சிறகடிக்க ஆசை சீரியலில் ஏன் இந்த சொதப்பல்? ஒரே நாளில் நடந்த குழப்பம்.. இதற்கு முடிவு இல்லையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சில தினங்களாகவே கதையில் வந்த காட்சிகளே மீண்டும் வருவதுபோன்று பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே இந்த சீரியலில் விஜயா மீனாவை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அண்ணாமலை அதை எல்லாம் கவனித்தாலும் பிரச்சனைக்கு முடிவு காணாமல் இருக்கிறார். முத்து சின்ன வயதில் ஏதோ செய்யாத தப்புக்காக ஜெயிலுக்கு போயிருக்கிறார். ஆனால் தான் தப்பு செய்யவில்லை, நடந்தது வேற.. என்று விஷயத்தை முத்து சொல்ல வரும்போது எல்லாம் ஒவ்வொரு முறையும் அண்ணாமலை தடுத்து விடுகிறார்.

விஜயா இந்த அளவிற்கு முத்து மீது பயங்கரமாக கோபப்பட்டு கொண்டு அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் நடந்ததை சொன்னாலே விஜயா முத்து மீது கோபப்படுவதை விட்டுவிடுவார். ஆனால் அதை அண்ணாமலை சொல்லாமலேயே மறைத்து கொண்டு இருக்கிறார். அதுபோல இந்த சீரியலில் வில்லியாக இருக்கும் ரோகினி மட்டும் ஒவ்வொரு பிரச்சனையிலும் வீட்டில் மாட்டாமல் போய்க்கொண்டே இருக்கிறார்.
இதுவும் ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் இன்றைய (மே 29) எபிசொடில் மீனாவிற்கு காய்ச்சலாக இருக்கிறது என்பதற்காக முத்து மீனாவை மனோஜ் ரூமில் படுக்க சொல்லிவிட்டு மெடிக்கலுக்கு போய் மாத்திரை வாங்கி வருகிறார். ஆனால் வீட்டுக்கு வந்த மனோஜ் என்னுடைய ரூமில் மீனா படுத்திருக்கா என்று பிரச்சனை செய்கிறார். அப்போது அண்ணாமலை தன்னுடைய ரூமில் மனோஜை படுக்க சொல்லி இருக்கலாம்.
இல்லையென்றால் அப்போது ரவி மற்றும் சுருதி வீட்டிற்கு வரவில்லை அதனால் அவர்களுடைய ரூமில் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கலாம் ஆனால் அதை விட்டுவிட்டு மீனா தூங்கட்டும் விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு போய் விடுகிறார். ஆனால் விஜயா வழக்கம்போல மீனாவை நாக்கில் விஷத்தை வைத்தது போல வார்த்தைகளில் கொட்ட, அங்கு வரும் அண்ணாமலை ரூம் பிரச்சனைக்கு முக்கிய முடிவு எடுக்கிறேன் என்று சொல்லி விஜயாவையும் மீனாவையும் ஒரே ரூமில் படுக்க சொல்லிவிட்டு நானும் முத்துவும் ஒரு ரூமில் படுத்துக்கொள்கிறோம் என்று சொல்கிறார்.
இது எந்த லாஜிக் என்று தெரியவில்லை. எப்படியும் இரண்டு பேரும் தனித்தனியாக ரூமில் படுக்கப் போகிறார்கள் என்றால், அதற்கு தனியா முத்து மீனா ஒரு ரூமிலும் அண்ணாமலையும் விஜயாவும் ஒரு ரூமிலும் படுத்திருக்கலாம். ஆனால் அண்ணாமலை இன்று சொதப்பி வைத்திருக்கிறார். அதோடு மனோஜ் எனக்கு ரூம் வேண்டும் என்று பிரச்சனை செய்ததும் நீயும் எங்களோடு படுத்துக்க, ரோகினியை விஜயா ரூமில் படுக்க சொல்லு என்று சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே விஜயா மீனாவை கண்ட மேனிக்கு திட்டிக் கொண்டிருக்கும் போது இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் என்னவெல்லாம் திட்டுவார் என்று அண்ணாமலைக்கு தெரியாதா? ஏன் இவர் இப்படி சொதப்புகிறார் என்று தெரியவில்லை. அதேபோல ரூம் பிரச்சனை வீட்டில் இவ்வளவு வெடித்துக் கொண்டிருக்கிறது. அப்போது மாடியில் ரூம் கட்டலாம் என்று பாட்டி ஐடியா கொடுத்தாலும் கையில் பணம் இல்லை என்று ஆளாளுக்கு பேசி அதையும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.
ஆனால் இவர்களுடைய கீழ் வீடு இவர்கள் வாடகைக்கு தான் கொடுத்திருக்கிறார்கள். அதை வாடகைக்கு விடாமல் அதில் யாரையாவது ஒருத்தரை அண்ணாமலை தங்க வைக்கலாமே எதற்காக வீட்டிற்குள்ளேயே ரூம் பிரச்சனையை பெரும் பிரச்சனையாக தினமும் இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அதுபோல விஜயா மீனாவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதையும் பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்க வைத்திருக்கிறது. இது ரொம்ப நாளைக்கு நீடிக்காமல் சீக்கிரமாக ரூம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் நல்லது.












Click it and Unblock the Notifications