சிறகடிக்க ஆசை: முத்துவிடம் நேருக்கு நேர் சவால் விட்ட ரோகிணி.. அண்ணாமலைக்கு வந்த சந்தேகம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து மீனாவிடம் ரோகிணி நேருக்கு நேராக சவால் விடுகிறார். உங்களுக்கு கெட்ட காலம் வந்துவிட்டது என்று ரோகிணி சொல்லி இருக்கும் நிலையில் அண்ணாமலை தன்னுடைய சந்தேகத்தை எழுப்புகிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சிட்டி ரோகிணியிடம் உங்க மாமியார் நகையை திருடியது யாருன்னு தெரியுமா? அந்த சத்யா தான். அந்த விஷயம் முத்துவுக்கு தெரியும். அதனால்தான் சத்யா கையை உடைத்தான். முத்துவின் செல்போனில் ஒரு வீடியோ இருக்கு. அந்த வீடியோவை நீங்கள் சோசியல் மீடியாவில் அப்லோட் செய்யணும் என்று சொல்ல அதற்கு ரோகிணி அதனால் உங்களுக்கு என்ன பயன் என்று கேட்கிறார்.

உங்களை மிரட்டறவன் உங்க திசையில் தலை வைத்துக் கூட படுக்க மாட்டான் அவனை என்ன பண்ணனுமோ அதை நான் பண்ணுறேன். எனக்காக நீங்க இதை செய்யணும் உங்களுக்கும் உங்களை மிரட்டுறவங்களுக்கும் என்ன பிரச்சனை என்று நான் கேட்கல அது போல எனக்கும் நீங்க எதுவும் கேட்காமல் செய்யணும் என்று சொல்ல அதற்கு ரோகிணி சரியென்று சொல்லிவிடுகிறார்.
இதைத்தொடர்ந்து வீட்டிற்கு ரவியும் ஸ்ருதியும் வருகின்றனர். அப்போது ஹோட்டலில் என்னை ரொம்ப நேரம் காக்க வச்சுட்டே என்று ஸ்ருதி சண்டை போட்டுக் கொண்டே வர, ரவி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். வீட்டிற்குள் வந்ததும் மீனா தலையில் அடிபட்டு இருப்பதை பார்த்து என்ன நடந்தது என்று விசாரிக்க முத்து வாழைப்பழம் தோலை மிதித்து கீழே விழுந்துவிட்டேன் என்று சொல்ல, அங்கு வந்து அண்ணாமலை என்கிட்ட பைக்கில் இருந்து விழுந்ததாக தானே சொன்ன என்ன நடந்தது உண்மையை சொல்லு என்று கேட்கிறார்.
மீனா என்ன சொல்வது என்று தெரியாமல் பைக்கில் சென்று திரும்பும்போது காலில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்ததாக சொல்கிறார். அந்த நேரத்தில் விஜயா வரவும் ஸ்ருதியும் மீனாவும் சண்டை போடுவது போல நடிக்கிறார்கள் அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்த ரோகிணி மீனாவை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்க இவளுக்கு லேசா தான் அடிபட்டு இருக்கு ஆனா இவ தான் பெரிய கட்டு போட்டுட்டு நடிச்சிட்டு இருக்கிறா என்று விஜயா வழக்கம் போல திட்டுகிறார்.
நேற்று மீனாவிடம் பாசமாக பேசிய விஜயா இன்று மீண்டும் வில்வத்தனமாக பேசுகிறார். அப்போது ரோகிணி நான் கோவிலுக்கு போயிட்டு வருகிறேன் அங்கு ஒரு சாமியாரை பார்த்து அவர் சொன்னது போலவே மீனாவுக்கு நடந்திருக்கிறது என்று சொல்ல, என்ன சொன்னாரு என்று விஜயா கேட்க உங்களுக்கு நல்ல நேரமா இருக்கு என்று சொன்னாரு என்று சொன்னதும் விஜயா சந்தோஷத்தில் ஆமா நான் டான்ஸ் கிளாஸ் ஆரம்பித்து எனக்கு மாணவர்கள் வந்ததுமே நல்ல நேரம் தொடங்கிடுச்சு.
என் மகனையே அதை செய்ய விட மாட்டேன்.. ஊரார் மகனை இதை செய்ய சொல்லுவேனா? அரவிந்த்சாமி நச் வார்த்தை
எனக்கு ரெண்டு மாணவர்கள் கிடைச்சிருக்காங்க. அவங்க வந்த பிறகுதான் மற்ற மாணவர்கள் கிடைச்சாங்க. அவங்களால தான் எனக்கு பெருமை உண்டாகப் போகிறது என்று அந்த இரண்டு காதலர்கள் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து பேசிய ரோகிணி நான் உங்களுக்கு சொல்லும்போது கூட நம்பல ஆனா முத்து மீனாவிற்கு சொன்னதை வைத்து நம்புகிறேன் அவர் சொன்னது உண்மை என்று என சொல்ல என்ன சொன்னார் என்று விஜயா மீண்டும் கேட்கிறார்.
அப்போது மீனாவிற்கும், முத்துவிற்கும் கெட்ட காலம் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்று சொன்னார். அது போலவே மீனா தலையில் அடிபட்டு இருக்கிறது தலையில் அடிபடுவது நல்லது கிடையாது என்று சொல்ல முத்து காக்கா அங்க அக்கால போ என்று ரோகிணியை விரட்ட ரோகிணி அந்த காக்காவை கூடிய சீக்கிரமே வீட்டை விட்டு வெளியேற்றி விடலாம் என்று சவால் விடுவது போல பேசிக்கொண்டு போகிறார்.
அடுத்த கட்டத்தில் இரவில் ரவியும் ஸ்ருதியும் பேசிக் கொண்டிருக்கும்போது ரவியின் பாஸ் மகள் போன் செய்து டிஷ் பற்றி கேட்க அதற்கு ரவியும் பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து ஸ்ருதி கோபப்படுகிறார். பிறகு மீனா காலையில் எழுந்து வேலைகள் செய்து கொண்டிருக்கிற முத்து ஏன் நீ வேலை செஞ்ச என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தனக்கு ஒரு ஆர்டர் வந்து இருப்பதாக அதை அதற்கு டெலிவரி செய்ய போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது முத்து போகக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஸ்ருதி எனக்கு ஒரு காபி வேண்டும் என்று வர பிறகு இவர்களுடைய வாக்குவாதத்தை வைத்து மீனாவிற்கு நல்ல கணவர் கிடைத்திருக்கிறார் இப்படித்தான் மனைவி மீது பாசமாக இருக்கணும் என்று முத்துவை பாராட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா சந்தோஷப்படுகிறார். ஆனாலும் நான் டெலிவரி செய்ய போகணும் என்று சொல்ல முத்து நானும் உன் கூட வருகிறேன் எனக்கு உனக்கு பைக் ஓட்டுவதற்கு சம்பளம் கொடுத்து விடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications