Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: மருத்துவமனையில் மீனா.. சிட்டியின் கையை உடைத்த முத்து! ஸ்ருதிக்கு பிரச்சனை கொடுத்த பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 18ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் சிட்டி மீனாவை அடிக்க, சிட்டியின் கையை முத்து உடைத்திருக்கிறார். மறுபக்கத்தில் ரவியின் புது பாஸ் அறிமுகத்தால் ஸ்ருதி அதிர்ச்சியில் இருக்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரவியின் ரெஸ்டாரண்ட்க்கு அவருடைய ஓனர் அவருடைய மகள் மற்றும் மனைவியோடு வருகிறார். வந்து என்னுடைய மகள் தான் இனி ரெஸ்டாரண்டை கவனித்துக் கொள்ளப் போகிறார். இனி இவள் தான் உங்களுக்கு பாஸ் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய மனைவியோடு வெளியே சென்று விடுகிறார்.

siragadikka aasai serial vijay tv siragadikka aasai serial vijay tv

அந்த நேரத்தில் ரவி பாஸின் மகளோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி ரவியை பார்ப்பதற்காக ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் ஸ்ருதி யார் என்று ரவியிடம் விசாரிக்க இவர்தான் எங்க பாஸின் மகள் இனி இவங்கதான் எங்களுக்கு பாஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு பாஸ் மகளுக்கு ஹோட்டலை சுற்றி காட்டி விட்டு வருகிறேன் என்று ஸ்ருதியை வெயிட் பண்ண சொல்கிறார்.

அப்போது பாஸின் மகள் எல்லோரிடமும் நான் உங்களுக்கு பாஸ் மாதிரி கிடையாது பிரண்டா பழகுவேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் நான் உங்களிடம் ஸ்ட்ரிட்டா பாஸ் மாதிரி இருப்பேன் என்று சொல்ல, இதை பார்த்து ஸ்ருதி இந்த பொண்ணு என்ன லூசா இப்படி பேசிட்டு இருக்குது என்று மனசுக்குள்ளே திட்டிக்கொண்டு இருக்கிறார். பிறகு ரவி வந்ததும் ரவி இடமும் இந்த பொண்ணு இப்படி பேசிட்டு இருக்குது பாஸ் மாதிரி இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு பிறகு நானே பாஸ் மாதிரி ஸ்ட்ரிட்டா இருப்பேன் என்று சொல்கிறது என்று சொல்ல ரவி சிரித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது பாஸ் மகள் யார் என்று கேட்க இது என்னுடைய மனைவி என்று சொன்னதும் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ஆனாலும் நீங்க க்யூட்டா இருக்கீங்க என்று பாராட்ட ஸ்ருதியின் முகம் மாறுகிறது. பிறகு ரவி என்னால் வெளியே இப்போ வர முடியாது இனி தனியா போயிட்டு வா என்று சொல்ல ஸ்ருதி வருத்தத்தோடு வெளியே வருகிறார்.

siragadikka aasai serial vijay tv

மறுபக்கத்தில் மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு வர அங்கு சத்தியாவின் நடவடிக்கை சரியில்ல அவன் இப்போ சிகரெட் பிடிக்கிறான். அடிக்கடி பிரண்ட்ஸோட வெளியே போயிருதான். அவன் படிக்கப் போறானா இல்லையான்னு தெரியலை என்று சொல்ல அதற்கு மீனா இத்தனைக்கும் காரணம் சிட்டி தான் அவன் கூட சேர்ந்த பிறகு தான் சத்யா எப்படி கெட்டு போயிட்டான் என்று நான் அவனை பாத்துட்டு வரேன் என்று கோபமாக வீட்டை விட்டு கிளம்பி போகிறார்.

siragadikka aasai serial vijay tv

மறுபக்கத்தில் ரோகிணியிடம் பணம் கேட்டு மிரட்டும் பழைய பிஏ தினேஷ் வெயிட் பண்ணிக் கொண்டிருக்க அங்கு வித்யாவோடு வந்த ரோகிணி இத்தனை நாள் என்னுடைய மகனுக்காக தான் உன்ன பொறுத்துட்டு இருந்தேன். ஆனால் அவனை வைத்து நீ பிளாக்மெயில் பண்ற அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நான் நானாவே இருக்க மாட்டேன் என்று மிரட்ட, எனக்கு என் புது பொண்டாட்டிக்கு பணம் கொடுக்கணும் நான் வேலைக்கு போயிட்டு வரேன்னு சொல்லி இருக்கிறேன்.

அதனால் எனக்கு பணம் வேணும் நீ தான் பெரிய பிசினஸ் மேனோட பொண்டாட்டியே நான் கேட்கும் போதெல்லாம் பணம் தரணும் என்று மிரட்டிக் கொண்டு இருக்க, நீ பணம் தரலனா நான் உன் வீட்டில் வந்து வில்லுப்பாட்டு போல எல்லா விஷயத்தையும் சொல்லி விடுவேன் என்று பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார். ரோகிணி தினேஷுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் மீனா சிட்டியை பார்க்க வந்து சிட்டி இடம் உன்னால் தான் என்னுடைய தம்பி கெட்டுப் போயிட்டே இருக்கிறான் என்று சொல்ல சிட்டி அப்போ உன் தம்பி கெட்டுப் போகாமல் இருக்கனும்னா பிரிட்ஜில் தூக்கி வை என்று நக்கல் செய்து கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் சிட்டியை மீனா அடிக்க போக சிட்டி மீனாவை பிடித்து கீழே தள்ளி விடுகிறார். அந்த நேரத்தில் அங்கு முத்து வந்து சிட்டியை போட்டு அடித்து விடுகிறார்.

siragadikka aasai serial vijay tv

பிறகு மீனா முத்துவை அங்கிருந்து வெளியே கூப்பிட்டு செல்லும்போது மீனா தலையில் இருந்து ரத்தம் வருவதை பார்த்ததும் முத்து சிட்டி அடிச்சானா? என்று கேட்டு சிட்டியின் கையை உடைத்து விடுகிறார். பிறகு முத்து மீனாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்து சேர்த்திருக்கிறார். அப்போது சின்னதா தான் அடிபட்டு இருக்கிறது என்று மீனாவுக்கு கட்டுப்போட்டு டாக்டர் கவனமாய் இருக்க சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது மீனாவின் அம்மா போன் செய்து பேசுகிறார். அதற்கு முத்து நல்லவேளை நீங்க என்கிட்ட மீனா சிட்டிய பார்க்க போறத பற்றி சொன்னீங்க. அங்க மீனாக்கு சின்னதா அடிபட்டு இருக்கு. ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்திருக்கிறேன் என்று சொன்னதும் மீனாவின் அம்மா எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டு நாங்க வரோம் என்று அடம் பிடிக்கிறார். அந்த நேரத்தில் முத்துவிற்கு அவருடைய போன் அடிக்கிறது. இப்படியாக இன்றை எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+