சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு வந்தாச்சு பெரிய ஆப்பு.. வாயால் வந்த வினை.. முத்து செய்ய போகும் சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி தன்னை ஏமாற்றிய கதிரை கண்டுபிடிக்கிறார். ஆனால் எதிர்பார்க்காத சம்பவம் நடக்கிறது அது பற்றி பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போதுதான் மாட்டுவார் என்று வாராவாரம் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வார இறுதி நாள் ப்ரோமோவில் மட்டும் ரோகிணிக்கு ஏதாவது புது பிரச்சனை வருவதுபோன்று காட்டப்படுகிறது. ஆனால் கடைசியில் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. வழக்கம் போல தான் என்று ஏமாற்றி விடுகிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

முத்து மனோஜ் சண்டை

இன்றைய எபிசோடில் செல்வமும் அவருடைய மனைவியும் வீட்டிற்கு வந்து சாப்பிட வந்தபோது மனோஜ் திட்டி அவர்களை அசிங்கப்படுத்தி இருந்தார். முத்து அப்போது அவரை அடிக்கப் போகும் போது உனக்கு இப்போ என்ன கொல்லனுமாடா? நீ ஏற்கனவே ஜெயிலுக்கு போனவன் தானே என்று திட்டி இருந்தார். இதனால் முத்து அவரை கத்தி எடுத்து குத்த போனார். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா வந்து அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

முத்து பற்றிய ரகசியம்

முத்துவை பற்றி மனோஜ் திட்டியதால் முத்து பற்றிய ரகசியம் அடுத்ததாக வரும் என்று எதிர்பார்த்தால் அதற்குப் பிறகு சண்டை மறந்து எல்லோரும் விளையாடி இருந்தனர். அதுதான் இன்றைய எபிசோடில் நடந்தது. ஆனால் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் அண்ணாமலையிடம் பரசு தன் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் தான் தன்னுடைய வருங்கால மாப்பிள்ளையின் மாமா என்று தெரியாமல் அறிமுகப்படுத்த போயிருந்தார்.

அதனால் நாளைக்கு அண்ணாமலையிடம் கறிக்கடைக்காரர் சிக்குவாரா? என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது வெளியான ப்ரோமோ அதற்கு வாய்ப்பில்லை என்று காட்டி இருக்கிறது. அதாவது தற்போது வெளியான ப்ரோமோவில் ரோகிணியும், வித்யாவும் ஒரு ரெஸ்டாரண்டில் டீ குடித்து கொண்டிருக்கின்றனர்.

கண்டுபிடித்த ரோகிணி

அந்த நேரத்தில் அங்கு ரோகிணி, மனோஜை வீடு விற்கிறேன் என்று ஏமாற்றிய கதிர் ஒரு நபரிடம் போனில் சத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த குரலை கேட்டதும் ரோகிணி டேய் நீயா என்று கத்தி ஓடிப்போய் அந்த நபரின் சட்டையை பிடித்து நீ என்னை ஏமாற்றவா பாக்குற என்று இழுக்க அந்த நபர் ரோகிணியை கீழே தள்ளிவிட்டு தெருவில் ஓடுகிறார்.

ஓடிப்போன கதிர்

ரோகிணி அந்த நபரை பிடிப்பதற்காக தெருவில் ஓடிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே போன வாரத்தில் இதே போல தான் கதிரை பார்த்ததும் கத்திக்கொண்டே மனோஜ் ஓடி இருந்தார். இதனால் கதிர் தப்பி போய்விட்டார் இப்போது ரோகிணியும் அதே போல கத்தி கதிரை தப்ப வைத்து இருக்கிறார். மீனா இரண்டு லட்சம் ஏமாந்து விட்டார் என்று தெரிந்த போது ரோகிணியும் விஜயாவும் ரொம்பவே சந்தோசம் அடைந்தார்கள்.

இனி சம்பவம் இருக்கு

ஆனால் கடைசியில் மீனா தான் ஏமாந்த பணத்தை சாமர்த்தியமாக பெற்றுவிட்டார். இது ரோகிணிக்கும் விஜயாவுக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. ஆனால் ரோகிணி இப்போது மீண்டும் கையில் கிடைத்த கதிரை மிஸ் பண்ணியிருக்கிறார். இதை வைத்து முத்து பிரச்சனை செய்வார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+