சிறகடிக்க ஆசை: முத்து,மீனாவை கொலை செய்ய வந்த சிட்டி.. என்ன இப்படி சொதப்பி வச்சிருக்காங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் ஆனா எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முத்து மற்றும் மீனாவை கொலை செய்வதற்காக சிட்டி காரில் துரத்திக் கொண்டிருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி தான் ஒவ்வொரு முறையும் இந்த சீரியலில் மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார். தப்புகள் செய்து கொண்டிருக்கும் ரோகிணி கடைசி நேரத்தில் அழுது நாடகம் போட்டு விட அதை மொத்த குடும்பமும் நம்பி விடுகிறது.

television siragadikka aasai serial vijay tv

ஆனால் மீனாவுக்கும் முத்துவுக்கும் சந்தேகம் இருந்தாலும் ரோகிணி பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்காமல் இருக்கிறார்கள். அதே நேரத்தில் தப்பு செய்தாங்களோ இல்லையோ கடைசியாக முத்துவும் மீனாவும் தான் மாட்டி விடுகிறார்கள். குடும்பத்திற்கு நல்லது செய்கிறேன், தியாகியாக இருக்கிறேன் என்று மீனா ஒவ்வொரு முறையும் அவமானங்களை தாங்கிக் கொண்டிருக்கிறார்.

இது பார்க்கும் ரசிகர்களை விரக்தி அடைய செய்திருக்கிறது. இந்த நிலையில் இன்று கூட செப்டம்பர் 20ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதி ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் நேற்று நடந்த பாதி காட்சிகளை காட்டி இருக்கிறார்கள். அதாவது சத்யா சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்றவை அம்மா மூலமாக மீனாவிற்கு தெரிய வந்தது.

television siragadikka aasai serial vijay tv

இத்தனைக்கும் காரணம் சிட்டி தான் என்று சிட்டியை திட்ட போகிறேன் என்று சிட்டி இருக்கும் இடத்திற்கு மீனா தனியாகபோய் உன்னால்தான் என்னுடைய தம்பி கெட்டுப் போறான் என்று சொல்ல, அதற்கு சிட்டி நக்கல் செய்ததால் கோபத்தில் மீனா சிட்டியை அடிக்க போகும்போது சிட்டி பிடித்து கீழே தள்ளி விடுவர். இதனால் மீனாவின் தலையில் அடிபட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் மீனா தனியாக சிட்டியை பார்க்க போயிருக்கிறார் என்று முத்துவுக்கு மீனாவின் அம்மா போன் போட்டு சொல்லியதால் முத்து அங்கு சரியாக ஹீரோவாக என்ட்ரி கொடுத்து விடுகிறார்.

மீனா தலையில் அடிபட்டு இருப்பதை பார்த்து சிட்டியை போட்டு அடித்து அவருடைய கையையும் உடைத்து விடுகிறார். இந்த காட்சிகள் இன்று வெளியான ப்ரோமோவில் ரிப்பீட் ஆகி இருக்கிறது. அதோடு இன்றைய எபிசோடில் முத்து மீனாவிற்கு பூ கொடுக்க வேண்டிய ஆர்டர் வந்திருக்கும் நிலையில் முத்து நானே உன்னை கொண்டு விடுகிறேன் நீ உடம்பு சரியில்லாத நேரத்தில் தனியாக போக வேண்டாம் என்று பைக்கில் கூட்டிக்கொண்டு வருகிறார்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது அந்தப் பக்கமாக காரில் வந்து சிட்டி அவருடைய அடியாள்களிடம் என்னை அவமானப்படுத்திய மீனாவும், முத்துவும் உயிரோட இருக்கக் கூடாது என்று அவர்கள் மீது காரில் மோத வருகிறார். இப்படியாக ப்ரோமோவில் காட்சிகள் இருக்கிறது. இதில் முத்துக்கும் மீனாவுக்கும் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

television siragadikka aasai serial vijay tv

காரணம் சத்யா விஜயாவின் நகைகளை திருடிய வீடியோ முத்து செல்போனில் இருக்கும் நிலையில் அந்த வீடியோவை சிட்டி, ரோகினி விட்டு இணையத்தில் அப்லோடு செய்ய சொல்லி இருக்கிறார். இதனால் அதை வைத்து தான் மீனா முத்துவிற்கு பெரிய பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரோகிணி நான் கோயிலுக்கு போனேன். அங்கு சாமியார் முத்துக்கும், மீனாவுக்கும் நேரம் சரியில்லை, அவர்களுக்கு பிரச்சனைகள் வரும் என்று சொன்னார் என்று பேசியிருக்கிறார்.

ரோகிணியால் தான் பிரச்சனையே வரப்போகிறது என்பது முத்துவிற்கு மீனாவிற்கும் தெரியாமல் இருக்கிறார்கள். இனி அடுத்த வாரத்தில் ரோகிணியால் முத்துக்கும் மீனாவிற்கும் பிரச்சனைகள் வரும் ஆனால் எந்த தப்பு செஞ்சாலும் வழக்கம்போல ரோகிணி தப்பித்து விடுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+