சிறகடிக்க ஆசை மீனா தங்கச்சி கர்ப்பமா? இது என்ன புது டுவிஸ்ட்! அம்மா வீட்டில் சிக்க போகிறாரா ரோகிணி?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தங்கை சீதா கேரக்டரில் நடிக்கும் சங்கீதா லியோனி வெளியிட்ட வீடியோ தான் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
ஏற்கனவே சங்கீதா தான் புதியதாக திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாக புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு இருப்பதால் இது சீரியலில் இனிவரும் காட்சியா? அல்லது திரைப்படத்தில் வரும் காட்சியா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

அதே நேரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே ரோகிணி மட்டும் எந்த இடத்திலும் மாட்டாமல் தப்பித்து விடுகிறார் என்பது ரசிகர்களின் அதிருப்தியாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை வரிசையாக வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் முத்துவிற்கும் மீனாவிற்கும் புதுப்புது ரூபத்தில் பிரச்சனைகள் வெடித்துக் கொண்டே இருக்கிறது.
ஆனால் ரோகிணி மட்டும் ஒவ்வொரு முறையும் மாட்டாமல் நைசாக தப்பித்து விடுகிறார் என்று பல மாதங்களாகவே ரசிகர்கள் பீல் பண்ணி வரும் நிலையில் இந்த வாரமும் ரோகிணிக்கு புது பிரச்சனை தொடங்குகிறது. அதாவது நேற்று முத்து மற்றும் மீனாவின் திருமண நாள் கொண்டாட்டத்தில் மீனா வீட்டில் இருந்தும் ஸ்ருதியின் அம்மாவும் வந்திருந்த நிலையில் ரோகிணியின் வீட்டில் இருந்து மட்டும் யாருமே வரவில்லை என்று விஜயா என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.
அதோடு உனக்கும் அம்மா இருந்திருந்தால் இப்படி அடிக்கடி வந்து அவங்களும் உனக்கு ஆதலால் இருந்திருப்பாங்க என்று ரோகிணியிடம் சொல்ல ரோகிணிக்கு தன்னுடைய அம்மா மற்றும் மகன் ஞாபகம் வருகிறது. உடனே ரோகிணி தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் போட்டு எப்படி இருக்கிற அம்மா..? இப்போ உடம்பெல்லாம் ஓகேவா? க்ரிஷ் எப்படி இருக்கிறான்? என்று நலம் விசாரிக்கிறார்.
அதோடு நான் இந்த வாரத்தில் உன்னையும் கிருஷையும் பார்க்க வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால் இந்த முறையாவது ரோகிணி வீட்டில் யாரிடமாவது சிக்குவாரா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. மறுபக்கத்தில் சீதா வெளியிட்ட வீடியோவில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் இனி வரப்போகிறதா? அல்லது அவர் வேறு ஏதேனும் சீரியலில் இது போன்ற காட்சிகள் நடிக்கிறாரா? என்ற குழப்பங்களும் இருக்கிறது.
ஏற்கனவே சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் சின்ன சின்ன நடிகர்கள் கூட சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதில் அடுத்து என்ன காட்சிகள் வரப்போகிறது என்பதை ரசிகர்கள் யூகித்து விடுகிறார்கள். இந்த நிலையில் இப்போது சீதா வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications