சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி விஜயாவிடம் போட்டுக் கொடுத்த பிஏ..அதிர்ச்சியில் மனோஜ்.. மீனா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோமாவில் இருந்து கண் விழித்த ரோகினியின் பிஏ விஜயாவுக்கு போன் செய்து ரோகிணியின் அப்பாவிற்கு உடம்பு சரி இல்லை என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதே நேரத்தில் ரோகிணி மனோஜ் வேலை செய்யும் இடத்திற்கு போய் மனோஜை தேட அவர் பார்க்கில் இருந்து கொண்டு ரோகினி இடம் ஏமாற்றுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் மனோஜ் நான்காயிரம் ரூபாய் பணம் குறைந்ததற்கான விளக்கத்தை சொன்னதை கேட்டு முத்து திட்ட, அதற்கு மனோஜ் நான் அந்த 4000 ரூபாயை கொடுத்து விடுதேன் என்று அலுத்து கொண்டு பேசுகிறார். அதற்கு முத்து நீ தான் கொடுக்கணும் என்னமோ உன் பணத்தை எடுத்துக் கொடுக்கிற மாதிரி சொல்ற என்று அவமானப்படுத்த, அதனால் கோபமான ரோகினி ஸ்டாப் இட் என்று சத்தம் போட அதற்கு முத்து நான் என்ன வண்டியா ஓட்டுறேன் நிறுத்த சொல்றீங்க என்று நக்கல் அடிக்கிறார்.

பிறகு ரோகிணி அவர் அவருடைய அப்பா காசை எடுத்தாரு. அதை எதுக்கு நீங்க கேக்குறீங்க? இந்த வீட்ல எல்லாமே உங்களை கேட்டு தான் செய்யணுமா? நீங்க தான் எல்லாத்துக்கும் செலவு பண்றீங்களா? என்று கேள்வி கேட்க, அதற்கு ஆமாம் அவர்தான் மாமாவுக்கு அடுத்ததாக எல்லாத்துக்கும் பணம் கொடுக்கிறார் என்று மீனா சொல்கிறார். உடனே உங்களுக்கு என்ன இப்ப பணம் தானே முக்கியம் என்று ரூமிற்கு சென்று தன்னுடைய பேக்கில் இருந்து 4000 ரூபாயை எடுத்து வந்து முத்துவிடம் கொடுக்கிறார்.
பிறகு அண்ணாமலையிடம் நான் அடுத்த மாசத்தில் இருந்து வீட்டு செலவுக்கு எங்களுடைய ஷேரை தந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு மீனாவை பார்த்து அதைவிட அதிகமாக கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல, அதற்கு மீனா அதெல்லாம் வேண்டாம் உங்க பங்கு கொடுத்தா மட்டும் போதும் என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு ஏங்க அந்த கரண்ட் பில்லு என்று மீனா கேட்க அதற்கு முத்து நான் நேத்தே கொடுத்துட்டேன் என்று சொல்லி, இந்த வீட்டிற்கு வெளிச்சம் கொடுத்து கொண்டிருப்பது நான்தான் என்று முத்து நக்கல் செய்கிறார்.

பிறகு முத்து வெளியே போய்விட்டு வீட்டிற்கு வரும்போது மீனா அறையில் இருக்கிறார். அப்போது என்னை எங்கேயாவது கூட்டிட்டு போங்க என்று சொல்ல, அதற்கு முத்து கையில் தேன் எடுத்துட்டு போய் மொட்டை மாடியில் நின்று நிலவ பாரு அதுதான் தேன்நிலவு என்று கிண்டல் செய்ய, மீனா முத்துவை அடிக்கிறார். அதற்கு நீ இப்போ என்னை அதிகமாக அடிக்கிறா, நான் திருப்பி அடித்து விடுவேன் என்று சொல்ல அடிப்பீங்களா? என்று மீனா மிரட்டியபடி கேள்வி கேட்கிறார்.
அடுத்ததாக மனோஜ் ஒரு பார்க்கில் தூங்கிக் முழித்து பிறகு தூங்குவதற்காக ரெடியாகி கொண்டிருக்கும்போது அப்போது ரோகினி போன் செய்து நான் உங்க ஷோரூம் வெளியே தான் இருக்கேன். உங்க கேபின் எங்க இருக்குன்னு சொல்லுங்க என்று கேட்க, அதற்கு மனோஜ் அதைக் கேட்டு அதிர்ச்சியாகி நான் வெளியே இருக்கேன் என்று சமாளிக்கிறார். அதை தொடர்ந்து கோமாவில் இருந்த பிஏ சரியானதும் விஜயாவுக்கு போன் செய்து நான் மலேசியாவில் இருந்து... என்று சொன்னதும் அதைத் தொடர்ந்து பேச விடாமல் சொல்லுங்க சம்மந்தி என்று விஜயா சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது பிஏ நான் உங்க சம்மந்தி இல்ல, நான் ரோகிணியோட தாய் மாமா பேசுறேன். அவங்க அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ரோகிணியை பாக்கணும்னு ஆசைப்படுகிறார். அவ கிட்ட சொல்லிருங்க என்று சொல்லி போனை வைத்து விடுகிறார். இதைப்பற்றி விஜயா ரோகினிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications