அடுத்தடுத்து திருமணத்தை அறிவித்த சின்னத்திரை பிரபலங்கள்.. இந்த நடிகைக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சாம்
சென்னை: சின்னத்திரையில் சில நடிகைகள் மற்றும் நடிகர்கள் கடந்த வாரத்தில் திருமணத்தை திடீரென முடித்திருக்கிறார்கள். இவர்களுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர். அதிலும் பல கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்த பிரபலம் முதல் சினிமா, சீரியல், வெப் சீரிஸ் என்று கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை வரை தங்களுடைய திருமணத்தை அறிவித்திருக்கிறார்கள். அதைப் பற்றி பார்க்கலாம்.
பைரி பட நாயகி: சமீபத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பைரி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடந்த நடிகை சரண்யா ரவிச்சந்தர் சினிமா மற்றும் சீரியல் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு பரத் என்பவரோடு கடந்த வாரம் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு சரண்யா தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கணவர் குறித்து நெகிழ்ச்சியான வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார்.

சரண்யா மற்றும் பரத் திருமணத்தில் பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். தமிழ் சினிமாவில் அதிகமான தமிழ் நடிகைகள் இல்லை என்ற குறையை இவரும் நிவர்த்தி செய்து வருகிறார். இவருடைய சொந்த ஊரான திருச்சியில் தான் இவருடைய ரிசப்ஷன் நடைபெற்று இருக்கிறது.
அக்ஷய பிரபா: சின்னத்திரை கதாநாயகிகள் பலருக்கு கம்பீரமாக குரலாக ஒலித்தவர், இப்போது ஒலித்துக் கொண்டிருப்பவர் அக்ஷயா பிரபா தான். பல சீரியல்களில் கதாநாயகிகளுக்கு குரல் ஒரே போலவே இருக்கும். அதற்கு காரணம் இவர்தான். வீட்டில் டிவியை ஓட விட்டு விட்டு கிச்சனிலிருந்து சீரியல் கேட்டால் இது கயல் சீரியலா?இது கயல் சீரியலா? சிறகடிக்க ஆசை சீரியலா? என்ற குழப்பம் ரசிகர்களுக்கு வரும்.

அந்த அளவிற்கு அக்ஷயா பிரபா பல சீரியல் கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். அதோடு சமூக வலைதளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். சீரியலில் தான் பேசும் டயலாக் பற்றி அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது அவருடைய வழக்கம். இந்த நிலையில் அக்ஷயா பிரபாவிற்கு தீபக் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றிருக்கிறது.
இவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வில் சின்னத்திரை நடிகை ஆயிஷா உட்பட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிஷா நடித்த சீரியல்களில் இவர்தான் ஆயிஷாவிற்கு குரல் கொடுத்து இருக்கிறார். அதனால் ஏற்பட்ட நட்பால் ஆயிஷா நேரில் வந்து வாழ்த்தி இருக்கிறார்

நடிகர் அவினாஷ்: அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசல் படி என்று சீரியலில் கதாநாயகனாக கண்ணன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் அவினாஷ் அவருடைய நெடுநாள் காதலியை இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து இருக்கிறார். நடிகர் அவினாஷ் நடிகர் அக்ஷிதாவின் அண்ணன் தான்.

அக்ஷிதா விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வருகிறார். அதுபோல அவினாஷ் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நடித்திருந்தார். அதுபோல கயல் சீரியலிலும் சைத்ராவின் தம்பியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications