சிறகடிக்க ஆசை அப்டேட்: அண்ணாமலைக்கு தெரிந்த வீட்டு பத்திரம் உண்மை.. சிந்தாமணி சுயரூபம்! பாவம் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை ஏப்ரல் 23ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எல்லோரும் எதிர்பார்த்தபடியே விஜயா மற்றும் மனோஜ் இருவரும் குடும்பத்திற்கு தெரியாமல் செய்த சதி திட்டங்கள் எல்லாம் இப்ப மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. அதாவது சிந்தாமணியின் சுயரூபத்தை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் பல மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் கதை வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. ஒரு பக்கம் சத்யா மற்றும் ரேகாவின் கல்யாணத்தில் என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் மனோஜின் இரண்டாவது கல்யாணம் ஏற்பாடுகளும் நின்று போய்விட்டது.
மனோஜும் விஜயாவும் கோர்ட்டில் நடந்த விஷயங்களை குடும்பத்திடம் சொல்லாமல் மறைத்த நிலையில் மொத்த உண்மைகளையும் ரோகிணி மூலமாக அமெரிக்க பெண்ணான ஹரிணி தெரிந்து கொண்டிருக்கிறார். இதனால் தன்னுடைய குடும்பத்திடம் இந்த விஷயத்தை சொல்லி மொத்த குடும்பமும் வந்து அண்ணாமலை மற்றும் விஜயாவை அசிங்கப்படுத்திவிட்டு போயிருக்கின்றனர்.
வருத்தத்தில் அண்ணாமலை
இதனாலேயே அண்ணாமலை கடும் கோபத்தில் இருக்கிறார். நான் இதுவரைக்கும் யாரிடமும் எந்த பொய்யும் சொன்னதில்லை, யாரையும் ஏமாற்ற நினைத்ததில்லை. ஆனால் நீ சொன்ன பொய்யால் நான் இன்னைக்கு தலை குனிந்து நிற்கிறேன் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். அதே நேரத்தில் ஹரிணி மனோஜிடம் ரோகிணி உங்களை ரொம்ப சின்சியரா லவ் பண்றாங்க, உங்களுக்காக தான் அவங்க இவ்வளவு போராடிக்கிட்டு இருக்காங்க அவங்கள தவிர உங்களுக்கு இன்னொரு பொண்ணு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லிட்டு போயிருக்கிறார்.
இதனால் மனோஜ் ரோகிணி தனக்காக செய்த நல்ல விஷயங்களை எல்லாம் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நிலைமை இப்படி கொண்டு இருக்கும்போது தற்போது வெளியான ப்ரோமோவில் விஜயா மற்றும் மனோஜ் இருவருக்கும் மீண்டும் பெரிய சிக்கலை கொடுத்திருக்கிறது.

மாட்டிக்கொண்ட விஜயா
அதாவது குடும்பத்திற்கு தெரியாமல் சிந்தாமணியின் பேச்சைக் கேட்டு விஜயாவும் மனோஜும் பேங்கில் இருந்த பத்திரத்தை போலி கையெழுத்து போட்டு வாங்கி அதை பைனான்சியரிடம் கொடுத்து கடன் வாங்கி இருந்தனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மீனாவை கத்தியால் குத்தியது சிந்தாமணியின் ஆள்தான் என்று முத்து கண்டுபிடித்திருக்கிறார். இதனால் முத்து கொடுத்த புகாரால் சிந்தாமணியை போலீஸ் அரெஸ்ட் செய்து இருக்கின்றனர்.
சிந்தாமணியின் சுயரூபம்
இதனால் முத்து குடும்பத்தை பழி வாங்குவதற்காக சிந்தாமணி புது ப்ளான் போட்டு இருக்கிறார். அதாவது ஜெயில் இருந்து வெளியே வந்ததும் அந்த பைனான்சியரை கூட்டிக்கொண்டு அண்ணாமலை வீட்டிற்கு வந்து பேங்கில் இருந்த பத்திரத்தை போலி கையெழுத்து போட்டு வாங்கி தங்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கிய விஷயத்தை போட்டுக் கொடுக்கின்றனர். இதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
அப்போது அண்ணாமலை மனோஜிடம் நீ ஏற்கனவே என்னுடைய சம்பாத்திய பணத்தை எடுத்துட்டு ஓடிப்போன அதுகூட மன்னிச்சிட்டேன். இப்போ என்னுடைய கையெழுத்தை போட்டு நீ இன்னும் என்ன அசிங்கப்படுத்திட்ட என்று போட்டு அடிக்கிறார். மேலும் அவருக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

ஆனாலும் மனோஜியையும் விஜயாவையும் அண்ணாமலை வீட்டை விட்டு துரத்துவார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரைக்கும் சிந்தாமணி நல்லவங்க என்று நினைத்துக் கொண்டிருந்த விஜயாவிற்கு சிந்தாமணியின் சூழ்ச்சி தெரியுமா? அல்லது இந்த முறையும் சிந்தாமணியின் நடிப்பை பார்த்து ஏமாறப் போகிறாரா? என்பதும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே ரோகிணிக்கு ஆறு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு ஆர்டர் கொடுத்திருக்கிறது. இதற்கு இடையில் இப்போ இந்த கடன் பிரச்சனை வேற பூதாகரமாக வெடிக்கிறது. இனி மனோஜும் விஜயாவும் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications