சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் ரோகிணி கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை சல்மா அருண், தற்போது சன் டிவியின் "வினோதினி" சீரியலிலும் மீண்டும் அதிரடி என்ட்ரி கொடுத்துள்ளார். சில மாதங்களாக காணாமல் போயிருந்த அவர், மீண்டும் களமிறங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு சேனல்களில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் நடித்து வரும் சல்மா அருண், தற்போது சின்னத்திரையின் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.

Salma Arun Rohini Siragadikka Aasaiserial Vijay TV

ரோகிணியா? வில்லியா?

"சிறகடிக்க ஆசை" சீரியலில் ரோகிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சல்மா அருணின் கேரக்டர் ஆரம்பம் முதல் ரசிகர்களை குழப்பி வருகிறது. ஒருபுறம் மனோஜை உண்மையாக காதலிக்கும் பெண் போலவும், மறுபுறம் பல ரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் பெண் போலவும் அவர் காட்டப்படுகிறார். அதனால் ரோகிணி நல்லவளா? கெட்டவளா? என்ற விவாதம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது.

சில நேரங்களில் ரோகிணியை பார்த்து ரசிகர்கள் பரிதாபப்படுகிறார்கள். அதே நேரத்தில் சில காட்சிகளில் அவர் செய்யும் செயல்களை பார்த்து கோபப்படுகிறார்கள். இந்த கலவையான கதாபாத்திரமே சல்மா அருணுக்கு தனி அடையாளத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது.

வினோதினியில் அதிரடி ரீ-என்ட்ரி

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வினோதினி" சீரியலில் சில மாதங்களாக சல்மா அருணை காண முடியவில்லை. இதனால் அவர் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் தற்போது மீண்டும் அவர் என்ட்ரி கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல், கதையின் முக்கிய வில்லியாக களமிறங்கியுள்ளார்.

கணவரின் வறுமை வாழ்க்கையை காரணம் காட்டி, பிறந்த குழந்தையையே விட்டுவிட்டு சென்ற பெண்ணாக கதையில் காட்டப்பட்ட அவர், தற்போது மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். ஆனால் குழந்தையை பார்க்க வந்த தாயாக அல்ல.

கணவர் கிருஷ்ணாவின் வாழ்க்கையை மீண்டும் குழப்புவதற்காகவும், குழந்தையை பிரிப்பதற்காகவும் புதிய திட்டங்களுடன் அவர் வந்திருப்பதாக கதை நகர்ந்து வருகிறது.

வினோதினி சீரியல்

வினோதினி சீரியலின் சமீபத்திய காட்சிகளில், கிருஷ்ணா வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனைகளை உருவாக்கும் விதமாக சல்மா அருணின் கதாபாத்திரம் நகர்ந்து வருகிறது.

குழந்தையை காரணமாக வைத்து எமோஷனல் பிளாக்மெயில் செய்வது, குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவது, உறவுகளை உடைப்பது போன்ற விஷயங்கள் அடுத்தடுத்த எபிசோட்களில் இடம்பெறலாம் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். இதனால் "வினோதினி" சீரியலில் அடுத்த கட்டம் இன்னும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சல்மா அருணின் நிஜ வாழ்க்கை

திரையில் வில்லியாக ரசிகர்களை வெறுப்பேற்றும் சல்மா அருணின் நிஜ வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. திருமணமாகி குழந்தை பெற்ற பிறகுதான் அவர் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். குடும்ப பொறுப்புகளையும், நடிப்பையும் ஒன்றாக சமாளித்து இன்று சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருக்கிறார்.

முதல் வாய்ப்பு கொடுத்த சீரியல்

சல்மா அருணின் சின்னத்திரை பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது ஜீ தமிழில் ஒளிபரப்பான "அமுதாவும் அன்னலட்சுமியும்" சீரியல். அதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய அளவில் ஸ்கிரீன் ப்ரெசென்ட் கிடைக்கவில்லை. ஆனால் அந்த சீரியல்தான் சல்மா அருணின் திறமையை வெளிக்கொண்டு வந்த முதல் மேடை என்று சொல்லலாம்.

Salma Arun Rohini Siragadikka Aasaiserial Vijay TV

வாழ்க்கையை மாற்றிய சிறகடிக்க ஆசை

சல்மா அருணுக்கு உண்மையான பிரபலத்தை கொடுத்தது "சிறகடிக்க ஆசை" சீரியல் தான். ரோகிணி கதாபாத்திரம் மூலம் வீடு தோறும் பிரபலமான அவர், தற்போது சமூக வலைதளங்களிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு எபிசோடும் ஒளிபரப்பான பிறகு ரோகிணி குறித்து ரசிகர்கள் விவாதிக்கும் அளவுக்கு அந்த கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவிலும் பிஸி

சீரியல்களில் மட்டுமல்லாமல் தற்போது சில திரைப்படங்களிலும் சல்மா அருண் நடித்து வருகிறார். சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு காரணமாக அவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில் அவர் சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல், முக்கியமான குணச்சித்திர நடிகையாகவும் உருவெடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

வினோதினி சீரியலில் மீண்டும் வில்லியாக களமிறங்கிய சல்மா அருணை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். "ரோகிணி இங்க ஒரு மாதிரி... அங்க ஒரு மாதிரி!", "இந்த பொண்ணு திருந்தவே மாட்டாளா?", "சிறகடிக்க ஆசையில் அழ வைக்குறாங்க... வினோதினியில் கோபம் வர வைக்குறாங்க!", "சல்மா அருண் வந்தாலே சீரியல் சுவாரஸ்யமாகிடுது" என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஒருபுறம் ரோகிணியாக ரசிகர்களின் அனுதாபத்தை சம்பாதித்து வரும் சல்மா அருண், மறுபுறம் வினோதினியில் முழு வில்லியாக களமிறங்கியிருப்பதால், அடுத்த சில வாரங்களுக்கு சின்னத்திரை ரசிகர்களின் கவனம் முழுவதும் அவர்மீதே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+