சிறகடிக்க ஆசை: சிக்கும் ரோகிணி! அதுவும் முத்துவிடம் தான்.. 1 இல்ல 5 பிரச்சனை! எதிர்பார்க்காத கதைகளம்
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது குடும்பத்திடம் சிக்குவார் என்ற எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கப்போகிறது. அதாவது ரோகிணி இனி முத்துவிடம் வசமாக சிக்கப் போகிறார். அவருக்கு எதிராக ஐந்து பிரச்சனைகள் இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
ஒரு படத்தில் வடிவேலு நான் அடிச்ச மணி யாருக்கு கேட்டதோ இல்லையோ கடவுளுக்கு கேட்டுடிச்சி.. எனக்கு அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என்று சொல்வது போலத்தான் இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் கதையும் மாறி இருக்கிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் ரோகிணி ஒரு முறை கூட மாட்டவில்லையே என்ற வருத்தமும், ஏமாற்றமும் ரசிகர்களுக்கு இருந்தது.

அதனாலேயே இந்த சீரியலுக்கான ப்ரோமோ வரும்போது எல்லாம் கமெண்டில் ரோகிணிக்கு மட்டும் இயக்குனர் பாரபட்சம் காட்டுகிறார். கதாநாயகனின் முத்து மற்றும் மீனாவிற்கு தான் எப்போதும் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்று புலம்பி தீர்த்தனர். அது இப்போ இயக்குனருக்கு புரிந்து விட்டது போல. அதனாலயே சீரியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சீரியலில் முக்கிய திருப்பமே ரோகிணி மாட்டுவதுதான். ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வரும்போது சீரியலில் அண்ணாமலை வீட்டில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியும் போது விஜயா எப்படி எடுத்துக் கொள்வார் என்ற பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஆனால் இதுவரைக்கும் ரோகிணி வீட்டில் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு எதிராக மூன்று பிரச்சனைகள் இருக்கிறது. அதாவது மலேசியா மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் கடையில் மீனா கறி வங்கி இருக்கிறார். இனி நான் மீனாவிடம் மாட்டினால் மொத்த உண்மைகளையும் சொல்லி விடுவேன், எனக்கு பிசினஸ் முக்கியம் என்று அவர் சொல்லிவிட்டார்.
இது ஒரு பக்கம் என்றால் சிட்டியும், ரோகிணியின் பழைய பிஏவும் ஒன்று சேர்ந்து ரோகிணியை மிரட்ட தொடங்கி இருக்கிறார்கள். இவர்களுக்காக பார்வதி வீட்டில் இருந்த இரண்டு லட்சம் பணத்தை ரோகிணி எடுத்துக் கொடுத்திருக்கிறார். இதை வைத்து விஜயா வீட்டில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய நகைகளை விற்று அந்த பணத்தை ரோகிணி கொடுத்திருப்பது முத்து மற்றும் மீனாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் ரோகிணி வாழ்க்கையில் ஒரு பிரச்சனை இருக்கிறது அதை மறைக்கிறார் என்று முத்து இதைப் பற்றி விசாரிக்க இருக்கிறார். அதுபோல மனோஜின் காதலி ஜீவா கனடாவில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு வருவதாக முத்துவிற்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கிறார்.
அப்படி வரும்போது மனோஜின் தம்பி தான் முத்து என்ற உண்மைகள் தெரிய வந்தால் தான் கொடுத்த 20 லட்சம் பணத்தைப் பற்றி ஜீவா சொல்லும்போது மனோஜ் மற்றும் ரோகிணியும் வீட்டில் சிக்குவார்கள். அதுபோல ரோகிணியின் மகன் கிரிஷ் படிக்கும் ஸ்கூலில் தான் அண்ணாமலை வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அவர் வேலைக்கு போகும்போது ரோகிணி தன்னுடைய மகனை ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்தாலும் அங்கு வைத்து சிக்குவார்.
அடுத்தடுத்த வாரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல ரோகிணி பற்றிய ஒவ்வொரு உண்மைகளும் வீட்டிற்கு தெரிய வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதைத் தொடர்ந்து முத்துவின் குழந்தை பருவத்தில் என்ன பிரச்சனை நடந்தது? அவர் எதற்காக போலீஸ் ஸ்டேஷன் போனார் என்பது பற்றியும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் டிஆர்பி குறைவாக காணப்பட்ட நிலையில் இப்போது கேபிள் டிவியில் விஜய் டிவி பிரச்சனை சரி செய்யப்பட்டதும் சீரியலின் டிஆர்பி அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் இனி கதைக்களமும் வேகமாக மாற்றினால் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications