பிளாட்பாரத்தில் இட்லி கடை தொடங்கிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்! இவர் நிலைமை என்ன இப்படி ஆயிடுச்சு!
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகன் முத்துவின் நண்பன் செல்வமாக நடிக்கும் நடிகர் பழனியப்பன் தற்போது வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலின் இயக்குனர் குமரன் தான் இயக்கும் சீரியல்களில் அதிகமாக நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தான் சிறகடிக்க ஆசை சீரியலில் கூட பலருக்கும் நட்பு வைத்திருக்கிறார். அதாவது அண்ணாமலை மற்றும் அவருடைய நண்பர் பரமுவிற்கும் இடையே அழகான ஒரு பாசம் இருக்கும். அதுபோல விஜயா தப்புதான் பண்ணுகிறார் என்று தெரிந்தாலும் அவருக்கு அட்வைஸ் கொடுக்கும் பார்வதியும் எல்லோருக்கும் பிடித்திருக்கும்.

பல நேரங்களில் விஜயா செய்யும் தவறுகளை பார்வதி சுட்டிக்காட்ட தவறுவதில்லை. அதுபோல ரோகினி செய்யும் தில்லாலங்கடி வேலை எல்லாமே அவருடைய தோழி வித்தியாவுக்கு தெரியும். இருவரும் சேர்ந்துதான் முத்து குடும்பத்தையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல முத்துவின் நண்பனாக செல்வம் இருக்கிறார். செல்வம் முத்துவுக்கு பல நேரங்களில் தோள் கொடுக்கும் நண்பனாகவும் செல்வத்திற்கு ஒன்று என்றால் துடிக்கும் முத்துவும் பார்த்து இருப்போம்.
இவர்களின் இருவருடைய நட்புக்காக தான் செல்வம் தன்னுடைய காரை தியாகம் செய்திருந்தார். அதுபோல முத்துக்கு ஒரு பிரச்சனை என்ற போது தான் காருக்கு டியூ கட்ட வைத்திருந்த பைசாவை கூட செல்வம் கொடுத்திருப்பார். இப்படி சீரியலில் இவர்கள் கதை இருந்தாலும் நிஜத்திலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் எல்லோரும் நட்பாக தான் இருக்கிறார்கள்.
அதிலும் இந்த சீரியலில் செல்வமாக நடிக்கும் பழனியப்பன் சீரியலில் அடுத்து என்ன காட்சிகள் வரப்போகிறது என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களாக வெளியிடடு ரசிகர்களுக்கு க்ளூ கொடுத்து வருகிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு இட்லி கடையில் இவர் இட்லி ஊற்றி வியாபாரம் பார்ப்பது போன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதை பார்த்ததும் ரசிகர்கள் நீங்க இட்லி கடை தொடங்கிட்டீங்களா? என்று கேள்வி கேட்க, அதற்கு பழனியப்பன் இல்லை இது சென்னையில் என்னுடைய நண்பருக்கு நான் உதவி செய்தது என்று அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த கடைக்கு முத்து வருவாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications