சிறகடிக்க ஆசை: ஜீவாவை பிரச்சனைக்குள் கொண்டு வந்த ரோகிணி! கோபத்தில் மனோஜ்! ஸ்ருதி சொன்ன தீர்ப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 13-ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி மனோஜிடம் பணம் கேட்டு ஜீவாவை வைத்து பிரச்சனை செய்கிறார். அதே நேரத்தில் முத்துவும் மீனாவும் பணம் பிரச்சனையால் சண்டை போடுகின்றனர். அப்போது ஸ்ருதியும் ரவியும் சரியான தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவும் அவருடைய நண்பரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா பணம் தர முடியாது என்று சொன்ன விஷயத்தை சொல்ல, அதற்கு அங்கிருந்த நண்பர்கள் செல்வம் குடிச்சிட்டு புலம்பிட்டு நாளைக்கே சமாதானம் ஆகி இருப்பான். ஆனால் நீ பணம் கொடுக்கிறேனு வாக்கு கொடுத்துட்டு இப்ப கொடுக்கலைன்னு சொன்னா சொந்தக்காரங்க முன்னாடி ரொம்ப அசிங்கமா ஆகிடும் எப்படியாவது ரெடி பண்ணிட்டு என்று அங்கு இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

அதற்கு முத்து உங்ககிட்ட எவ்வளவு பணம் இருக்கு என்று கேட்க, அவர்கள் கையில் இருக்கும் எல்லா பணத்தையும் போட்டு 6 ஆயிரம் தான் இருக்கு என்று முத்துவிடம் கொடுக்கின்றனர். மறுபக்கத்தில் வித்யா ரோகிணிக்கு போன் போட்டு அந்த ஹவுஸ் ஓனர் பணம் கேட்கிறார் என்று சொல்ல, ரெண்டு நாள் டைம் கேட்டுட்டு தானே வந்தோம் அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறோமே என்று சொல்ல, அவர் பணம் தரவில்லை என்றால் வேறு ஆளுக்கு விட்டுடுவோம் என்று சொல்கிறார்.
அடுத்தடுத்து திருமணத்தை அறிவித்த சின்னத்திரை பிரபலங்கள்.. இந்த நடிகைக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சாம்
நீ சீக்கிரமாக பணம் ரெடி பண்ணனும் என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் மனோஜ் வந்ததும் போனை வைத்துவிட்டு என் பிரண்டு அர்ஜெண்டா ஒரு லட்சம் பணம் கேட்கிறா நாளை கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கா என்று சொல்ல அதற்கு மனோஜ் பணமா? நமக்கே நிறைய கமிட்மெண்ட் இருக்கு. முத்துக்கு மாசம் 50,000 தரணும் அதனால் என்னால தர முடியாது என்று மனோஜ் சொல்ல, என் ஃப்ரெண்டுக்காக தரமாட்டியா என்று ரோகினி கோபப்படுகிறார்.

அதற்கு மனோஜ்க்கு இல்ல என் பிரண்டுக்கு கூட நான் தரமாட்டேன் என்று சொல்ல, அப்போ ஜீவாவை நம்பி மட்டும் எப்படி 27 லட்சம் காசு கொடுத்த என்று ரோகிணி கோபப்படுகிறார். இதற்கு மனோஜ் என்ன ரோகினி இப்படி எல்லாம் பேசுற, அவள நம்பி பணத்தை நான் ஏமாந்ததுக்காகத்தான் இப்போ யாரையும் நம்புறது கிடையாது என்று மனோஜ் சொல்ல அதற்கு ரோகிணி அப்போ என்னையும் நம்ப மாட்டியா நான் தானே ஜீவாவிடம் இருந்து பணத்தை வாங்கி தந்தேன் நான் யாருகிட்டயும் ஏமாற மாட்டேன் என்று கோபப்படுகிறார்.
அதற்கு மனோஜ் உனக்கு தேவை என்றால் சொல்லு கொடுக்கிறேன் உன் பிரண்டுக்கெல்லாம் கொடுக்க முடியாது என்று மீண்டும் உறுதியாக சொல்லிவிட ரோகிணி கோபமாக இருக்கிறார். பிறகு மாடிக்கு வந்த ரவி மற்றும் மனோஜ் முத்துவிடன் என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கிறா என்று கேட்க, எல்லாம் பணம் பிரச்சனை தான் என்று முத்து சொன்னதும் வீடு கட்ட பணம் தேவைப்படுதா என்று ரவி கேட்க மனோஜ் நான் தான் சொன்னேனே அவனால வீடு கட்ட முடியாது என்று சொல்ல முத்து கோபமாகி ஓடுகாளி வாயை மூடிட்டு கம்முனு இரு செங்கல் அடிக்க வச்சிருக்கேன் பாரு அதை எடுத்து தலையிலேயே அடிச்சிடுவேன் என்று மிரட்டுகிறார்.

பிறகு ரவி என்னாச்சு என்று கேட்க செல்வம் அப்பா அம்மாவிற்கு 60-ஆம் கல்யாணம் செய்வதற்கு காசு இல்லன்னு சொன்னான் அதற்கு நான் பணம் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன் ஆனா மீனா பணம் தர மாட்டேங்குறா? உன் கிட்ட ஏதாவது பணம் இருக்கிறதா என்று ரவியிடம் கேட்க, அதற்கு மனோஜ் பணமெல்லாம் கொடுக்காத இதே போல தான் ரோகிணி என்கிட்ட பணம் கேட்டால் நான் முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன் என்று சொல்கிறார்.
மறுபக்கத்தில் கிச்சனில் ரோகிணி, மீனா, ஸ்ருதி மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ரோகிணி என் பிரண்டுக்கு அவசரமா பணம் தேவைப்படுதுன்னு மனோஜ் கிட்ட கேட்டேன் ஆனா அவர் தர மாட்டேன்னு சொல்லிட்டாரு என்று சொல்ல, அது போல பணம் விஷயமாக மாடியிலும் அண்ணன் தம்பிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். கிச்சனில் மருமகள்களும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இறுதியாக ஸ்ருதி நீங்க சொல்றது நியாயமா தான் இருக்கு. ஆனால் மீனா சொல்றதை யோசிக்கும் போது அதுவும் கரெக்ட்டா தான் இருக்கு என்று சொல்ல, அதே நேரத்தில் மாடியில் ரவியும் பிரண்டுக்கு உதவி பண்ணாம இருக்க முடியாது ஆனால் கடனா வாங்கி கொடுத்த அவங்க திருப்பி தருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு என்று ஐடியா கொடுக்கிறார். இதை கேட்டு மனோஜ் எனக்கு ஐடியா கிடைச்சிடுச்சு என்று கிளம்புகிறார். ஸ்ருதி சொன்னதை கேட்டு ரோகிணி எனக்கும் ஐடியா கிடைச்சிடுச்சு என்று கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications