சிறகடிக்க ஆசை: முத்துவிடம் வசமாக சிக்கிய நபர்.. ரோகிணிக்கு மீண்டும் புது பிரச்சனை.. சிட்டியால் வரும் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜை ஏமாற்றிய கதிரை முத்து கண்டுபிடிக்கிறார். அதே நேரத்தில் முத்துவுக்கு பெரிய பிரச்சனை வர இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியை பற்றிய ஒரு உண்மை தெரிந்ததற்கே விஜயா ரோகிணியை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறார். ரோகிணியை மனோஜிடமிருந்து பிரித்து விரட்டிவிட்டு மனோஜ்க்கு இன்னொரு பணக்கார பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விஜயா சாமியாரை பார்த்து தாயத்து வாங்கிக் கொண்டு வந்து மனோஜ்க்கு கட்டி இருக்கிறார். அதே நேரத்தில் விஜயா பிளான் எல்லாம் தெரிந்து கொண்ட ரோகிணியும் அதே சாமியாரிடம் விஜயா சொன்னது நடக்கக்கூடாது என்று அவரும் ஒரு தாயத்தை வாங்கிக் கொண்டு மனோஜ்க்கு கட்டி விட்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணி அம்மா அட்வைஸ்

இப்படியான நிலையில் ரோகிணியின் அம்மா உன்னைப்பற்றி அடுத்த உண்மை குடும்பத்திற்கு தெரிய வருவதற்கு முன்பு க்ரிஷ் பற்றிய விஷயத்தை முத்து மீனாவிடம் சொல்லிவிடு என்று ரோகிணிக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். ஆனால் ரோகிணி தன்னுடைய அம்மா மீது கோபப்படுகிறார். என்னை பற்றி ஒவ்வொரு பிரச்சனையையும் வீட்டில் போட்டுக் கொடுக்கிறதே அவங்க தான், அவங்களிடமே நான் என்னை பற்றி முழு விஷயத்தையும் சொன்னால் குடும்பத்தில் பெரிய பூகம்பமே வெடித்து விடும், என்னை ஒரேடியா அந்த வீட்டை விட்டு விரட்டி விட்டுடுவாங்க. அவங்க கிட்ட சொல்லவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சிட்டி போடும் பிளான்

ஆனால் வித்யாவும் மீனா ரொம்ப நல்லவங்க அவங்க கிட்ட நீ சொல்றதுதான் சரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுபோல ஜெயிலில் இருந்த சிட்டி வெளியே வந்திருக்கிறார். முத்து மீனாவை பழிவாங்க வேண்டும் என்று சிட்டி பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இதுபோல தன்னை எதிர்த்த ஒருவருடைய காரில் போதைப்பொருள் வைத்து அவரை போலீசில் பிடித்துக் கொடுத்ததாகவும் கூறி இருக்கிறார்.

முத்துவுக்கு பிரச்சனை

அதுபோல இன்றைய எபிசோடில் மீனாவிடம் ஒரு பெண் சாமியார் உன்னுடைய புருஷனுக்கு ஒரு பிரச்சனை வரப்போகுது என்று அறிவுறுத்திருக்கிறார். இதனால் முத்துவுக்கு சிட்டியால் தான் இனி அடுத்ததாக பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் நாளை என்று வெளியான ப்ரோமோவில் வித்யாவை காதலிக்கும் முருகன் ஒரு வீடு வாங்க போகிறார். அது ஏற்கனவே மனோஜை ஏமாற்றிய கதிரிடம் தான் வாங்க போகிறார்.

சிக்கிய கதிர்

வித்யாவும் முருகனும் தங்களுடைய காதலுக்கு சப்போர்ட்டாக இருந்த முத்து மற்றும் மீனாவை வீடு வாங்க கூட்டிகொண்டு போகிறார். அப்போது பணத்தை அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக முத்து மீனா அங்கு காத்திருக்கும் நேரத்தில் கதிர் அங்கு வர கதிரை பார்த்ததும் டேய் நீதானடா மனோஜை ஏமாத்திட்டு ஓடுன என்று முத்து கதிரை பிடித்து அடிக்க போகிறார். இதனால் கதிரை நாளைக்கு பிடித்து விடுவார் என்று தெரிகிறது. ரோகிணியும் மனோஜும் கதிரிடமிருந்து 30 லட்சம் பணத்தை வாங்குவதற்காக எவ்வளவோ முயற்சி செய்தார்கள் ஆனால் கடைசியில் முத்து மீனாவால் தான் இப்போது அவர்களுக்கு பணம் கிடைக்கப் போகிறது. ஆனாலும் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் முத்து மீனாவை தான் ஏதாவது குறை சொல்வார்கள். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+