சிறகடிக்க ஆசை: ரோகிணியை சரமாரியாக கேள்வி கேட்ட ஸ்ருதி.. அடுத்த பஞ்சாயத்து! இனி விஜயாவின் அதிரடி தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி பணம் கேட்டதற்கு ஸ்ருதி ரோகிணியிடம் சரமாரியாக கேள்வி கேட்டிருக்கிறார். ஏற்கனவே ஸ்ருதியின் அம்மாவிடம் ரோகிணி கடன் வாங்கி இருக்கிறார். ஆனால் அந்த உண்மையை குடும்பத்தினரிடம் ரோகிணி மறைத்துக் கொண்டிருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த சீரியலில் சீதா மற்றும் அருண் காதலுக்கு முதல் மூன்று வாரங்களுக்கு மேலாக எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருந்தார். கடைசியில் நேற்றுதான் சம்மதம் தெரிவித்து இன்று அருண் மற்றும் சீதாவிற்கு எளிமையாக எங்கேஜ்மென்ட் முடித்து இருக்கிறார். முத்துவும் அருணும் கை கொடுத்து போட்டோ எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் முத்து கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதால் மீனா அருண் மற்றும் சீதாவிற்கு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்திருக்கிறார். இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரியாது. ஒவ்வொரு இடத்திலும் அண்ணாமலை மற்றும் முத்து இருவருமே சீதா மற்றும் மீனாவை அவ்வளவு பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தின் பெருமையை காப்பவர்கள் அதனால் குடும்பத்தினர் கஷ்டப்படுற மாதிரி எந்த விஷயத்தையும் செய்ய மாட்டார்கள் என்று நம்பிக்கையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

ஆனால் மீனா செய்த விஷயம் குடும்பத்திற்கு தெரிய வரும் போது தான் பெரிய பஞ்சாயத்து இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க ரோகிணிக்கு இப்போது புது பிரச்சனை வந்திருக்கிறது. இதுவரைக்கும் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று கேட்டுக் மிரட்டிக் கொண்டிருந்த ரோகிணியின் பழைய பிஏ இப்போ 10 லட்சம் பணம் வேண்டும் என்று ரோசிணியை மிரட்டிக் கொண்டிருக்கிறார். அவரை பற்றிய உண்மைகளை குடும்பத்திற்கு சொல்லாமல் இருப்பதற்காக ரோகிணியும் அதிகமான பணத்தை பிஏவுக்கு கொடுத்து இருக்கிறார். ஆனாலும் மீண்டும் மீண்டும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல ரோகினி விஜயாவுக்கு பணம் கொடுப்பதற்காக ஸ்ருதியிடம் இரண்டு லட்சம் கடன் கேட்டிருந்தார். ஆனால் அதற்கு ஸ்ருதி என்னிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார். இப்படியான நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் ரோகிணி ஸ்ருதி இடம் சென்று நான் அன்னைக்கு பணம் கேட்டபோது நீங்க தர முடியாதுன்னு சொன்னீங்க, ஆனா மீனாவின் தங்கச்சி சீதா கல்யாணத்திற்காக மூன்று பவுன் நகை போடுறேன்னு சொல்லறீங்க? மூணு பவுனு என்றாலே இப்போதைய கணக்குப்படி இரண்டு லட்சம் கிட்ட வருது.

அப்போ பணத்தை வைத்துக்கொண்டு தானே இல்லன்னு சொல்லி இருக்கீங்க. மீனாக்கு மட்டும் நீங்க பணம் கொடுக்குறீங்க, எனக்கு தர மாட்டேன் என்கிறீர்களே என்று கேட்க, அதற்கு ஸ்ருதி மீனா உங்களை மாதிரி கிடையாது. அவங்க நேர்மையா தான் எந்த விஷயத்திற்கு செய்வாங்க அடுத்தவங்கள ஏமாற்றுவதற்காக அவங்க என்கிட்ட பணம் கேட்கல என்று பதில் அளிக்கிறார். எது கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+