பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

பிறகு பார்வதி வீட்டில் இருந்து காணாமல் போன இரண்டு லட்சத்திற்காக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக பார்வதியிடம் தன்னுடைய நகைகளை விற்று 2 லட்சம் பணம் கொடுக்கிறார். இப்படி மூன்று நாட்களாக சுற்றி சுற்றி பண பிரச்சனை வந்து கொண்டே இருந்தது.

ரசிகர்களுக்கு பெரும் குழப்பமே ஏற்படும் வகையில் போட்டு குழப்பி அடித்திருந்தார்கள். இதைத் தொடர்ந்து நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இருக்கிறது. அதாவது அண்ணாமலை நான் இனி வேலைக்கு போகிறேன் என்று இன்றைய எபிசோடில் சொல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு முத்துவும் மீனாவும் வேண்டாம் என்று தடுக்கிறார்கள். ஆனால் மனோஜும் விஜயாவும் வேலைக்கு போறது ஒன்னும் தப்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் அண்ணாமலை தன்னுடைய நண்பர் பரசு மூலமாக ஒரு இடத்தில் வேலைக்கு கேட்டிருக்கிறார். அங்கு அண்ணாமலை இன்டர்வியூ சென்று இருக்கும்போது அந்த நபர் நீங்கள் வாரத்தில் ஒரு நாள் வந்து வேலை பார்த்தால் கூட போதும் இந்த வயதிலும் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீங்க அது நல்ல முயற்சி என்று அவரை பாராட்டுகிறார்.

பிறகு அண்ணாமலை அங்கிருந்து வெளியே வரும் நேரத்தில் ரோகிணி தன்னுடைய அம்மா மற்றும் மகனை கூட்டிக்கொண்டு வருகிறார். ரோகிணியின் மகன் க்ரிஷ் ஆட்டோவில் இருந்து ஓடி வருகிறார். அங்கு அண்ணாமலை நிற்பதை பார்த்து அதிர்ச்சியாகி நிற்கிறார். இது தெரியாமல் ரோகிணியும் அவருடைய அம்மாவும் ஆட்டோவில் இருந்து இறங்குகின்றனர்.

இவர்கள் அனைவரையும் அண்ணாமலை பார்த்தால் ரோகிணி மீது சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வழக்கம்போல ரோகிணி இந்த முறையும் தப்பித்து விடுவாரா? அல்லது அண்ணாமலையிடம் வசமாக சிக்க போகிறாரா? என்று நாளைய எபிசோட்டில் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+