Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு ரோகிணினால் வந்த சிக்கல்.. ஸ்ருதியால் பிரச்சனையில் மாட்டும் மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 13ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் முத்து ரவியிடம் இனி ஸ்ருதியிடம் பேசக்கூடாது என்று கண்டிஷன் போடுகிறார்.

siragadikka aasai serial September 13th promo and Episode Highlights

அதே நேரத்தில் மனோஜ் இடம் ரோகிணி அந்தமானுக்கு போவதற்காக டிக்கெட் போட சொல்லி புது பிரச்சனை உருவாக்குகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் முத்து வேகமாக ஸ்ருதியின் வீட்டுக்கு வந்து அவருடைய அப்பாவிடம் உனக்கு என் மேல தான கோபம் எதுவா இருந்தாலும் என்கிட்ட மோது. அதை விட்டுட்டு என் தம்பியை ஆள் வைத்து அடித்து இருக்கா என்று சத்தம் போட, அதற்கு ஸ்ருதியின் அம்மா உன் தம்பி என் பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான். அது தெரியுமா? உனக்கு என்று கேட்க முத்து ரவி அப்படிப்பட்ட பையன் கிடையாது.

நீங்க சும்மா கதை விடாதீங்க என்று பேசுகிறார்.அதை உன் தம்பி வாயால சொல்ல சொல்லு என்று ஸ்ருதி அம்மா கேட்க, முத்து ரவியிடம் நீ அப்படி பண்ண மாட்டே என்று எனக்கு தெரியும். இல்லன்னு நீ சொல்லுடா என்று சொல்ல ரவி பதில் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நிற்கிறார்.

siragadikka aasai serial September 13th promo and Episode Highlights

இதனால் வெளியே வந்து முத்து வெளியே ரவியிடம் இனிமேல் அந்த பொண்ணு கிட்ட பேசாத, இதெல்லாம் நமக்கு செட்டாகாது. அப்படியே நீ திரும்ப பேசினாலும் உன் கைய, கால உடைக்கிற முதல் ஆளா நான் தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

அதைத்தொடர்ந்து ரோகிணி மனோஜிடம் அந்தமான் போவதற்கு பிளைட் டிக்கெட் புக் பண்ணிடு என்று சொல்ல, மனோஜ் பணம் இல்லாமல் என்ன செய்வது என்று குழப்பம் அடைகிறார்.பிறகு 20 நாட்கள் வேலை செய்த கார் ஷோரூமுக்கு வந்து சம்பளத்தை கேட்க, அவர்கள் ஒத்த ரூபாய் கூட கொடுக்க முடியாது என்று மனோஜை துரத்தி விடுகின்றனர். அப்போது மனோஜ் ரோகிணி வேற டிக்கெட் புக் பண்ண சொன்னா என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே வீட்டிற்கு வருகிறார்.

மறுபக்கம் ஸ்ருதி ரவிக்கு போன் செய்ய ரவி போனை எடுக்காமல் சுவிட்ச் ஆப் செய்து வைத்து விடுகிறார். உடனே மீனாவுக்கு ஸ்ருதி போன் செய்து நலம் விசாரிப்பது போல பேசி கொண்டிருக்கும் போது ரவி வீட்டில் தான் இருக்கிறார் என்ற விஷயத்தை மீனா உளறி விடுகிறார். அப்போது நீங்கள் சமைத்துக் கொடுத்த சிக்கன் சூப்பரா இருந்தது சாப்பிடணும் போல இருக்கு என்ற ஸ்ருதி சொல்ல, மீனா நான் சமைத்து எடுத்துட்டு வருகிறேன் என்று சொல்ல அதற்கு ரவியோடு வாங்க என்று ஸ்ருதியும் சொல்கிறார். அதற்கு மீனாவும் சரி என்று சொல்லி விடுகிறார்.

siragadikka aasai serial September 13th promo and Episode Highlights

அதைத்தொடர்ந்து ரவி ஹோட்டலுக்கு கிளம்பி கொண்டு இருக்க, மீனா நானும் வரேன் ஸ்ருதி ஸ்டுடியோவில் விட்டுவிடு என்று சொல்ல, ரவி வேறு வழி இல்லாமல் கிளம்பி செல்கிறார். அடுத்து மனோஜ் வீட்டிற்கு வர விஜயா பார்வதியை பார்க்க வெளியே கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

அதைத் தொடர்ந்து நாளைக்கான ப்ரோமோவில் விஜயா ஒரு லட்சம் பணம் இதை காணவில்லை என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். கடைசியில் எனக்கு தெரிஞ்சு போச்சு இவ தம்பி தான் எடுத்து இருக்கணும் என்று சத்யா மேல பழியை தூக்கி போடுகின்றனர். இப்படியாக பிரமோ முடிவு அடைந்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+